பயன்பாட்டு விதிமுறைகள்

பயன்பாட்டு விதிமுறைகள்

பயன்பாட்டு விதிமுறைகளும் நிபந்தனைகளும்

இணையதளம் (www.mygoldguide.in) மற்றும் அதன் தொடர்புடைய மற்ற தளங்களும் (பொதுவாக இந்த “இணைய தளம்” என்று அழைக்கப்படும்) வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் (இந்தியா) பிரைவேட் லிமிடட் (“வேர்ல்ட் கோல்ட் கவுன்சில்” அல்லது WGC) ஆல் இயக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் பயன்படுத்தும் இந்த இணையதளம் அல்லது அதன் எந்த ஒரு பிரிவு அல்லது பக்கங்கள் இங்கு எங்கள் தனியுரிமைக் கொள்கை வகுத்த விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் (பொதுவாக இந்த “விதிமுறைகளும் நிபந்தனைகளும்” என்று அறியப்படும்)உட்பட்டது. இந்த இணையதளத்தை அணுகுவது மற்றும் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படித்து அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டீர்கள் என்றும் உங்கள் தனிப்பட்ட தரவுகளை எங்களது தனியுரிமைக் கொள்கைக்கு உகந்து செயல்படுத்த உங்கள் சம்மதத்தை அளித்துவிட்டீர்கள் என்றும் கருதப்படும்

தி வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் எந்தப் பிரிவையும், எந்த வழிகளிலும், எந்த சமயத்திலும், எந்த ஒரு அறிவிப்புமின்றி மாற்ற அல்லது திருத்தி அமைக்கும் உரிமையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அம்மாதிரியான மாற்றங்கள் இந்த இணையதளத்தில் வெளியிட்ட சமயம் முதலே நடைமுறைக்கு வரும். ஒவ்வொரு முறை இந்த இணைய தளத்தை அணுகும் போது அல்லது பயன்படுத்தும் போது இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்துத் தெரிந்து கொள்ளுவது உங்களின் பொறுப்பு

வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் (இந்தியா) பிரைவேட் லிமிடட் இந்தியாவின் நிறுவனங்கள் சட்டம்,1956 இன் கீழ் பதிவு செய்யப்பட்டு சிஐஎன்: யு74900MH2011FTC224567 என்ற பதிவு எண்ணுடன் பதிவு அலுவலகம் பி-6/3, 6ஆவது தளம், லக்ஷ்மி டவர்ஸ், சி25 பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ், பந்த்ரா(கிழக்கு) மும்பை 400 051 இந்தியா, என்ற முகவரியில் இயங்கும் ஒரு நிறுவனம்

இந்த இணையத்தின் பயன்பாடு

இந்த இணையதளமும் மற்றும் இதில் அளிக்கப்படும் தகவல்களும் மற்றவைகளும் பொதுவெளியில் வேண்டப்படும் தகவல்கள் மற்றும் கல்விப் பயன்பாடுகளுக்கு மட்டுமானது.

நீங்கள் உங்களது தனிப்பட்ட தேவைக்கு வணிக நோக்கமின்றி பயன்படுத்துவதற்காக இந்த இணையதளத்தில் கண்டுள்ளவற்றை சேமிக்கவும், காட்சிப்படுத்தவும், அல்லது தகவல்களை அச்சிடவும் அனுமதிக்கப் பட்டிருக்கிறீர்கள். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டே உங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, அதைத் தவிர்த்து அதற்கு மாறாக வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலிடமிருந்து எழுத்துமூலமாக முன் அனுமதி பெறாமல் மற்றும் வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலால் முறையான தரசான்று அளிக்கபடாதவர்களால் இதை மாற்றவோ, நகலெடுக்கவோ, விநியோகிக்கவோ, பரிமாற்றம் செய்யவோ, காட்சிப்படுத்தவோ,மீள் உருவாக்கம் செய்யவோ, வெளியிடவோ, உரிமம், கட்டமைப்பு, இணைப்புகள் ஆகியவகளை அளிக்கவோ மற்றும், இது தொடர்பான பணிகளை உருவாக்கவோ,இடமாற்றம் செய்யவோ அல்லது இந்த இணையதளத்தை அல்லது இதில் கண்டுள்ள தகவல்கள் மற்றும் மூலங்களை முழுமையாக அல்லது ஒரு பகுதியாக எந்த வகை பயன்பாட்டுக்கும் உட்படுத்தவோ கூடாது. அவ்வகையான ஒரு முன் அனுமதி வேண்டுவோர் தயவு செய்து [email protected]. என்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இந்த இணையதளத்தில் செய்யப்படும் மாற்றங்கள்

டபிள்யூஜிசி இந்த இணைய தளத்தில் காணப்படுபவற்றின் மீது எந்த ஒரு அறிவிப்புமின்றி கீழ் கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. (i) இந்த இணையதளத்திலுள்ள எந்த ஒரு தகவல்களையும் பக்கங்களையும் எந்த வழிகளிலும், எந்த சமயத்திலும், மாற்ற,கூடுதலாக சேர்க்க,திருத்தி அமைக்க அல்லது நீக்கும் உரிமை (ii) இந்த இணையதளத்தின் எந்த அம்சத்தையும் முழுமையாக அல்லது பகுதியாக எந்த நேரத்திலும் எந்த ஒரு காரணத்திற்காகவும், எல்லைகள் எதுவுமின்றி திட்டமிடப்பட்ட அல்லது திட்டமிடப்படாத பராமரிப்பு வேலைகள்,புதுப்பித்தல்,சீர் திருத்துதல் அல்லது சரி செய்தல் ஆகியவை உட்பட மற்றும்/அல்லது எந்த ஒரு அணுகலையும்இடை நிறுத்த, வரம்பெல்லை நிறுவ, கட்டுப்படுத்த உள்ள உரிமை.

டபிள்யூஜிசி அதன் தலைமை நிறுவனங்கள் அல்லது துணை நிறுவனங்கள் அல்லது அதற்கு சேவைகளை வழங்கும் எந்த ஒரு மூன்றாம் நபர் நிறுவனம் ஆகிய எவற்றுக்கும் எந்த ஒரு கடமையோ அல்லது பொறுப்போ கீழ் கண்டவற்றில் இல்லை: (i) இந்த இணையதளத்திலுள்ள எந்த ஒரு தகவலையும் மற்றவற்றையும் எந்த ஒரு காரணத்திற்காகவும் பராமரிக்க, புதுப்பிக்க, சரி செய்ய அல்லது நீக்குவது (ii) இந்த இணைய தளத்தில் காணப்படும் எந்த ஒரு தகவல் அல்லது மற்றவற்றை பற்றி காலாவதியான, முழுமைபெறாத, தவறான அல்லது பிழையான ஆலோசனை வழங்குவது அல்லது அடையாளப்படுத்துவது.

பொறுப்புத்துறப்புகளும் அதன் வரம்பெல்லைகளும்

உத்திரவாதம் மற்றும் கடப்பாடுகளின் வரம்பெல்லைகளின் பொறுப்புத்துறப்பு

டபிள்யூஜிசி இந்த இணையதளம் அல்லது இந்த இணையதளத்தில் கண்டுள்ள எந்த ஒரு தகவல் அல்லது மற்றவைகள் குறித்து வெளிப்படையாகவோ அல்லது உட்கிடக்கையுடன் கூடிய நிபந்தனைகள், பிரதிநிதித்துவப்படுத்துதல் அல்லது உத்திரவாதம் அல்லது மற்ற விதிமுறைகள் எதுவும் அளிக்கவில்லை. மேலும் இந்த இணையதளதிலுள்ளவைகள் அல்லது அணுகுவதில் காணப்படுபவைகள் குறித்து எந்த ஒரு வரம்பெல்லையும், நிபந்தனைகளும், பிரதிநிதித்துவம் அல்லது உத்திரவாதம் அல்லது எந்த ஒரு விதிமுறைகளற்ற நிலைப்பாட்டை பின் வருபவற்றில் கொண்டுள்ளது, விதிமீறல் அற்ற, திருப்திகரமான தரம், ஒரு குறிப்பிட்ட செயலுக்குரிய அல்லது பயன்பாட்டுக்குரிய திறன் அல்லது அதன் துல்லியம் அல்லது தகவல்கள் அல்லது மற்றவைகளின் முழுமை குறித்தவைகள். டபிள்யூஜிசி இதன் மூலம் தன்னை வெளிப்படையாக விலக்கிக் கொள்ளுவது, இந்த இணையதளத்தின் இருப்பு அல்லது இயக்கம் மற்றும் இதில் இருக்கக் கூடிய அல்லது அணுகக்கூடிய எந்த தகவல்கள் அல்லது மற்றவை சார்ந்து வெளிப்படையாக அல்லது உட்கிடக்கையான அனைத்து நிபந்தனைகள், பிரதிநிதித்துவம், உத்திரவாதம் மற்றும் வேறு எந்த ஒரு விதிமுறைகள், ஆகியவற்றிலிருந்து அது சட்டம் அனுமதிக்கக் கூடிய ஒன்று என்ற நிலை வரை. ,

டபிள்யூஜிசியோ அதன் தலைமை நிறுவனங்களோ அல்லது துணை நிறுவனங்களோ அல்லது அதன் எந்த ஒரு இயக்குனர், அதிகாரி, அல்லது பணியாளர்கள் ஆகியோருக்கு கீழ் கண்ட நடவடிக்கைகளால் உங்களுக்கு ஏற்படும் எந்த இழப்புக்கும், பொறுப்புக்கும் அல்லது சேதம், விலை அல்லது செலவு அகியவற்றுக்கு எந்த ஒரு கடமையோ அல்லது பொறுப்போ இல்லை (i) இந்த இணையதளத்தில் உங்கள் செயல்பாடு, மற்றும் இந்த இணையதளத்திலுள்ள அல்லது அணுகக்கூடிய தகவல்கள் சம்பந்தமானவை (ii) உங்களுக்கும் டபிள்யூஜி அல்லது அதன் தலைமை நிறுவனம் அல்லது துணை நிறுவனங்களுக்கிடையில் இந்த இணையதளம் வழியாக நடைபெறும் எந்த ஒரு பிழையான தொடர்பு அல்லது கருத்துப் பரிமாற்றம் (iii) இந்த இணையதளம் நச்சு நிரல்கள் ஏதுமின்றி இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருந்தாலும் ஒருவேளை மற்றவர்களுடைய கணிணி செயல்பாடு அல்லது வலைத்தளத்தை பாதிப்படையச்செய்யும் கணிணி நச்சு நிரல் அல்லது ஊறு விளைவிக்கும் கூறுகள் ஏதாகிலும் அனுப்பப் பட்டிருந்தால் (iv) இந்த இணையதளத்தின் மற்ற எந்த ஒரு செயல்பாடு சம்பந்தமாக அல்லது இந்த இணையதளத்தில் உங்கள் செயல்பாடு சம்பந்தமாக வரையெல்லை ஏதுமில்லாத வகையில் எந்த செயலிழப்பும், தாமதமும், இடையூறு அல்லது இடற்பாடுகளுக்கு (v) இந்த இணையதளத்தில் அமையப்பெற்ற அல்லது இதன் மூலமாக நடைபெறும் தகவல்கள் மற்றும் பக்கங்கள் அல்லது சேவை விநியோகங்கள், அல்லது இந்த இணையதளத்தில் அல்லது இதன் வழியாக நடைபெறும் எந்த ஒரு பரிமாற்றம் (vi) இந்த இணையதளத்தில் உங்கள் அணுகுதல் அல்லது பயன்பாடு சம்பந்தப்பட்ட எந்த ஒரு காரணம், அல்லது இந்த இணையத்தில் உள்ள எந்த ஒரு தகவல் அல்லது மற்றவை சார்ந்தவைகள். (vii) எந்த ஒரு அதிகாரமளிக்கப்படாத அணுகுதல், திருட்டு, இயக்குபவர் தவறுகள், வேலை நிறுத்தம், அல்லது பணியாளர்கள் பிரச்சினை அல்லது தடுக்க முடியாத வலுக்கட்டாயமான நிலை மற்றும் இந்தப்பக்கத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளை, தனது கட்டுப்பாட்டில் டபிள்யூஜிசி, அதன் எந்த ஒரு தலைமை நிறுவனம், அல்லது துணை நிறுவனங்கள், அல்லது இந்த இணையதளத்துக்கு சேவைகளை அளிக்கும் எந்த ஒரு மூன்றாம் நபர் நிறுவனம் போன்றவை வைத்திருக்கும் போதிலும் அம்மாதிரி இழப்பு, பொறுப்பு அல்லது சேதம் ஏற்பட்டாலும் கடப்பாடு இல்லை.

மேலே குறிப்பிட்டவைகளில் எந்த ஒரு வரையெல்லை இல்லாது எந்த சந்தர்ப்பத்திலும் டபிள்யூஜிசி அதன் தலைமை நிறுவனங்கள் அல்லது துணை நிறுவனங்கள் அல்லது அதன் எந்த ஒரு இயக்குனர், அதிகாரி, அல்லது பணியாளர்கள் ஆகியோருக்கு எந்தப் கடப்பாடும் இல்லை.அவையில் இவைகளும் அடங்கும இழப்பீடு கோரத்தக்க குற்ற செயல்(வரைஎல்லையற்ற கவனக்குறைவையும் சேர்த்து) ஒப்பந்தம் அல்லது எதுவாகிலும் எந்த நஷ்டம், வருமான இழப்பு நல்லெண்ணம் அல்லது ஒப்பந்தம் பாதிப்பு, தரவுகள் இழப்பு அல்லது பிழைபடுதல், வணிகச் செயல்பாடுகளில் இடற்பாடு, காரணங்கள் , விளைவு சார்ந்து, தனிப்பட்டு, தண்டிக்கும் விதமாக, அது சார்ந்த, மறைமுகமாக அல்லது அதுபோன்ற அதிலிருந்து ஏற்படும் அல்லது அது தொடர்பான இந்த இணைய தளத்தை அணுக நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை காரணமாக அல்லது அணுக இயலாத காரணங்களுக்காக ஏற்படும் இழப்புக்கள் அல்லது சேதாரங்கள் இருந்தாலும், இந்த இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தும் வழிகள் மற்றும்/ அல்லது இந்த இணையதள்த்தில் காணப்படும் தகவல்களை சார்ந்திருப்பது, அம்மாதிரியான இழப்புகள் அல்லது பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் அணுகும் போது நிகழ்வது .

பாதுகாப்பு

இந்த இணைய தளத்திலுள்ள தகவல்கள்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து விதமான முயற்சிகளும் எடுக்கப்பட்ட நிலையில் இந்த இணையதள பாதுகாப்பு குறித்து டபிள்யூஜிசி எந்த ஒரு நிபந்தனை, பிரதிநிதித்துவம், அல்லது உத்திரவாதம் அல்லது மற்ற விதிமுறைகள் ஆகியவற்றை வெளிப்படையாகவோ அல்லது உட்கிடக்கையாகவோ அறிவிக்க வில்லை. இதனுடன் உள்ள அணுகுதல், குறுக்கீடு செய்தல், அல்லது இந்த இணையதளத்திற்கு அல்லது இதன் மூலமாக நீங்கள் அனுப்பும் தகவல்கள் மற்றும் மூலங்களைப் பயன்படுத்துதல்,ஆகிய செயல்களில் அதிகாரம் அளிக்கப்படாத நபர்களுக்கு திறன் குறித்த வரையெல்லை அற்ற நிலையும் சேர்த்து.

அதிகாரமளிக்கப்படாத மூன்றாமவர் மேற்கொள்ளும் அணுகல், குறுக்கீடு, அல்லது இந்த இணையதளத்திலுள்ள அல்லது இதன் மூலமாக அணுகக்கூடிய தகவல்கள் மற்றும் மூலங்கள் அல்லது சேவைகள் அல்லது அவற்றின் வழியாக உங்கள் கணிணி அமைப்பை தொந்திரவுக்குள்ளாக்குவது போன்ற செயல்கள் காரணமாக உங்களுக்கு ஏற்படும் எந்த ஒரு இழப்பு, கடப்பாடு, அல்லது சேதம், டபிள்யூஜிசி அதன் தலைமை நிறுவனங்கள் அல்லது துணை நிறுவனங்கள் அல்லது அதன் எந்த ஒரு இயக்குனர், அதிகாரி, அல்லது பணியாளர்கள் ஆகியோருக்கு எந்தப் கடப்பாடும் இல்லை

தகவல்களின் துல்லியம்

இந்த இணையதளத்தில் கொடுக்கப்படும் தகவல்கள் மற்றும் மூலங்கள் டபிள்யூஜிசி நம்பகமானவை என்று கருதும் மூலாதாரங்களிலிருந்து பெறப்பட்டு தொகுத்து அளிக்கப்படுகிறது என்றாலும் அதன் துல்லியம், செல்லத்தக்க தன்மை, நம்பகத்தன்மை, அதன் குறித்த நேரம் , அல்லது முழுமை போன்ற அவ்வாறு பொதுவாக அல்லது ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டுக்காகப் பெறப்படும் தகவல்கள் அல்லது மூலங்கள் சம்பந்தமாக டபிள்யூஜிசி வெளிப்படையாகவோ அல்லது உட்கிடக்கையுடனோ எந்த ஒரூ நிபந்தனை, பிரதிநிதித்துவம், உத்திரவாதம் அல்லது எந்த ஒரூ விதிமுறையையோ அளிக்காது.

டபிள்யூஜிசி இந்த இணைய தளத்தில் (இணைப்புகள் உட்பட) அல்லது இந்த இணைய தளத்தின் மூலம் அணுகக்கூடிய வகையில் எந்த ஒரு மூன்றாம் நபராலும் அனுப்பப்படும் ஆலோசனை, கருத்து, அறிக்கை, தகவல்கள் அல்லது மூலங்களின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தவோ, அல்லது ஆதரிக்கவோ செய்யாது.

முதலீட்டு ஆலோசனை- எந்த ஒரு அளிப்பும் பரிந்துரையும் இல்லை தங்கம் சார்ந்த எந்த ஒரு முறைப்படுத்தப்பட்ட பொருள் அல்லது மற்ற முறைப்படுத்தப்பட்ட பொருட்கள், பத்திரங்கள் அல்லது முதலீடுகள் போன்ற ஒன்றை வாங்கவோ அல்லது விற்கவோ விழைவதாக, அல்லது வாங்க அல்லது விற்க முனையும் ஒன்றிற்காக இந்த இணையதளமும், இந்த இணையதளத்தில் காணப்படும் தகவல்கள் மற்றும் மூலங்களும் பரிந்துரைப்பதாக கருதப்படக்கூடாது. தங்கம் சார்ந்த எந்த ஒரு முறைப்படுத்தப்பட்ட பொருள் அல்லது மற்ற முறைப்படுத்தப்பட்ட பொருட்கள், பத்திரங்கள் அல்லது முதலீடுகள் போன்றவற்றைக் குறித்து இந்த இணைய தளம் யாருக்கும் விளம்பரம் தேடவோ, ஆதரவு அளிக்கவோ கிடையாது அவ்வாறு கருதப்படவும் கூடாது.

தங்கம் சார்ந்த எந்த ஒரு முறைப்படுத்தப்பட்ட பொருள் அல்லது மற்ற முறைப்படுத்தப்பட்ட பொருட்கள், பத்திரங்கள் அல்லது முதலீடுகள் அல்லது இதனுடன் கூட, வரையெல்லையற்ற முறையில் தங்கம் சார்ந்த பரிவர்த்தனைக்கு அல்லது முதலீட்டுக்கு அல்லது பொருளாதார நிலைக்கு உகந்தது என்ற எந்த ஒரு ஆலோசனையையும் முதலீடு செய்ய முனைவோருக்கு இந்த இணையதளமும், இந்த இணையதளத்தில் காணப்படும் தகவல்கள் மற்றும் மூலங்களும் எந்த ஒரு ஆலோசனையும் பரிந்துரையையும் அளிக்காது அவ்வாறு அளிப்பதாகக் கருதப்படவும் கூடாது.

முதலீடு செய்ய தங்கம் சார்ந்த முறைப்படுத்தப்பட்ட பொருட்கள் அல்லது மற்ற எந்த முறைப்படுத்தப்பட்ட பொருட்கள், பத்திரங்கள் அல்லது மற்ற முதலீடுகள் போன்றவற்றில் முதலீடு செய்யும் முடிவை இந்த இணைய தளத்திலுள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளக்கூடாது. முதலீடு செய்ய முனைவோர் எவரும் முதலீடு குறித்த முடிவை எடுக்கும் முன்னர் அவர்களின் பொருளாதார, சட்ட, வரி மற்றும் கணக்கீட்டு வல்லுனர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அவர்களது தனிப்பட்ட பொருளாதார தேவைகள், மற்றும் சூழ்நிலைகள் மற்றும் அம்மாதிரியான முதலீட்டு முடிவுகளால் ஏற்படும் இடர்பாடுகளையும் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

உள்ளூர் சட்டக் கட்டுப்பாடுகள்

இந்த இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களும் மற்றவைகளும் சுட்டிக்காட்டப்படுவதும், பயன்படுத்தப்படுவதும் தடைசெய்யப்பட்ட எந்த சட்ட எல்லைக்குள்ளும் அல்லது அவ்வாறு பயன்படுத்துவது அரசதிகாரம் அல்லது ஒழுங்குமுறை ஆணையத்தால் முறைப்படுத்தப்பட்ட நடைமுறையிலுள்ள சட்டவிதிமுறைகளுக்கு எதிராக செயல்படுமாறு பயன்படுத்தப்படுவதற்காக இல்லை என்பதால் எந்த தனி நபரும் அல்லது நிறுவனமும் அவ்வாறு சுட்டிக்காட்டவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

எதிபார்ப்பைக் குறிக்கும் கூற்றுகள்

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் முழுவதும் பொதுவானதும் மற்றும் கல்விக்கானதுமாகும். இது எதையும் வாங்க அல்லது விற்க முயலும் ஒன்றோ அல்லது வாங்க அல்லது விற்கப்பட உள்ள எந்த ஒரு பொருளுக்கும் ஆதரவளிப்பதற்கானதோ இல்லை, அவ்வாறு கருதப்பட்டுவிடவும் கூடாது. “நம்புகிறது” ‘எதிர்பார்க்கிறது’ ‘இருக்கலாம்’ அல்லது ‘அறிவுறுத்துகிறது’ அல்லது அது போன்று அர்த்தம் தொனிக்கும் சொற்கள் “எதிர்பார்ப்பைக் குறிக்கும்” தகவல் என்ற வகையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இங்கு இருக்கும் எதிர்பார்ப்பைக் குறிக்கும் தகவல்களின் சந்தேகத்திற்கிடமான தன்மைகளால் அவ்வகையிலான தகவல்கள் வெற்றியடையக்கூடும் என்ற எண்ணத்தை டபிள்யூஜிசி பிரதினிதித்துவப்படுத்துகிறது என்று கருதக்கூடாது.

மூன்றாம் நபர் இணைப்புக்கள்

இந்த இணையதளத்தில் மூன்றாம் நபர்கள் ஆதரவு பெற்ற அல்லது அவர்களால் பராமரிக்கப் படுகிற இணைய தள இணைப்புக்கள் காணப்படலாம். அவைகள் வரம்பெல்லையற்ற நிலையில் வேர்ல்ட் கோல்டு கவுன்சில் உறுப்பினர்களின் இணைப்புக்கள், மற்றும் டபிள்யூஜிசி அல்லது அதன் கூட்டாளி நிறுவனங்கள் அல்லது துணைநிறுவனங்களின் இணைப்புக்களாக இருக்கலாம். இந்த இணைப்புக்கள் உங்களுக்கு வசதி செய்து கொடுப்பதற்காகவே தரப்பட்டுள்ளன. இந்த மூன்றாம் நபர் இணைப்புக்கள் இதில் உள்ள காரணத்தினால் அவற்றுடன் கூட்டு, ஆதரவாளர், உடன்பாடு, அங்கீகாரம், விசாரணை, சரிபார்த்தல் அல்லது அந்த இணையதளம் மற்றும் அவற்றில் காணப்படும் தகவல்கள் மற்றும் பிற அம்சங்கள் டபிள்யூஜிசி யினால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்பது போன்றவை எதுவும் கிடையாது.டபிள்யூஜிசி எதற்காகவும் எந்த மூன்றாம் நபருக்கும் பிரதிநிதித்துவமோ, உத்திரவாதம் அல்லது பொறுப்புறுதியோ அளிக்கவில்லை. மற்றும் எந்த ஒரு மூன்றாம் நபர் இணைய தளத்திற்கு அல்லது அவற்றில் கண்டுள்ள தகவல்கள் மற்றும் பலவற்றுக்கு, அல்லது உங்கள் பயன்பாட்டிற்கு அல்லது அம்மாதிரி மூன்றாம் நபர் இணையதளத்தை பயன்படுத்த இயலாததற்கு அது பொறுப்பாகாது. மற்ற மூன்றாம் நபர் இணைய தள பயன்பாடுகளுக்கு தனிப்பட்ட விதிமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளன மற்றும் அம்மாதிரியான மூன்றாம் நபர் இணையதளங்களின் தனியுரிமைக் கொள்கைகள் இந்த இணையதளத்தை நீங்கள் பயன்படுத்துவதிலிருந்து மாறுபட்டவை என்கிற விவரங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

தனியுரிமை மற்றும் சிறு கோப்புக்கள்

எங்களது தனியுரிமைக் கொள்கை அறிக்கையை Privacy Statement இல் படித்து தெரிந்து கொள்ளுங்கள் . எங்கள் சிறுகோப்புக்கள் பயன்பாடு பற்றி Cookies usage இல் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

பொதுவானவை

டபிள்யூஜிசி அது இணைப்புக்களை அளிக்கும் இணையதளங்கள் அல்லது அதன் விளம்பரதாரர்களின் இணையதளங்கள் ஆகியவற்றின் உள்ளடக்கத்திற்கு அல்லது அவற்றின் தனியுரிமைக் கொள்கைகளுக்கு எந்தப் பொறுப்பும் ஏற்காது.

டபிள்யூஜிசி அதனிடம் தரப்பட்ட அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் மற்றும் வருகை தருபவரின் ஒப்புதல் பெற்ற பிறகே அவ்வகை தகவல்களை பொறுப்பான மூன்றாம் நபர்களுக்கு அளிக்கும் என்பதற்கும் நியாயமான வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

நிர்வாகச் சட்டம்

இந்த இணையதளம் இந்தியச் சட்டங்களின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதன் விதிமுறைகள் குறித்த எந்த ஒரூ சர்ச்சையும் தனிப்பட்ட மும்பை நீதிமன்றங்களின் சட்ட எல்லைக்குட்பட்டதாகும்.

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் எந்தப் பகுதியாவது நடைமுறையிலுள்ள எந்த சட்டத்திற்கும் புறம்பாக சட்டவிரோதமாக, செல்லத்தகாததாக, அல்லது நடைமுறைப்படுத்த்ப் பட முடியாததாக இருந்தால் அம்மாதிரியான விதிமுறை மற்ற விதிமுறைகம் மற்றும் நிபந்தனைகளிலிருந்து முடிந்தவரை விலக்கப்பட்டு நீக்கப்பட்டதாக கருதப்படும். அது மீதமிருக்கிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சட்டப்படி, செல்லத்தகுந்த அல்லது நடைமுறைப்படுத்தப்படும் முறையில் தொடர்ந்து இருப்பதற்கு எந்த விதத்திலும் தடையாகாது.

எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (தனியுரிமைக் கொள்கைகளையும் சேர்த்து) குறித்த கேள்விகள் எதுவும் உங்களுக்கு இருப்பின் எங்களை [email protected] இல் தொடர்பு கொள்ளவோ அல்லது வேர்ல்ட் கோல்டு கவுன்சில் (இந்தியா) ப்ரைவேட் லிமிடட், பி-6/3 6ஆவது தளம், லக்ஷ்மி டவர்ஸ், சி-25, பாந்த்ரா குர்லா காப்ளெக்ஸ், பாந்த்ரா (கிழக்கு),மும்பை 400051 இந்தியா என்ற முகவரிக்கு எழுதவோ செய்யலாம். டபிள்யூஜிசிக்கு விடுக்கப்படும் அழைப்புக்கள் பதிவு செய்யப்படலாம் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்.

பதிப்புரிமை © 2019 வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் (இந்தியா) பிரைவேட் லிமிடட்