Published: 08 பிப் 2018

The artistic streak of Bengali artisans

இது பெங்காலிகளுக்கு ஆண்டின் மிக முக்கியமான பண்டிகை. சாலைகள் எல்லாம் குதூகலம், கும்மாளம், இசையும், துள்ளலுமாய் இருந்தது. இந்தப் பண்டிகையின் போது நகரம் கோலாகலமாக இருக்கும் என்று ராதா இதற்கு முன்பு வரை கேள்விப்பட்டு மட்டுமே இருந்தாள். ஆனால், இன்று தான் நேரிடையாக காண்கின்றாள். இதற்கு இணையாக அவளால் ஒப்பீடு செய்ய முடிந்த ஒரேயொரு பண்டிகை மும்பையில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா. ஆனால், பிரபல துர்கா பூஜையின் போது, கொல்கத்தா நகரம் முற்றிலும் மாறுபட்ட ஒரு நகரமாகிவிடுகிறது. ராதா இங்கு வந்ததன் நோக்கம் வேறு என்றபோதிலும், இந்த மேன்மை வாய்ந்த பண்டிகையை நேரடியாக கண்டுகளிப்பதற்கும் ஏற்றவாறு தனது வருகையைத் திட்டமிட்டிருந்தாள்.

பெங்காலி கைவினைஞர்களைப் பற்றி ராதா நிறைய கேள்விப்பட்டிருக்கிறாள். அவர்களின் கைவினைத்திறன் மற்றும் படைப்புத்திறன் அவளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்ரோனீல் என்ற கைவினைஞரை ராதா சந்தித்தாள். பயிலரங்கு ஒன்றில் இந்ரோனீல் உடனான சந்திப்பு, அவளுக்கு அச்சமும் மதிப்பும் உண்டாக்குவதாக இருந்தது. ஆக, இந்ரோனீலை ஏன் ராதா சந்திக்கத் தீர்மானித்தாள்? அதாவது, ராதாவிடமிருந்த தங்கக்கட்டிக்கு உரு கொடுக்க வேண்டியிருந்தது. அதை விட முக்கியமாய், ஜூவல்லரி டிசைனிங் தொழிலில் இறங்கியதைத் தொடர்ந்து, இது போன்ற படைப்புத்திறன் மிகுந்த கைவினைஞர்களை தனது குழுவில் சேர்த்துக்கொள்ள ராதா விரும்பினாள்.

குறிப்பாக பெங்காலி கைவினைஞர்கள் ஏன்? வேறு கைவினைஞர்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே என்ற ஆச்சரியம் உண்டாகலாம். இதோ, ராதாவின் பதில்கள் பின்வருமாறு:

  • மிகவும் திறமையான கலைநயம்

    தங்க ஆபரணங்கள் உருவாக்க செயல்முறைகளான நிரப்புதல், பற்றவைத்தல், அறுத்தல், அடித்தல், வார்த்தல், பாலீஷ் போடுதல் ஆகியவற்றில் பெங்காலி கைவினைஞர்கள் கொண்டிருக்கும் திறன் தன்னிகரற்றது. அவர்களின் கையால் தயாரிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மிகவும் பிரபலம் என்பதால், ராதாவின் வாடிக்கையாளர்கள், பெங்காலி கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை மட்டுமே வேண்டும் என்று வலியுறுத்தினர்.

  • தங்க ஆபரணச் சந்தையில் பெங்காலி கைவினைஞர்களின் பங்கு

    இந்தியாவில் கையால் நகைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களில் சுமார் 70% மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை ராதா ஒரு பத்திரிகையில் படித்திருந்தார். அதாவது, கைவினைஞர்களின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமானோர் பெங்காலி கைவினைஞர்கள். ஆகவே, தனது டிசைன்களை நகைகளாக உருவாக்கித் தர பெங்காலி கைவினைஞரே அவருக்கு புத்திசாலித்தனமான தீர்வாகத் தோன்றியது.

  • படைப்புத்திறனுக்காக அதிகரிக்கும் தேவை

    அவளுடைய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் தனித்துவமான, எவரும் அணிந்து தாங்கள் பார்த்திராத வடிவமைப்புகளை விரும்பினார்கள்; சில நேரங்களில், அவர்கள் விளம்பரங்கள், திரைப்படங்கள் அல்லது டிவி நிகழ்ச்சிகளில் பார்த்த நகைகள் பற்றி கூறி, அதே போல் வேண்டும் என்றார்கள். புதுமையை படைக்கத் தெரிந்த ஒரு திறமையான குழுவை வைத்திருக்கும் ஒரு நகைத் தயாரிப்பாளர் எப்போதும் வெற்றிகரமானவராக இருப்பார்.

    இலக்கியம், இசை, ஓவியங்கள் மற்றும் இதர கலை வடிவங்கள் ஆகியவற்றில் கொண்டிருக்கும் ஞானத்தால் பெங்காலிகள் பிரபலமாக திகழ்கிறார்கள். தங்க நகைகளை வடிவமைப்பது என்பதே ஒரு கலைதான்; ஒரு பெண்ணின் வசீகரத்தை (சில சமயங்களில் ஆணுக்கும் பொருந்தும்) அதிகரிக்கச் செய்யும் ஒரு கலையாகும். எனவே, கலைகளை நேசிப்பதாக அறியப்படும் ஒரு மாநிலம், நாட்டிற்கு, மற்றொரு வடிவத்தில், தங்க ஆபரண வடிவமைப்பிலும் தங்களின் கலைநயம் மற்றும் படைப்புத்திறனை வழங்குகிறது என்பது உண்மையில் ஆச்சரியமூட்டுவதாக இல்லை.