Published: 04 நவ 2021

தங்க நகைகளுடன் மினிமலிஸ்ட் தோற்றத்தை பெறுவது

gold jewellery

தங்க நகைகளை அணிய பல்வேறு வழிகள் இருந்தாலும், சமீப காலங்களில் குறைந்த பட்சமாக நகைகளை அணியும் (மினிமலிசம்) போக்கு மிகவும் பிரபலமாகி வருகிறது. வெவ்வேறு அன்றாட நிகழ்வுகளுக்கு தங்கத்தை அணிய விரும்பும் இள வயது பெண்கள் மத்தியில் இது குறிப்பாக உண்மையாக இருக்கிறது. 

மினிமலிஸ்டிக் தங்க நகைகளைத் தேடும் போது, தோற்றத்தை வசீகரமாக்க, மென்மை மற்றும் எளிமை ஆகிய சொற்கள் மிக முக்கியமாகும். ஒரு சில கிளாசிக் அணிகலன்களை அணிவதன் மூலம், எல்லா நேரங்களிலும் ஸ்டைலாகத் தோற்றமளிக்கலாம்.

மினிமலிஸ்டிக் தங்க நகைகளின் வகைகள்

தங்க நகைகள் பல்வேறு ஸ்டைல்களில் வருகின்றன, ஆனால் அவை அனைத்தும் மினிமலிஸ்டிக் டிரெண்டுக்கு பொருந்தாது. இந்தப் டிரெண்டுக்கான சரியான நகைகளை அடையாளம் காணவும், அவற்றை எவ்வாறு சரியாக வடிவமைக்கலாம் என்பதற்கான உங்கள் வழிகாட்டி இதோ:

மோதிரங்கள்

gold jewellery

தங்க மோதிரங்கள், ஒற்றையாகவோ அல்லது அடுக்கப்பட்ட முறையில் அணிந்திருந்தாலும், அது ஒரு அதிநவீன மற்றும் மினிமலிஸ்டிக் தோற்றத்தை உருவாக்க முடியும். இருப்பினும், அதிகமாக மேலே செல்லாமல் இந்தத் தோற்றத்தை சரியாகப் பெற ஒரு வழி உள்ளது. நீங்கள் அணிந்திருக்கும் மற்றும் ஜோடி சேர்க்கக்கூடிய நகைகளை சரிசெய்வதே அதன் தந்திரமாகும். பெரிய கற்கள் இல்லாத மெலிதான, குறைந்தபட்ச டிசைன்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது. நீங்கள் சற்று அகலமான மோதிரத்தை தேர்வு செய்ய விரும்பினால், அதை மற்ற மோதிரங்களுடன் சேர்த்து அடுக்குவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் அது உங்கள் தோற்றத்தை குறைத்துக் காட்டக்கூடும்.

மோதிரங்கள் எப்பொழுதும் ஒரு பதக்கம் மற்றும் செயின் அல்லது காதணிகளுடன் நன்றாக இணைகின்றன, அதே நேரத்தில் மினிமலிஸ்டிக் தோற்றத்தையும் தருகின்றன. இருப்பினும், உங்கள் கைகளில் உள்ள மற்ற ஆடம்பர ஆபரணங்களான பிரேஸ்லெட் அல்லது தங்க வளையல் பட்டி போன்றவற்றுடன் அவற்றை இணைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது ஒட்டுமொத்த தோற்றத்தை பாதிக்கலாம்.

நெக்லஸ்கள்

 gold jewellery

மினிமலிஸ்ட் நெக்பீஸ்கள் உங்கள் ஆடையை கம்பீரமாகவும் எளிமையாகவும் வைத்திருக்கும் அதே நேரத்தில் அதை உயர்த்திக் காட்டும். உதாரணமாக, நீங்கள் மிக மெலிதான சங்கிலியுடன் கூடிய எளிய தங்க பதக்கத்தை அணியலாம். நீங்கள் இன்னும் ஒரு பளிச்சென்ற தோற்றத்தை உருவாக்க விரும்பினால், தனித்துவமான வடிவத்துடன் கூடிய தடிமனான தங்கச் சங்கிலி உங்களுக்கு நவீன தோற்றத்தை அளிக்கும். இருப்பினும், நீங்கள் பிந்தையதைத் தேர்வு செய்தால், வேறு எந்த அணிகலன்களையும் தவிர்ப்பது சிறந்தது, அது உங்கள் மினிமலிஸ்டிக் தோற்றத்தை அப்படியே வைத்திருக்கும்.

உங்கள் நெக்பீஸை உங்கள் அலங்காரத்தின் மையமாக மாற்றுவதற்கான மற்றொரு வழி, பல மெல்லிய நெக்லஸ்களை அடுக்குவதாகும். உதாரணமாக, நீங்கள் ஒரு மெலிதான கற்கள் பதித்த தங்க சோக்கரை ஒரு தங்க லாரியட் நெக்லஸுடன் அணியலாம், ஆனால் உங்கள் தோற்றத்திற்கு ஏற்றதாக இரண்டும் எளிமையாகவும் அழகாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

காதணிகள்

 gold jewellery
 

காதணிகள், ஸ்டைல் செய்வதற்கு எளிதான நகைகளில் ஒன்றாகும். தினசரி அலுவலக உடைகளுக்கு, எளிய மலர் அல்லது ஜோமெட்ரிக் வடிவமைப்பில் ஒரு ஜோடி சிறிய தங்க காதணிகளை அணியலாம் சாதாரண பயணங்களுக்கு, நீங்கள் மேக்ஸி ஆடையுடன் ஒரு பின்னப்பட்ட தங்க வளைய காதணிகளை அணியலாம். இருப்பினும், இவை மிகப் பெரியதாக இல்லாமலும் அல்லது பெரிய, பல்வகை கற்கள் பதிக்கப்படாமலும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

உங்கள் காதில் பல துளைகள் இருந்தால், நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காதணிகளை அணியலாம். ஆனால் தோற்றத்தை குறைவாக வைத்துக்கொள்ள, எளிய டிசைன்களில் ஸ்டட்கள் அணிவது சிறந்தது. உங்கள் காதில் ஒன்றுக்கு மேற்பட்ட துளைகள் இல்லையென்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட காதணிகளை அணிய விரும்பினால், தங்க கிளிப்-ஆன் காதணிகளைக் அணியலாம்.

வளையல்கள் மற்றும் பிரேஸ்லெட்கள்

Woman wearing gold jewellery

Jeweller credits: Snake Bracelet (Curated by the Brand Poonam Soni)

நன்கு அணியப்பட்ட பிரேஸ்லெட் அல்லது வளையல் உங்கள் கைகளில் கவனத்தை ஈர்க்கும் மற்றும் உங்கள் அலங்காரத்தை முழுமையாக்கும், ஆனால் நீங்கள் அதை சரியாக அணிய வேண்டும். ஒரு ஜோடி மெல்லிய கட்-அவுட் வளையல்கள் உங்கள் அலுவலக ஆடைக்கு ஸ்மார்ட் ஆகவும் தொழில்முறையாகவும் இருக்கும் மற்றும் உங்கள் உடைக்கு ஒரு முழுமையைத் தரும். நீங்கள் ஒரு மென்மையான, கோடைக்கால ஆடையுடன் இருக்க விரும்பினால், ஒரு சாதாரண தோற்றத்திற்கு சில தனிப்பயனாக்கப்பட்ட அலங்காரங்களுடன் கூடிய ஒரு எளிய சங்கிலி வளையலை அணிந்து கொள்ளுங்கள். மினிமலிஸ்ட் ஆக இருக்கும் போது பளிச்சென்ற தோற்றத்தை நீங்கள் விரும்பினால், செதுக்கப்பட்ட தங்க வளையல் பட்டியை ஒரு கையில் அணியலாம்.

உங்கள் தங்க நகைகள் முக்கியத்துவம் பெறுவதற்கு உங்கள் ஆடைகளை சரியான முறையில் அணியுங்கள்

மினிமலிஸ்டிக் தோற்றத்தை உருவாக்க, நீங்கள் அணியும் ஆடைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் ஆடை மிகவும் அழகாகவோ அல்லது அலங்காரமானதாகவோ இருந்தால், நீங்கள் சிரமப்பட்டு தேர்ந்தெடுத்த தங்க நகைகளின் அழகை அது மூழ்கடிக்கக்கூடும். 

மினிமலிஸ்டிக் தங்க நகைகள் நேரப்பாகுபாடு இல்லாத ஆடைகளால் சிறப்பாகப் பூர்த்தி செய்யப்படுகின்றன, முக்கியமாக நடுநிலை நிறங்களுடன். உதாரணமாக, நீல நிற ஜீன்ஸ் , ஒரு உன்னதமான வெள்ளை சட்டை ஆகியவற்றிற்கு மினிமலிஸ்ட் தங்க மோதிரங்கள் அல்லது ஒரு பதக்கத்துடன் கூடிய ஒரு எளிய தங்க நெக் பீஸை ஜோடி சேர்த்து ஒரு நுட்பமான ஸ்டைல் வெளிப்பாட்டை உருவாக்கலாம். 

பேஸ்டல் சிஃப்பான் ஆடையுடன் கூடிய அடுக்கு தங்க நெக்லஸ் அணிந்தால், நீங்கள் ஒரு உணவகத்திற்குள் நுழையும்போது அனைவரையும் உங்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும். இதேபோல், கார்ப்பரேட் பெண்ணுக்கு, சாதாரண சட்டை அல்லது பேன்ட் சூட் ஒரு மெல்லிய சங்கிலி மற்றும் பதக்கத்துடன் சரியாக ஜோடி சேரும்.

மினிமலிஸ்ட் தோற்றம் நித்தியமானது - இது அனைவருக்கும் பொருந்தும் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த, அடக்கமான ஸ்டைலை உருவாக்க இது உதவும். இதை அடைவதற்கு, கிளாசிக் தங்க நகைகளை உங்கள் சேகரிப்பில் சேர்க்க முயற்சிக்கவும் மற்றும் நிகழ்வுக்கு ஏற்ப சரியான பொருத்தத்திற்கு அவற்றை மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்யவும்.