Published: 03 ஏப் 2024

மிகச்சிறந்த ஸ்டைலிஸ்ட் கோபாலிகா விர்மானியுடன் தங்கத்தில் உங்கள் மணப்பெண் அலங்காரத்தை உருவாக்குங்கள்

Gopalika Virmani

மிகச்சிறந்த ஸ்டைலிஸ்ட் கோபாலிகா விர்மானியுடன் தங்கத்தில் உங்கள் மணப்பெண் அலங்காரத்தை உருவாக்குங்கள்

வியக்கத்தக்க வகையில் அதே சமயம் மிக நேர்த்தியாக, மணப்பெண்களுக்காக பிரத்தியேக அலங்காரங்களை விர்மானி வடிவமைத்துள்ளார். ஒவ்வொரு நகையும் ஒரு அக்சஸரி என்பதை விட மேலானது; இது மணப்பெண்ணின் தனிப்பட்ட பயணத்தின் சின்னமாகும் மற்றும் அவளின் தனித்துவமான அழகின் கொண்டாட்டமாகும். 

இந்த ஒவ்வொரு தோற்றத்தையும் ஒழுங்கமைப்பதில், தங்கத்தை வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லாமல் விவரங்களைச் சொல்லவும் எப்படி விர்மானி பயன்படுத்துகிறார் மற்றும் மணப்பெண்ணின் தனித்துவமான ஆளுமையின் தெளிவான வெளிப்பாடாக திருமண உடைகளை எப்படி மாற்றுகிறார் என்பதைப் பாருங்கள்.

 

Royal Bride

வெளிவருகிறார், அதில் அவரது தோற்றம், கம்பீரமும் அழகும் கலந்த ஒரு கலவையாகும். அவருடைய ஒவ்வொரு நகையும், அது சோக்கர் நெக்லஸாக இருந்தாலும் சரி, டெம்பிள் நகைகளாக இருந்தாலும் சரி, அவருடைய பழம்பெரும் பாஸாவாக இருந்தாலும் சரி, அது செழுமையின் சான்றாகும், இது அரண்மனைகளின் சிறப்பையும், நீண்ட கால வம்சங்களின் பெருமையையும் பிரதிபலிக்கிறது.

 

Trendsetter Bride

என்பது வெலிங்டன் சம்மரின் ஒரு கண்ணோட்டமாகும். அவர் மரபுகளை மீறுகிறார், உலக அரங்கில் அவர் ஒரு இந்தியர் என்பதை உலகுக்குச் சொல்லும் நகைகளைத் தேர்வு செய்கிறார். அவரது ரோஸ் கோல்டு மெஷ் நகைகள் மற்றும் மெல்லிய அடுக்குகள் கொண்ட கழுத்து நகைகள் வெறும் அலங்காரப்பொருட்கள் அல்ல, அவை வழக்கமான அலங்காரங்களை ஏற்க மறுக்கும் அவரது வெளிப்பாடுகள்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 

A post shared by My Gold Guide (@mygoldguide)

 

Intimate bride

என்பது ஒரு தனிப்பட்ட கதைகளின் கொண்டாட்டமாகும். கிசுகிசுக்கப்படும் ரகசியங்களைப் போல அவளுடைய நகைத் தேர்வும் தனிப்பட்டதாகும். அவளது வண்ணமயமான காதணிகள், நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட அவளது வளையல்கள் மற்றும் கனமான கழுத்து நகை இல்லாதது அனைத்தும் அவளுடைய படைப்பாற்றல் மற்றும் சுய வெளிப்பாட்டின் ஒரு விரிவாக்கமாகும். அவளது நகைகளின் நுணுக்கம் சொல்லப்படாத மற்றும் மற்றவர்கள் அறியாத பொக்கிஷம் போன்ற காதல் கதைகளைப் பற்றி பேசுகிறது.

 

Boho bride

சுதந்திர மனப்பான்மையுடன் கூடிய தொகுப்பாகும், மணபெண்ணின் ஸ்டைல்  வழக்கத்திற்கு மாறான ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையாகும். போஹோ பீடிங்குடன் கூடிய அவளது ஸ்டேட்மென்ட் நெக்பீஸ் மற்றும் பெரிய கஃப் கொண்ட காதணிகள், கலாச்சாரங்கள் மற்றும் காலங்களின் கலவையாக இருக்கும் அவளது வாழ்க்கையின் மீதான காதலைக் கொண்டாடுகின்றன, மேலும் அவளது துணிச்சலை பிரதிபலிக்கின்றன.

 

Classic Bride

என்பது காலங்கடந்த தன்மைக்கான ஒரு அடையாளமாகும். அவளது உடைகள் பாரம்பரியத்தின் கதைகளை பேசுகின்றன, ஒவ்வொரு நகையும் அவளது மரபை பிரதிபலிக்கிறது. எளிமையான மாங் டிக்கா நுண்ணிய தங்க ஓட்டியானதிற்கு ஏதுவாக இருக்கும் அதே சமயம், தங்க சோக்கர் அவளது நீண்ட நெக்லேசுக்கு ஏற்றதாக இருக்கும், இது அவளது தோற்றத்தை முழுமையாக்குகிறது. அவள், அழகின் ஒரு உருவகமாகும், இந்திய மரபுகள் மற்றும் கைவினைத்திறனுக்கு மரியாதை செலுத்தும் பாரம்பரிய தங்கத்தின் பளபளப்பால் அவளது நேர்த்தி மெருகேற்றப்படுகிறது.

 

New Age Bride

என்பது நவீன பெண்மையின் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது, அவளது வசீகரம் வழக்கத்திற்கு மாறான அவளின் தேர்வுகளில் வேரூன்றியுள்ளது. வித்தியாசமானவற்றை ஏற்று, அவள் தங்க சோக்கரைத் ஒரு தலைக்கான அலங்காரமாக மாற்றுகிறாள், மேலும் தனது கழுத்து நகை மற்றும் காதணிகளுக்கு மேட் தங்கத்தைத் தேர்வு செய்கிறாள். அவளுடைய தேர்வுகள் வழக்கமான ஒன்றை மீறும்  அவளது உணர்வைப் பிரதிபலிக்கின்றன. அவள் அணியும் ஒவ்வொரு நகையும் அவளது தனித்துவமான பாதைக்கு ஒரு சான்றாகும், இது வெறும் ஸ்டைலுக்காக அணியப்படவில்லை, ஆனால் மணமகளின் அழகுக்கான அவரது நம்பிக்கை நிறைந்த வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைக்கான அறிவிப்பாக இருக்கிறது.

இந்த தோற்றங்கள் வெறும் ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மட்டுமல்லாமல் ஒரு இயக்கமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது மணப்பெண்களின் பன்முகத்தன்மை மற்றும் அவர்களின் தனித்துவமான ஆளுமைகளுக்கு சமர்பனமாகும், அனைவருக்கும் சமமான அலங்காரத்தை நிராகரித்து, தனித்துவத்தை கொண்டாடும் அணுகுமுறைக்கான அழைப்பாகும். இது தனிப்பட்ட விருப்பத்தின் கொண்டாட்டமாகும், நகைகள் வெறும் அலங்காரமாக மட்டும் இல்லாமல் மணப்பெண்ணின் உள் மனதை எதிரொலிக்க வேண்டும் என்ற நம்பிக்கை, அவளுடைய மிக விசேஷமான நாளில் அவளுடைய உண்மையான தோற்றத்தில் அவளை தனித்து நிற்கச் செய்கிறது.

டிரெண்டுகள் அதி வேகமானதாக இருக்கும் உலகில், இந்த திருமண தோற்றங்கள் காலம் கடந்து நிற்கின்றன, மேலும் இது, ஃபேஷனில் மணபெண்ணின் ஆற்றல் மிக்க தனிப்பட்ட வெளிப்பாடு உள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.