Published: 28 மே 2024

சிக்கிமின் கையால் செய்யப்பட்ட தங்க நகை கலை வடிவங்கள்

சிக்கிம் கைவினைஞர்கள் தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை பூட்டியா, நேபாளி மற்றும் லெப்சா சமூகங்களுக்காக ஒவ்வொரு பளபளப்பான தங்க நகை உருவாக்கத்திலும் சேர்க்கின்றனர். அவர்களின் நுணுக்கமான வேலைப்பாடுகள், பரம்பரியமாக் கொண்டு வரப்பட்டு, காவோ, காந்தா, நௌகேடி மற்றும் ராணி ஹார் போன்ற தனித்துவமான கலை வடிவங்களுக்கு உயிர் கொடுக்கின்றன.

வெறும் அலங்காரங்கப் பொருட்கள் என்பதை விட, இந்த தங்க நகைகள் நம்பிக்கை மற்றும் செழுமையின் சின்னங்களாக விளங்குகின்றன. திருமணங்கள் மற்றும் மத விழாக்கள் போன்ற சடங்குகள் மற்றும் நிகழ்வுகளில் இவை பிரதானமாக இருப்பதுடன், இவை அந்தஸ்தின் சின்னங்களாகவும் பார்க்கப்படுகின்றன.

நுண்ணிய உலோக வேலைப்பாடுகள், நுட்பமான செதுக்கல்கள் மற்றும் துல்லியமான விவரங்கள் போன்ற அதிகம் அறியப்படாத நுட்பங்களின் தேர்ச்சியை இந்த நகைக் கலைவடிவங்கள் கொண்டிருக்கின்றன. மேலும் அவை பாரம்பரிய முறையில் கையாளப்படும் கருவிகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தி திறமையான கைவினைஞர்களால் உருவாக்கப்படுகின்றன.

ஒரு சமூகத்தின் ஆன்மீக வேர்களுடன் மிகவும் ஆழமாக பின்னிப்பிணைந்த இந்த நகைகளின் பாரம்பரியம் மற்றும் கைவினைச் சிறப்பை நாம் கொண்டாடுவோம். ஒவ்வொரு பளபளப்பான கையால் வடிவமைக்கப்பட்ட நகைகளும் சிக்கிமின் கதையை அதன் கைவினைஞர்களின் கைகளால் கூறுகின்றன.