Published: 15 மார் 2018

தங்கம் – அக்னியின் வித்து

Eternal light of metal gold

ஒருமுறை நெருப்புக் கடவுளான அக்னி, தண்ணீரின் மீது தன் கண்களை திசைத் திருப்பினார். “நான் இவளுடன் இணையலாமா” என்று நினைத்தார். அவர் நெருங்கி வந்து நீருடன் சங்கமித்தார். அப்போது அவருடைய விந்து தங்கமாக மாறியது. அக்னியின் விந்தணுவாக இருப்பதால் தங்கம் நெருப்பை போல பிரகாசமாக மின்னுகிறது! அவர் தன்னைத் தானே தண்ணீரில் ஊற்றிக் கொண்டதால் தங்கம் தண்ணீரில் கிடைக்கிறது. ஒருவர் தன்னைத் தானே அதில் தூய்மையாக்கிக் கொள்ள முடியாத காரணங்களில் இதுவும் ஒன்றாகும். அதைக் கொண்டு வேறு எதுவும் செய்ய முடியாது. அவர் தியாக குருவாக ஒரு தெய்வீக மாதிரியாக செயல்படுகிறார். மனிதர்களுக்கும் கடவுள்களுக்கும் இடையே காணிக்கைகளை சுமந்து செல்லும் தூதுவராகவும் மேலும் கடவுளரை வேள்விகளுக்கு வரவழைப்பவருமாக இருக்கிறார். அக்னியை மகிழ்விக்கும் போது கடவுளர்கள் தாராளமாக வரங்களைத் தருகின்றனர்.

அக்னி ஒரு இந்து தெய்வமாவார். இவர் வேதக் கடவுள்களில் முக்கியமானவர். உலகப் பொருட்களில் அவர் மிகவும் தூய்மையானவர். ஏனெனில், இது இருளை, தீமையை மற்றும் துரதிர்ஷ்டத்தை எரிக்கிறது. அவரை தினமும் மீண்டும் ஏற்றுவதால் அவர் என்றும் இளமையானவர், பிரகாசமானவர் மற்றும் புத்திசாலி. அவர் மரணமில்லா தன்மை, வெளிச்சம் மற்றும் நெருப்பு ஆகியவற்றின் புனிதச் சின்னமாவார். மரணமில்லா தன்மை மற்றும் வாழ்க்கையின் அடையாளச் சின்னம் என்கிற இரட்டை கருத்துக்களில் அக்னி வேதச் சடங்குகளின் பயிர்செய்யும், சமைத்துண்ணும் மற்றும் கலாசார அம்சங்களைப் பிரதிபலிக்கிறது.

வரலாறு, வேதச் சடங்குகள் மற்றும் சுக்ல யஜூர் வேதத்துடன் தொடர்புடைய புராணங்களைப் பற்றி விவரிக்கும் உரைநடைப் புத்தகமான சதாப்த பிராமணாவில் தங்கத்தைப் பறறி அக்னியின் விந்து என்று பல முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த உரையில் தண்ணீர் நெருப்பின் திருமணத்தைப் பற்றிய விசித்திரமான ரசவாத குறிப்புரைகளைக் கொண்ட ஒரு பத்தி இடம் பெற்றிருக்கிறது. ஆச்சரியகரமாக, ரசவாதம் பிறப்பதற்கு முன்பே அரை நூற்றாண்டுக்கு முன்பே இது எழுதப்பட்டுள்ளது.

சதாப்த பிராமணாவின் மற்றொரு பதிப்பில் ஒரு கதை, இந்திரன் த்வஷ்ட்ரியின் மகன் விஸ்வபுராவை கொன்று விட்டதாகவும் அதனால் கோபம் கொண்ட முனிவர் இந்திரனை துண்டுகளாக வெடித்து சிதறச் செய்தார் என்றும் “அவருடைய உருவத்திலிருந்து விந்து வழிந்தோடி தங்கமாக மாறியது” என்றும் எனவே சந்தேகமில்லாமல் தங்கம் என்னும் இந்த உலோகம் கடவுளின் வடிவம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தங்கத்தைக் கொண்டு அவர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள். தங்கம் மற்றும் நெருப்பு இரண்டும் ஒளி மற்றும் மரணமில்லா நிலையைக் குறிக்கின்றன. இந்த உரை மேற்கொண்டு வேள்வி நெருப்பின் போது விந்துவின் மந்திர சக்தியை பற்றிப் பேசுகிறது.

முதல் சோம பானத்தை வழங்கியவுடன் வேள்வி நெருப்பு சென்று விடுகிறது என்றும் பலி கொடுப்பவர் ஒரு கைப்பிடி மரக்கட்டையை தீயில் எறியலாம் அல்லது அவரது இதயம் கவலையில் இருந்தால் சந்தேகமில்லாமல் அக்னியின் விந்துவான தங்கத்தை படையலாக அளிக்கலாம்: ஏனென்றால் தந்தையும் மகனும் ஒன்றே ஆவர்.