Gold exchange traded funds

தங்கம் ப.ப.வ.நிதிகள்

ஒரு தங்க ப.ப.வ.நிதி என்பது ஒரு பரிமாற்ற-வர்த்தக நிதி (ப.ப.வ.நிதி) ஆகும்.

கள் ஒரு நிறுவனத்தின் பங்கு போலவே இந்திய தேசிய பங்கு சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை நிறுவனம் (BSE) ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. தங்க ஈ.டி.எப்.களை வாங்குகிறீர்கள் என்றால் தங்கத்தை ஒரு எலக்ட்ரானிக் வடிவத்தில் வாங்குகிறீர்கள் என்று அர்த்தமாகும். நீங்கள் பங்குகளில் வர்த்தகம் செய்வது போலவே தங்க ஈ.டி.எப்.களையும் வாங்கலாம் விற்கலாம். நீங்கள் உண்மையில் தங்க ஈ.டி.எப்-ஐ மீட்கும் போது நீங்கள் தங்கத்தை பொருளாக பெறாமல் அதற்கு சமமான பணமாக பெறுவீர்கள்.

தங்க ஈ.டி.எப்-கள் வர்த்தகம் பொருளற்ற கணக்கில் (டிமேட்) மற்றும் ஒரு புரோக்கர் மூலமாக நடக்கிறது, இது தங்கத்தை எலக்ட்ரானிக் முறையில் முதலீடு செய்வதற்கான மிகவும் வசதியான ஒரு வழியாகும்.

இது எவ்வாறு செயல்படுகிறது?

  • தூய்மை மற்றும் விலை:
    இந்த நிதிகள் 99.5% தூய தங்கமாக குறிப்பிடப்படுவதனால் தங்கத்தின் தூய்மையை உறுதிப்படுத்துவதில் எந்தக் கவலையும் இல்லை. தங்க ஈ.டி.எப் விலைகள் என்.எஸ்.இ. (NSE) இணையதளத்தில் பட்டியலிடப்படுகின்றன மற்றும் அதை எப்போது வேண்டுமானாலும் புரோக்கர் மூலமாக வாங்கலாம் அல்லது விற்கலாம். நகைகளைப் போலல்லாமல், தங்க ஈ.டி.எப்.களை இந்தியா முழுவதும் ஒரே விலையில் வாங்கலாம் விற்கலாம் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.  
  • எங்கே வாங்க வேண்டும்:  
    தங்க ஈ.டி.எப்.களை பங்குச் சந்தையில் டிமாட் கணக்கு மற்றும் வர்த்தக கணக்கை பயன்படுத்தி புரோக்கர் மூலமாக வாங்கலாம். நீங்கள் இந்த ஈ.டி.எப்.களை வாங்கும் போதும் விற்கும் போதும் தரகு கட்டணம் மற்றும் சிறு நிதி நிர்வாகக் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. 
  • ஏதேனும் ஆபத்துக்கள் இருக்கின்றனவா?
    தங்கம் ஈ.டி.எப்.கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுவதனால், அவை முதலீடு செய்வதற்கும் உங்கள் முதலீட்டு பிரிவுக்கு விரும்பத்தக்க மாறுபாட்டை உருவாக்க மிகவும் பாதுகாப்பான கருவியாக இருக்கின்றன. தங்கத்தின் விலை உயரும் போது முதலீட்டாளர் ஆபத்துக்குள்ளாகிறார், ஆனால் தங்க ஈ.டி.எப் அந்த ஆபத்தைக் குறைக்க உதவும். இந்த செயல்பாடு இந்திய பாதுகாப்பு பங்குச் சந்தை குழுவால் (SEBI) கண்காணிக்கப்படுகிறது, இது தங்க முதலீடுகள் தொடர்பான ஆபத்தை அதிகமாக குறைக்கிறது. அரசாங்க நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள் வாங்கிய தங்கத்தை வழக்கமாக ஆடிட் செய்கின்றன.

இது எனக்குத் தானா?
நீங்கள் சேமிப்பு பிரச்சனை காரணமாக பொருட் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பாத நபராக இருந்தால் மற்றும் வரி நன்மைகள் பெற விரும்பினால், இது உங்களுக்கான திட்டமாகும். மேலும், ஒரு பட்டனை கிளிக் செய்து உங்கள் ஈ.டி.எப்.களை வாங்குவது விற்பது மிக எளிதாகும் .

தங்க ஈ.டி.எப்.கள் ஏன் பெரிய முதலீட்டு கருவிகளா இருக்கின்றன என்பதை அறிவதில் இன்னும் ஆர்வமாக இருக்கிறீர்களா?

  • நீங்கள் 1 கிராம் என்ற அளவிற்கு குறைவான அளவில் வாங்கலாம்.
  • பிரீமியம் அல்லது குறியீட்டுக் கட்டணம் எதுவுமில்லை, எனவே உங்கள் முதலீடு கணிசமானதாக இருந்தால் பணத்தை சேமிக்கலாம்.
  • தங்கத்தின் தூய்மைக்கு உத்தரவாதமளிக்கப்படுகிறது மற்றும் ஒவ்வொரு அலகும் மிகவும் தூய்மையான பொருட் தங்கமாக இருக்கின்றன.
  • வெளிப்படையான மற்றும் நிஜ நேர தங்கத்தின் விலை.
  • நீங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடலாம் மற்றும் வர்த்தகம் செய்யலாம்.
  • நீண்டகால மூலதன ஆதாயமாக கருதுவதே அவற்றிலிருந்து சம்பாதித்த வருமானமாக தங்கத்தை வைத்திருப்பதற்கான ஒரு வரிச் சலுகை பெறும் வழியாகும். சொத்து வரி, பாதுகாப்புப் பரிவர்த்தனை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றம் விற்பனை வரி போன்ற வரிகள் எதுவுமில்லாமல் கூடுதல் வரி சலுகைகளையும் நீங்கள் பெறலாம்.
  • பொருளற்ற பங்குகள் திருடு போகும் என்ற எந்த பயமும் இல்லாததனால் அது பாதுகாப்பானதாகும் மேலும் நீங்கள் லாக்கர் கட்டணங்களையும் சேமிக்கலாம்.
  • ஈ.டி.எப்.கள் கடன்களுக்கான பிணையமாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
  • தங்க ஈ.டி.எப்.களில் நுழைவு மற்றும் வெளியேறுதல் பிரச்சனை எதுவுமில்லை.

நான் அதை எவ்வாறு மீட்கலாம்?
தங்க ஈ.டி.எப்.களை பங்குச் சந்தையில் டிமாட் கணக்கு மற்றும் வர்த்தக கணக்கை பயன்படுத்தி புரோக்கர் மூலமாக வாங்கலாம். பொருட் தங்கம அடங்கிய ஒரு ஈ.டி.எப் இல் நீங்கள் முதலீடு செய்தாலும், பொருட் தங்கத்திற்கு செல்வதற்குப் பதிலாக தங்கத்தின் விலையிலிருந்து பயனடையும் ஒரு கருவியாக ஈ.டி.எப்.கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, நீங்கள் அதை பணமாக்கும் போது, ஈ.டி.எப்.கள் மூலமாக நீங்கள் வைத்திருக்கிற தங்கத்தின் உள்நாட்டு சந்தையின் விலைக்கு சமமான ரூபாய்கள் உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் ஈ.டி.எப். களில் 1 கிலோ தங்கத்திற்கு சமமான அல்லது அதற்கு அதிகமான தங்கத்தை வைத்திருந்தால், சொத்து மேலாண்மை நிறுவனங்கள் பொருட் தங்க வடிவிலுள்ள உங்கள் ஈ.டி.எப்-ஐ நீங்கள் மீட்க அனுமதிக்கலாம்.