தனியுரிமை கொள்கை

தனியுரிமை

தி வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் (இந்தியா) ப்ரைவேட் லிமிடட்("WGC") தனது இணையதளத்திற்கு வருகை தருபவர்கள் அளிக்கும் தனிப்பட்ட தகவல்களின் இரகசியத்தை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறது.எங்களிடம் வருகை தருபவர்களின் தனியுரிமையை காப்பதற்கு அவர்களுக்குள்ள உரிமை மீது எங்களுக்குள்ள அடிப்படை மரியாதை காரணமாகவும்,அவர்களுடனான எங்களது உறவு தொடர வழிகாட்டவும், கீழ் கண்ட கொள்கைசார்ந்த வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறோம்.

தி வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலால் சேகரிக்கப்படும் தகவல்கள்

இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வ்ருபவர்களிடம் அவர்களின் பெயர், முகவரி,மின்னஞ்சல் முகவரி,போட்டிகள்,தேர்தல் போன்ற அவர்கள் பங்குகொள்ளும் சில நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை கணினியில் சிறு கோப்புகள்(cookies) மூலமாக சேகரித்து பயன்படுத்திக் கொள்ளுவோம்.வருகை தருபவர்கள் எங்களிடமிருந்து சேவைத்தளப் பக்கங்களை கேட்கும் பொழுது எங்கள் இணைய சேவை கணிப்பொறி தானாகவே வருகை தருபவர்களைப் பற்றிய இணைய விதிமுறை முகவரி(IP address) உள்ளிட்ட சில தகவல்களை சேகரிக்கிறது.வருகை தருபவர்கள் வேண்டும் பொழுது வலைத்தளத்தில் இயங்கும் கணிணிகள் இந்த முகவரிகளைப் பயன்படுத்தி அந்தப் பக்கங்களை வருகை தருபவர்களுக்கு அனுப்பும்.

இந்த இணையதளத்தை பயன்படுத்துவதற்காக உங்கள் தனிப்பட்ட தரவுகளை WGC க்கு தரும் பொழுது WGC மற்றும் அதன் கூட்டு நிறுவனங்களுக்கு பின் வருமாறு அனுமதியளிக்கிறீர்கள் என்பதை உண்ர்ந்திருப்பதை ஒப்புக்கொள்ளுகிறீர்கள்,(அ) உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்திக்கொள்ளுவதற்கு மற்றும் (ஆ) கீழே குறிப்பிட்ட வழிகளில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாமவரிடம் பகிர்ந்து கொள்ளுவதற்கு.

தகவல்களைப்பயன்படுத்திக் கொள்ளுதல்

வருகை தருபவர்கள் அளிக்கும் எந்த ஒரு தனிப்பட்ட தகவல்களையும் அவர்களின் அனுமதியின்றி மூன்றாமவருக்கு WGC அளிக்காது.WGC,வருகை தருபவர்களின் ஐபி முகவரிகளை அதன் சேவைத் தளத்திலுள்ள பிரச்சினைகளை கண்டறிய மற்றும் வலைத்தளத்தை நிர்வகிக்க உதவுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.எங்கள் வலைத்தளத்திற்கு வருகை தருபவர்களின் மக்கள் தொகைப் புள்ளிவிபரங்கள் பற்றிய விரிவான தகவல்களைப் பெறுவதற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும்.வருகை தருபவர்களை தனிப்பட்டு அடையாளம் காணக்கூடிய தகவல்கள் எதுவும் இதில் இருக்காது.பதிவின்போது வாடிக்கையாளர்கள் தரும் புள்ளி விபரங்களுடன் தளப்பயன்பாட்டுத் தரவுகளையும் இணைத்து இங்கு வ்ருகை தருபவர்களைப் பற்றி இத் தளத்தின் பொருளடக்கம் மற்றும் விளம்பரங்கள் குறித்த அவர்களின் விருப்பங்கள் பற்றிய சுய விவரக் குறிப்புகளை திரட்டாக அளிக்க நாங்கள் பயன்படுத்துவோம். எங்கள் சேவைகளைப் பற்றி விளம்பரதாரர்கள் சிறப்பாக தெரிந்து கொள்ள உதவும் பொருட்டு இந்த தகவல் தொகுப்புக்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுவோம். ஆனால் WGC க்கு வருகைதருபவர்களின் தனிப்பட்ட தகவல்களை விளம்பரதாரர்களுக்கு அளிப்பதில்லை.உங்கள் வலைத்தள உலாவிகள் சிறுகோப்புக்களை (cookies) தானாகவே ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கலாம்,ஆனால அவற்றை மறுத்து விலகிக்கொள்ள முடியும்.பல கணினி உலாவி கருவிப்பட்டையிலுள்ள உதவி பிரிவு புதிய சிறுகோப்புக்களை (cookies) ஏற்கப்படுவதை தவிர்க்க எவ்வாறு உலாவியை அமைத்துக்கொள்ளுவது,மற்றும் புதிதாக வரும் சிறுகோப்புக்களைப் பற்றிய தகவல்களை எவ்வாறு உங்களுக்கு அறிவிக்கச் செய்வது மற்றும் அதை நிரந்தரமாக எவ்வாறு தவிர்க்கலாம் என்பதையும் தெரிவிக்கும். நீங்கள் சிறுகோப்புக்களை தவிர்த்தால் வலைத்தளத் தகவல்களை தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு முறையும் நீங்கள் பதிவு செய்ய வேண்டியதிருக்கும்.

பதிவு செய்கையில் அல்லது மற்ற சந்தர்ப்பங்களில் அளிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி இந்த இணையதளம் மற்றும் அதன் விளம்பரதாரர்களால் வருகையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் வெளியீடுகள் பற்றி WGC அவ்வப்போது மின்னஞ்சல் செய்திக் கடிதம் மற்றும் விளம்பர மின்னஞ்சல்களை அனுப்பும்.அம்மாதிரி WGC அல்லது அதன் விளம்பரதாரர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களைப் பெறுவதற்கு தங்களுக்கு விருப்பமில்லை என்பதைத் தெரிவிக்க பதிவுப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ”புத்தாக்கம் எதுவும் எனக்கு அனுப்ப வேண்டாம்” என்ற கட்டத்தில் குறியிட்டோ அல்லது ஒவ்வொரு மின்னஞ்சலிலும் கொடுக்கப்பட்டுள்ள பதிவு நீக்க நடவடிக்கைகளுக்கான அறிவுறுத்தல்களை தொடர்வதன் மூலமோ வருகை தருவோர் நிறைவேற்றிக் கொள்ளலாம். விளம்பரதாரர்கள் எங்கள் மின்னஞ்சல்களில் இடம் பெறும் விளம்பரங்கள் மூலமாக மட்டுமே எங்கள் வருகையாளர்களை மூன்றாம் நபர்கள் தொடர்பு கொள்ளுவார்களே அல்லாமல் நேரடியாக மின்னஞ்சல் பட்டியல் மூலமாக வருகையாளர்களை தொடர்பு கொள்ள மாட்டார்கள், அல்லது வருகை தருபவர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களுக்கு உகந்த பொருளடக்கமுள்ள விளம்பரதாரர் மின்னஞ்சல் பட்டியலில் அவர்களை இடம்பெறச் செய்யச் சொன்னால் மட்டுமே அவர்களுக்கு அனுப்பப் படும்.

வருகை புரிபவர்களுக்கு உகந்த பொருளடக்கத்தை அளிப்பதற்கும் அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கும் இந்த இணையதளம் சிறு கோப்புக்களைப் பயன்படுத்துகிறது.இந்தத் தகவல்கள் வருகையாளர்களுக்குத் தேவையானவற்றை அளிக்கும் சேவையை இந்தத் தளத்தில் உருவாக்குவதில் எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. சிறு கோப்புகள் பற்றி அறிந்து கொள்ளவும் அதை எவ்வாறு நாங்கள் பயன்படுத்துகிறோம் என்ற அதிக தகவல்களுக்கு எங்கள் சிறுகோப்புக் கொள்கைகளைப் Cookies Policy. பாருங்கள்

WGC ஒரு வருகையாளரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடக்கூடும் சந்தர்ப்பங்களாவன: (i) சட்டத்தின் அடிப்படையில் தேவைப்படும் பொழுது (ii) WGC யின் உரிமையை பாதுகாக்க மற்றும்/அல்லது தற்காத்துக் கொள்ள மற்றும்/அல்லது (iii) எந்த ஒரு தனிமனிதரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக தேவைப்படும் என்று கருதுமானால் அவ்விதம் வெளியிடும்.கூடுதலாக WGC யின் இருப்புக்கள் மற்றும்/அல்லது சொத்துக்கள் முழுவதுமாக அல்லது கணிசமான ஒரு பகுதி வேறு ஒரு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ அந்த வாங்கிய நிறுவனத்திற்கு வருகையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை மாற்றித்தரும்.

வேண்டுதல்களுக்கு இணங்க ஒரு வருகையாளரை(அவர்கள்து தகவல்களுடன் சேர்த்து) தனது தரவுத்தளத்திலிருந்து WGC நீக்கம் செய்யும் அல்லது வேறு தொடர்ந்த மின்னஞ்சல் கடிதம் அல்லது தொடர்புகளிலிருந்து “விலகிக் கொள்ள” அனுமதிக்கும். இதற்கு வருகையாளர்கள் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் கொடுக்கப்பட்டுள்ள பதிவு நீக்க நடவடிக்கைகளுக்கான அறிவுறுத்தல்களை தொடர்வதன் மூலமோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளுவதன் மூலமோ நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.WGC குறிப்பாக சிறுவர்களிடமிருந்து எந்த ஒரு தகவலையும் பெற விழையவில்லை என்றாலும் எங்கள் இணையதளத்திலுள்ள சில பகுதிகளை சிறுவர்கள் காண விரும்பலாம்.நாங்கள் சிறுவர்களிடம் பெற்றோர்களிடம் கலந்து பேசி அவர்கள் அனுமதியுடன் எந்த ஒரு தகவல்களையும் எங்களுக்கு அளிக்கும் படி கேட்டுக் கொள்ளுகிறோம்.

தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு

தனிப்பட்ட தகவல்கள்,தொலைந்து போவது,தவறாகப் பயன்படுத்தப்படுவது மற்றும் அதிகாரம் வழங்கப்படாமல் அணுகுவது, வெளிப்படுத்துவது, மாற்றியமைப்பது, அல்லது அழிப்பது போன்றவைகளுக்கு எதிராக தொழில்நுட்பம் மற்றும் நிறுவன அமைப்பு சார்ந்து போதுமான அளவு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பராமரித்து வருகிறோம்.

தனிப்பட்ட தகவல்களைத் திருத்துதல்/புதுப்பித்தல்/ நீக்குதல்

உங்களின் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கு, திருத்துவதற்கு, புதுப்பிப்பதற்கு, தடைசெய்வதற்கு, நீக்குவதற்கு அல்லது செம்மையற்ற மற்றும்/அல்லது தவறான தகவல்களை அழிப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்க்கிறது. உங்களது தனிப்பட்ட தகவல்களில் மாற்றம் இருந்தால் எங்கள் தளத்திலுள்ள (பொருத்தமான இடங்களிலுள்ள) “உங்கள் தகவல்களைப் புதுப்பியுங்கள்” என்ற பகுதிக்குச் சென்று தேவைப்பட்டவாறு புதுப்பித்துக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் பதிவை எங்களை நீக்கச் சொல்ல விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பொதுவானவை

WGC,தான் வழங்கும் இணைப்பு இணைய தளங்கள் அல்லது அவர்களின் விளம்பரதாரர்களின் இணையத்தில் காணப்படும் பொருளடக்கம் அல்லது தனியுரிமைக் கொள்கைகளுக்கு எந்தப் பொறுப்பும் ஏற்காது.

WGC,தன்னிடம் அளிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைப்பதற்கு மற்றும் அவற்றை சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியோடு ஒரு பொறுப்பாக செயல்படும் மூன்றாமவருக்கு மட்டும் அளிப்பதில் தேவைப்படும் நியாயமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுகிறது.

நிர்வாகச் சட்டம்

இந்த இணையதளம் இந்தியச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அதன் அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.அதன் நிபந்தனைக்கெதிரான எந்த ஒரு சச்சரவும் மும்பை நீதிமன்ற அதிகார எல்லைகளுக்குட்பட்டது.”

எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

இந்த தனியுரிமைக் கொள்கைகள் அல்லது இந்த இணையதள நடவடிக்கைகள் சார்ந்த கேள்விகள் எதுவும் உங்களுக்கு இருப்பின் நீங்கள் எங்களை [email protected] என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளவோ அல்லது “தி வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் (இந்தியா) ப்ரைவேட் லிமிடட், பி-6/3, 6 ஆவது தளம், லக்ஷ்மி டவர்ஸ், சி-25 பந்த்ரா குர்லா காம்ப்லெக்ஸ், பந்த்ரா (கிழக்கு), மும்பை 400 051 இதியா ” என்ற முகவரிக்கு எழுதவோ செய்யலாம். WGCக்கு, விடுக்கப்படும் தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.காப்பிரைட் © 2019, வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் (இந்தியா) ப்ரைவேட் லிமிடட்.