Published: 03 மே 2024

கண்கவரும் சிக்கிம் நகைகள்

Masthead image

சிக்கிம், 'தி லேண்ட் ஆஃப் தி தண்டர் டிராகன்'  கண்கவர் இயற்கைக்காட்சிகள், அழகான மலைகள் மற்றும் வளமான, மற்றும் பிரமிக்க வைக்கும் பாரம்பரியத்தை பறை சாற்றுகிறது. நேபாளம், திபெத் மற்றும் பூட்டான் ஆகிய அண்டை நாடுகளுடன் இந்த மாநிலம் அதன் பெரும்பாலான பாரம்பரியங்களைப் பகிர்ந்து கொள்கிறது, இதன் விளைவாக கலாச்சாரங்களின் தனித்துவமான கலவை ஏற்படுகிறது. நாட்டுப்புற நடனங்கள் முதல் பாரம்பரிய உடைகள், உணவுகள் மற்றும் பல்வேறு விஷயங்களில், சிக்கிம் தனது மனங்கவரும் நகைகளின் தனித்துவமான கலவையைக் கொண்டுள்ளது.

சிக்கிம் மக்கள், ஏராளமாகக் காணப்படும் இயற்கை பொருட்களால் ஈர்க்கப்படுகிறார்கள், அவை அவர்களின் நகைகளில் பிரதிபலிக்கின்றன. பெரும்பாலும் 24 மற்றும் 22 காரட் தங்கத்தைப் பயன்படுத்தி, இந்த மலைப்பகுதிகளில் எளிதில் கிடைக்ககூடிய நீலம் (டர்க்வாய்ஸ்) மற்றும் சிவப்பு பவளம் போன்ற விலைமதிப்பற்ற ரத்தினங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இவர்களின் நகைகள் ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. சில மதங்களில் தங்கம் புனிதமானதாகக் கருதப்படுகிறது, இதனால் இது சிக்கிம் நகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, அதேசமயம் நீலம் (டர்க்வாய்ஸ்) அல்லது சிவப்பு பவளம் பாதுகாப்பு குணங்களைக் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.

சிக்கிமில் உள்ள பெரும்பாலான நகைக்கடைக்காரர்களுக்கு, நகை தயாரிப்பது ஒரு தொழில் மட்டுமல்ல; இது பாரம்பரியத்தைப் போற்றிக் காப்பதாகும். சில சந்தர்ப்பங்களில், குடும்பங்கள் பல தலைமுறைகளாக நகைகளை உருவாக்கும் கலையில் ஈடுபட்டுள்ளன, மேலும் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு படைப்பும் தனித்துவமானது மற்றும் பாரம்பரிய கலைப் படைப்பாகும். அவர்களின் ஆபரணங்கள் ஒரு கதையைச் சொல்கின்றன மற்றும் அவர்களின் கலாச்சாரத்தையும் கைவினைத்திறனையும் உயிருடன் வைத்திருக்க அவை உதவுகின்றன.

இப்பகுதியின் பாரம்பரியங்கள், கலாச்சாரம் மற்றும் பிரமிக்க வைக்கும் கைவினைத்திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கிமின் ஐந்து கவர்ச்சிகரமான நகைகள் இங்கே உள்ளன.. அவற்றின் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் அவை அணியும் சந்தர்ப்பங்கள் ஆகியவற்றில் அவை வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

1. யென்சோ (காதுவளையங்கள்)

சிக்கிமின்  இருப்பிடம் மற்றும் அதன் கலாச்சார கலவையின் காரணமாக, யெஞ்சோ என்பது பூட்டானில் இருந்து உருவான ஒரு வகை காதணியாகும், இது பெரும்பாலும் பூட்டியா பெண்களால் அணியப்படுகிறது. அவை பாரம்பரியமாக தட்டையாகவும் வட்டமாகவும் இருக்கும். இந்த காதணிகள் ஒருவகை குறீயீடு கொண்டவை மற்றும் இவை கருணை, நேர்த்தி மற்றும் நல்ல அதிர்ஷ்டம் போன்ற அர்த்தமுள்ள செய்திகளை தெரிவிக்கின்றன.

Yencho earringsயென்சோ (காதுவளையங்கள்)

சிக்கிம் கைவினைஞர்களின் உயர்ந்த கைவினைத்திறனுக்கு யெஞ்சோ ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்தக் காதணிகள் பொதுவாக தங்கத்தால் செய்யப்படுகின்றன (அதன் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை மற்றும் பளபளப்பு காரணமாக) மற்றும் நீலம்  (டர்க்வாய்ஸ்)  மற்றும் சிவப்பு பவளக் கற்கள் கொண்டு பதிக்கப்படுகின்றன. சிக்கலான வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளை உருவாக்க கைவினைஞர்கள் தங்கம்/வெள்ளிக் கம்பிகளைக் கொண்டு ஃபிலிக்ரீ வேலைகளைச் செய்கிறார்கள்.

யெஞ்சோ திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில்  பொதுவாக அணியப்படுகிறது. பெண்கள் "கோ" என்று அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய உடையை அணிவார்கள், இது ஒரு வண்ணமயமான, பட்டுத்துணியால் சுற்றிக்கொள்வது போன்றது மற்றும் பெரும்பாலும் இந்த உடையுடன் யெஞ்சோ காதணிகளை அணிவார்கள்.

2. காவ் (பதக்கம்)

பூட்டானிய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட காவ் பதக்கமானது பூட்டானிய மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது மற்றும் ’மண்டலா’ (வாழ்க்கை எனும் வட்டம்) என்பதின் குறியீட்டைப் பிரதிபலிக்கிறது. இதன் பதக்க வடிவம், வட்டமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருந்தாலும், அது பூட்டியா பழங்குடியினரின் மத நம்பிக்கைகளைக் குறிக்கிறது.

Khao pendantகாவ் பதக்கம்

காவ் பதக்கங்கள் செழிப்பு மற்றும் தூய்மையின் குறியீடுகளாகும். பல தலைமுறைகளாக அணியப்பட்டு வந்திருக்கும் இவை, பெரும்பாலும் ஒரு குடும்பத்தின் பாரம்பரியத்தைக் குறிக்கின்றன மற்றும் திருமணமான பெண்களால் அணியப்படுகின்றன, இது திருமணம் எனும் பேரின்பத்தைக் குறிக்கிறது. ஒரு காலத்தில், இது ஒரு நலம் தரும் தாயத்துப்பெட்டியாக இருந்தது, ஆனால் இப்போது அது மணமகளை தீங்கிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் சிக்கலான வடிவமைப்பிற்கு பின்புறம் ஒரு சிறிய பெட்டி வடிவம் இருந்தது, அதில் ஒரு தாயத்து வைக்கப்பட்டிருக்கும். இது- செழிப்பு, கருவுறுதல் மற்றும் போருக்கு செல்வோருக்கு பாதுகாப்புக்கு என பல்வேறு காரணங்களுக்காக அணியப்பட்டது.

விருப்பம் மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகம் தேர்வு செய்யப்பட்டு, விரிவான வடிவமைப்புகள் மற்றும் மோடிஃப்கள் கொண்டு அனைத்து அளவுகளிலும் பதக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கும், இந்த பதக்கத்தில் பொறிக்கும் தொழில்நுட்பம் உள்ளடங்கி இருக்கும். நீலம் (டர்க்கைஸ்) மற்றும் சிவப்பு பவளம் போன்ற விலையுயர்ந்த ரத்தினக் கற்களுடன் நுண்ணிய ஃபிலிகிரி வேலைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். சில காவ் பதக்கங்கள் எனாமல் வேலைகளைக் கொண்டிருக்கும், இது அசல் உணர்வுடன் கூடிய வடிவமைப்பை உருவாக்குகிறது.

பெண்கள், நெய்யப்பட்ட துணியால் போர்த்திக்கொள்வது போன்ற உடையான ‘டுபியுக்சென்’ என்ற உடையுடன்  காவ் பதக்கங்களை  ஜோடி சேர்ப்பார்கள். இவை பொதுவாக திருமணங்கள் போன்ற கலாச்சார நிகழ்வுகளின் போது அணியப்படுகின்றன அல்லது பரிசளிக்கப்படுகின்றன, குறிப்பாக  திருமணமான பெண்களால் அணியப்படுகின்றன.

3. டியூ (தங்க வளையல்)

டியூ, ஒரு ஜோடி கெட்டியான மற்றும் கனமான தங்க வளையல்கள், பாரம்பரியமாக சிக்கிம் பெண்கள் அணிவதாகும், இது ஒரு உண்மையான கலை வடிவமாகும். இது நேபாளத்தில் இருந்து வந்திருந்தாலும், சிக்கிமில் உள்ள போன் மதத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்ட டியூ, பூட்டானிய மற்றும் லெப்ச்சா கலாச்சாரங்களின் கலவையாகும், இது 14 ஆம் நூற்றாண்டில் திபெத்தின் காம் மாவட்டத்தில் இருந்து இந்த கைவினைத்திறனைக் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது. பல குடும்பங்களில் அவர்களின் பாரமரியத்தைப் பாதுகாக்கும் வகையில், இந்த வளையல்கள் பரம்பரை பரம்பரையாக கொண்டு செல்லப்படும் பரம்பரைச் சொத்தாக இருக்கின்றன.

Diu (Gold Bangle)டியூ (தங்க வளையல்)

டியூ வளையல்களைத் தயாரிப்பது என்பது தங்கத்தை உருக்கி, வட்ட வடிவில் வடிவமைத்து, பளபளப்பான மேற்தோற்றம் மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் ஒரு மெருகூட்டலை உள்ளடக்கிய ஒரு சிக்கலான செயல்முறையாகும். இதில், கைவினைஞர்கள் ஃபோர்ஜிங் மற்றும் செதுக்குதல் போன்ற பல்வேறு பாரம்பரிய நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த தங்க வளையல்கள் திருமணத்தில் மகிழ்ச்சி, வலிமை மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கின்றன மற்றும் பெரும்பாலும் அன்பின் பரிசுகளாகக் கருதப்படுகின்றன.

திருமண நாளில் மணமகள் தன் இரு மணிக்கட்டுகளிலும் இந்த தங்க டியூ வளையல்களை அணிவார்.  பின்னர், தங்கள் திருமண நிலையை அடையாளப்படுத்த, பெண்கள் இதை தினசரி அணிந்துகொள்கிறார்கள். பூட்டியா பெண்கள் 'பாகு' அல்லது டுகுசென் (லெப்சா பெண்களுக்கு) போன்ற சிறப்பு உடைகளை அணிந்து, தங்கள் பாரம்பரிய தோற்றத்தை நிறைவு செய்ய தங்கள் மணிக்கட்டை டையூ வளையல்களால் அலங்கரிக்கின்றனர்.

4. ஜோகோ (மோதிரம்)

ஜோகோ மோதிரம் பூட்டானிய கலாச்சாரத்துடன் தன் வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறது மற்றும் ஒரு கலாச்சார இணைவின் சரியான தயாரிப்பு ஆகும். ஆண்கள் பொதுவாக நகைகள் அணிவதில்லை ஆனால் நிச்சயதார்த்த மோதிரமாக ஜோகோவை அணியலாம்.

Joko ringsஜோகோ மோதிரங்கள்

மோதிரங்கள் தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்டவை, மையத்தில் சிவப்பு பவளம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரங்களை உருவாக்க கைவினைஞர்கள் வார்த்தல், செதுக்குதல் மற்றும் பொறித்தல் போன்ற முறைகளைப் பயன்படுத்துகின்றனர். அவை வசதியானதாகவும், நேர்த்தியானதாகவும், தினமும் அணியக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மோதிரம் என்பது திருமணங்கள் மற்றும் நிச்சயதார்த்தங்களின் போது தம்பதிகளிடையே அடிக்கடி பரிமாறப்படும் ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பின் சின்னமாகும், இது ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு மற்றும் பாசத்தின் அடையாளமாகவும் உள்ளது

5. கிளிப் (தலை ஆபரணம்)

'கிலிப்ஸ்' அல்லது கிளிப் எனப்படும் தலை ஆபரணங்கள் பாரம்பரிய மணப்பெண் திருமண அலங்காரமாகும். இவை தங்கத்தில் இருந்து வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான அணிகலன்கள் மற்றும் நுணுக்கமான, இயற்கையால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகள், பொதுவாக நிலவின் சுழற்சியில் உள்ள பல்வேறு வடிவங்களான - முழு நிலவு அல்லது பிறை வடிவங்கள், இந்த அணிகலன்களில் குறிப்பாக விரும்பப்படும் வடிவங்களாகும். கிளிப்பில் பொறிக்கப்பட்ட அல்லது செதுக்கப்பட்ட வடிவமைப்புகள் இயற்கையை மையமாகக் கொண்டவை மற்றும் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகள் சிக்கிம் குறியீடுகளின் உண்மையான படைப்புகளாகும்.

திருமண நாளில் மணப்பெண்ணின் அழகை அதிகரிப்பதில் கிலிப்ஸ் சிறப்பு முக்கியத்துவம் பெற்றதாகும். கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களின் போது நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட தலை ஆபரணங்கள் அணியப்படுகின்றன.

Kilipகிளிப்

இதர சிக்கிம் நகைகள்

காந்தா, சிவப்பு நூலில் கோர்க்கப்பட்ட தங்க கழுத்து ஆபரணம், இது மூதாதையர் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. சிக்கிமின் முடியாட்சி முடிவுக்கு வந்த பிறகு, கைவினைஞர்கள் சிறிய காந்தா நெக்லஸ்களை உருவாக்கி, அவற்றை அனைவரும் அணிவதற்கு வழி வகுத்தனர். நேபாளத்தினர் இதை ஒரு ஃபேஷன் அணிகல்னாக அணிந்தனர்.

Kantha

நவ்கேடி, (நவ் என்றால் ஒன்பது, இது கலாச்சார அடையாளத்தின் ஒரு வலுவான குறியீடாகும்) என்பது ருத்ராட்சக் கொட்டையைப் போன்று ஒன்பது பின்னப்பட்ட தங்க நூல்களால் செய்யப்பட்ட ஒரு பாரம்பரிய நெக்லஸ் ஆகும், மேலும் இது சிவபெருமான் போன்ற நற்பண்புகளைக் கொண்ட கணவனை விரும்பும் பெண்களால் அணியப்படுகிறது.

Naugedi

தில்ஹரி என்பது சிவப்பு அல்லது பச்சை மணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு நீண்ட நெக்லஸ் ஆகும். திருமண நாளில், பச்சை மணிகள் அணியப்படுகின்றன, திருமணத்திற்குப் பிறகு சிவப்பு மணிகள் விரும்பப்படுகின்றன. பதக்கத்தில் ஏழு ஆழமான கோடுகள் உள்ளன, இது வாரத்தின் நாட்களைக் குறிக்கிறது மற்றும்

வாழ்க்கையின் தொடர்ச்சியைக் குறிக்கிறது. இது பம்பர வடிவமானது, வாழ்க்கையின் சுழற்சி வடிவத்தைக் குறிக்கிறது மற்றும் கருவுறுதல், வீரியம் மற்றும் வேட்கை ஆகியவற்றைக் குறிக்கிறது. இதன் மேடான பகுதிகள் ருத்ராக்ஷ கொட்டைகளைக் குறிக்கின்றன

Tilhari

நேபாள நகைகளில் சர்-பாண்டி, டிக்மலா, புலாகி மற்றும் துங்ரி ஆகியவையும் அடங்கும். இந்த ஆபரணங்கள் திருமணமான பெண்களால் தினசரி மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு அணியப்படுகின்றன.

சிக்கிம் நகைகள் கலாச்சார இணைவு மற்றும் பாரம்பரியம் மற்றும் சிக்கிம் மக்களின் நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். ஒவ்வொரு ஆபரணத்திற்கும் அதன் சொந்த கலாச்சார அடையாளத்துடன் அதன் முக்கியத்துவத்தைச் எடுத்துச்சொல்லும் ஒரு கதை உள்ளது. கைவினைஞர்களின் பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறன், அவர்கள் அதன் ஒவ்வொரு பகுதியையும் தயாரிப்பதில் அதன் வரலாறு என்ன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த கண்கவர் அணிகலன்களை பற்றி தெரிந்துகொள்வது எவருக்கும் ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.