Published: 03 மே 2024

சிக்கிம் நகைகள் தயாரித்தல்: ஒரு விரைவான கண்ணோட்டம்

Traditional Sikkim jewellery

இமயமலையில் "ஏழு சகோதரிகளின் சகோதரர்" என்றும் அழைக்கப்படும் சிக்கிம், கண்ணுக்கினிய காட்சிகள், அல்பைன் பருவநிலை மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தின் தாயகமாகும். மனதை ஈர்க்கும் நாட்டுப்புற நடனங்கள் முதல் சுவையான உணவு வகைகள் வரை, இந்த சிறிய மாநிலத்தில் வியப்புகளுக்கு அளவே இல்லை.

சிக்கிம் நகைகள், பாரம்பரிய மற்றும் சமகால ஸ்டைல்களின் தனித்துவமான கலவையாகும், இது பூட்டியா, நேபாளி, லெப்சாஸ் மற்றும் பிற இனக்குழுக்களின் கலை பாணிகள், வடிவங்கள் மற்றும் வடிவமைப்பு கொள்கைகளின் கலவையால் உருவானதாகும். திறமையான கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட, ஒவ்வொரு நகையும் பிராந்தியத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நுண்ணிய வடிவமைப்புகளை வெளிப்படுத்துகிறது. ஆடம்பர கழுத்து அணிகலன் முதல் நுட்பமான காதணிகள் மற்றும் வளையல்கள் வரை, சிக்கிம் நகைகள் இந்த இமயமலைப் பிராந்தியத்தின் கலாச்சார இணைவைக் குறிக்கிறது. 

தங்கம் மற்றும் ரத்தினக் கற்களால் அமைக்கப்பட்ட வண்ணமயமான நெக்லஸ், வேலைப்பாடுகள் கொண்ட வளையல்கள், நுண்ணியமாக செதுக்கப்பட்ட மோதிரங்கள் மற்றும் பற்பல ஆபரணங்களிலும் பல தலைமுறைகளாக உருவாகி வரும் ஒரு கதை பின்னப்பட்டுள்ளது.

1. வடிவமைப்பு மற்றும் உத்வேகம்:

ஒரு வடிவமைப்பின் கருத்தாக்கத்தை உருவாக்கும் பணியுடன் செயல்முறை தொடங்குகிறது; சிக்கிம் மக்கள் இயற்கையை நேசிக்கிறார்கள் மற்றும் ஆன்மீகத்தை உறுதியாக நம்புகிறார்கள். எனவே, முதன்மை வடிவமைப்புகள் பெரும்பாலும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட பூக்கள், இலைகள் மற்றும் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டவையாகும். இம்மாநிலத்திற்கு வலுவான திபெத்திய மற்றும் பூட்டானிய பாரம்பரியம் உள்ளது, அவை நகைகளில் செதுக்கப்பட்டிருக்கும் வடிவங்களில் காணப்படுகின்றன. இவை தங்கா ஆர்ட் என்று குறிப்பிடப்படுகின்றன  - இது பெளத்தத்தில் பின்பற்றப்படும் ஓவியம் மற்றும் வடிவமைப்பின் ஒரு வடிவமாகும். ஆபரணத்தின் வடிவமைப்பே நகைகளுக்கான நிகழ்வைத் தீர்மானிக்கிறது - அது திருமணத்திற்காகவோ அல்லது வேறு ஏதேனும் விசேஷ நிகழ்வுக்காகவோ இருக்கலாம். 

Bhutia bangle

பூட்டியா வளையல் என்பது சிக்கிமின் பாரம்பரிய நகைகளுக்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும், அதில் "அஷ்டமங்களா" என்று குறிப்பிடப்படும் 8 மங்கல சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த வளையல்களின் அதிர்ஷ்ட குறியீடுகள்ஷன்கா (கடல் சங்கு), ஸ்ரீவத்சா (முடிவில்லா முடிச்சு), சத்ரா (குடை), மத்ஸ்யா (தங்க மீன்), தர்மசக்ரா (தர்ம சக்கரம்), பத்மா (தாமரை), த்வஜா(வெற்றி பதாகை), மற்றும் கலஷ் (புதையல் கலசம்).

Khao pendant

காவ் பதக்கமானது பூட்டியா பெண்கள் அணியும் பிரபலமான பாரம்பரிய நகையாகும். இது அன்பு, அர்ப்பணிப்பு, செழிப்பு மற்றும் தூய்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்தப் பதக்கம் தங்கத்தால் ஆனது, இதில் செமி-ப்ரெஷியஸ் ரத்தினக் கற்கள் மற்றும் நுண்ணிய ஃபிலிகிரி வேலைகள் உள்ளன. கடந்த காலத்தில், இது ஒரு பெட்டி வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது, இந்தப் பெட்டியில் போர்க்காலங்களில் பழங்குடி வீரர்களைப் பாதுகாக்க ஒரு சிறப்பு தாயத்து இருக்கும். பின்னர், ஒரு மன்னர் அவர்களின் மத நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 'மண்டலா' போன்ற சுருக்கமான வடிவத்தில் மிகவும் நவீனமான மற்றும் எளிமையான வடிவமைப்பை விரும்பினார். இதில் இரண்டு வகைகள் உள்ளன: ஒன்று தங்கத்தால் ஆனது மற்றும் மற்றொன்று பவளத்தால் ஆனது. இந்தப் பதக்கத்தில் இயற்கை மற்றும் ’அஷ்டமங்கலா சித்தரிக்கும் உருவங்கள் உள்ளன ’.   

2. பயன்படுத்தப்படும் பொருட்கள்:

இந்த நகைகள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.  இதில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உலோகம் 22-24 காரட் தங்கம். மற்றும் நீலம் (டர்க்வைஸ்), லேபிஸ் லாசுலி மற்றும் சிவப்பு பவளம் போன்ற விலையுயர்ந்த கற்கள் ஆன்மீக காரணங்களுக்காக சேர்க்கப்படுகின்றன.. எனாமல் வேலை இந்த வடிவங்கள் மற்றும் ஆபரணங்களுக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கிறது.

Turquoise and red gemstonesதங்கம் மற்றும் நீலம் (டர்க்வைஸ்),  சிவப்பு பவளம் போன்ற ரத்தினக் கற்கள் இந்த ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

நெசவுக் கலையைக் கொண்டாடும் 'கந்தா' மற்றும் ' நவ்கேடி ' போன்ற நகைகளின் சிறப்பு வடிவங்கள் இவற்றுள் சிலவாகும். கந்தா என்பது தங்க இழையால் ஆன நெக்லஸ் ஆகும், இது ஒரு நேர்த்தியான வகையில் அணியக்கூடிய ஒரு ஆடம்பரமான பொருளாக கலைநயத்துடன் நெய்யப்பட்டதாகும். 'நவ்கேடி' (நவ் என்றால் ஒன்பது,இது கலாச்சார அடையாளத்தின் வலுவான சின்னம்) என்பது ஒன்பது பின்னப்பட்ட தங்க இழைகளால் செய்யப்பட்ட ஒரு வளையல் ஆகும் மற்றும் அது தனித்துவமானது மற்றும் நேர்த்தியானது. 

Nepali bangleடிராகனால் ஈர்க்கப்பட்ட நேபாளி வளையல் பொதுவாக தங்கத்தால் ஆனது. வலிமை மற்றும் பாதுகாப்பைக் குறிக்கும் சக்திவாய்ந்த புராண உயிரினமான டிராகன் உருவங்களை சித்தரிக்கும் வகையில் இந்த வடிவமைப்பு அமைந்துள்ளது.

3. பாரம்பரிய முறைகள் தலைமுறைகளாகக்:

கடைப்பிடிக்கப்படுகின்றன: கைவினைப் பொருட்கள் மற்றும் ஃபிலிக்ரீ வேலைகள் ஆகியவை நகைகள் தயாரிப்பதில் சில பாரம்பரிய நுட்பங்களாகும், இதில் செதுக்குதல், சுத்தியலால் அடித்தல் மற்றும் பொறித்தல் ஆகியவை அடங்கும். மெழுகில் செதுக்கும் காவ் என்பது பாரம்பரிய முறைகளான ஃபிலிகிரி மற்றும் ஒரு ஆபரணத்தின் மீது நுட்பமான விவரங்களை கையால் செதுக்குதல் போன்றவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒரு கலாச்சார கலவையாகும். 

Making Sikkim jewellery

Making Sikkim jewellery

4. உலோகங்களை வார்த்தல் மற்றும் செதுக்குதல்:

இந்த பணிக்கு திறமையான கைவினைஞர்கள் தேவைப்படுகிறார்கள், இதில் ஒரு பொருளின் வடிவத்திற்கு ஒரு மோல்டு உருவாக்கப்பட்டு, அதில் உருக்கிய உலோகம் ஊற்றப்படுவதன் மூலம் தேவைப்படும் ஆபரணத்தின் வடிவம் கிடைக்கிறது. இந்த வார்க்கப்பட்ட உலோகத்தை குளிர்ச்சியடையச் செய்வதன் மூலம் நகைக்கான அடிப்படை வடிவம் கிடைக்கிறது. பெரும்பாலான சிக்கிம் நகைகள் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டவை, இதில் விலைமதிப்பற்ற ரத்தினக் கற்கள் மற்றும் கண்ணாடி மணிகளால் பதிக்கப்பட்டிருக்கும்.

Casting and carvingஒவ்வொரு ஆபரணமும் மிகவும் திறமையான கைவினைஞர்களால் நுணுக்கமாக வடிவமைக்கப்படுகிறது.

5. அசெம்பிளிங் மற்றும் ஃபினிஷிங்:

உருக்கப்பட்ட உலோகம் வடிவம் பெற்ற பிறகு, ஆபரணத்தில் பளபளப்பைக் கொண்டு வர மெருகூட்டல் செயல்முறை செய்யப்பட்டு, செயின் கிளாஸ்ப்கள், மணிகள், கற்கள் மற்றும் எனாமல் வேலைகள் சேர்க்கப்படுகின்றன. உலோகத்தின் மீது ரத்தினத்தை பாதுகாப்பாக பதிப்பதற்கு கைவினைஞர்கள், ப்ராங் மற்றும் பெஸல் அமைப்புகள் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

வேறு சில விலையுயர்ந்த மற்றும் கைவினைஞர்களால் செய்யப்பட்ட நகைகள்:

Fire inspired earring

நெருப்பால் ஈர்க்கப்பட்ட நேபாளி மார்வாரி காதணி.                                                                                                 டிராகனால் ஈர்க்கப்பட்ட  பூட்டியா காதணி "ஆலோங்" .Spindle and nature inspired jewelleryபம்பரத்தால் ஈர்க்கப்பட்ட நேப்பாளி’திஹாரி’’.                                                                                                                    இயற்கையால் ஈர்க்கப்பட்ட நேபாளி ஹேர்கிளிப்

ஒவ்வொரு நகையும், செயல்பாட்டின் இன்றியமையாத பகுதியான கடுமையான தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளைக் கடந்து செல்கிறது. கைவினைஞர்களே ஒவ்வொரு ஆபரணத்தையும் சரிபார்த்து தவறுகள் மற்றும் குறைபாடுகளைச் சரிபார்க்கிறார்கள்.

சிக்கிம் நகைகள் கவர்ச்சிகரமானவை. ஒவ்வொரு நகையும் மிக நுணுக்கமாக கைவினைப் படுத்தப்படுகிறது மற்றும் அவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலோக வார்ப்புகளில் சிக்கிமின் தனித்துவம் மற்றும் நீலம் (டர்க்வைஸ்) மற்றும் சிவப்பு பவளத்திற்கான அவர்களின் விருப்பம் (ஆன்மீக காரணங்களுக்காக) ஒவ்வொரு நகைக்கும் அழகு சேர்க்கிறது. சிக்கிம் நகைகள் ஆன்மீகத்துறையில் ஏராளமாக உள்ளன, அவை பன்முகத்தன்மை நிறைந்தவை மற்றும் இயற்கை, பாரம்பரியம் மற்றும் பிராந்தியத்தின் கலாச்சார அடையாளத்தைப் போற்றும் வகையில் நுண்ணிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.