Published: 04 நவ 2021

தங்க எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்?

gold and graph

ஒரு தங்க எதிர்கால ஒப்பந்தம் என்பது எதிர்கால தேதியில் ஒப்புக்கொள்ளப்பட்ட விலையில் ஒரு பொருளை வாங்க அல்லது விற்பதற்கான ஒரு சட்டபூர்வ ஒப்பந்தமாகும். அங்கீகரிக்கப்பட்ட தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் தானாகவே தரப்படுத்தப்பட்டது மற்றும் இது பொருட்கள் அல்லது நிதி சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். எக்ஸ்சேஞ்ஜ் வர்த்தகம், முறையான ஒப்பந்தங்கள் போன்ற வடிவில் இருக்கும் தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகம் செய்யப்படும் பொருட்களில் ஒன்று தங்கமாகும்.

தங்கம் பல நூற்றாண்டுகளாக நாணயங்கள், பார்கள் மற்றும் நகைகள் போன்ற நேரடியான வடிவங்களில் வாங்கப்பட்டு மற்றும் விற்கப்படுகிறது. காலப்போக்கில் தங்க வர்த்தகமானது தங்க பரிமாற்ற வர்த்தக நிதிகள், தங்கப் பத்திரங்கள், டிஜிட்டல் தங்கம் போன்ற சில வடிவங்களை உள்ளடக்கியதாக உருவாகியுள்ளது. தங்க எதிர்கால சந்தையில் செயல்படும் முதலீட்டாளர்கள் பரவலாக முன்கணிப்பு வணிகர்கள் அல்லது பரிசை முதலீட்டாளர்களும் ஆவார்கள் லாபம் சம்பாதிக்கும் நம்பிக்கையுடன் முன்கணிப்பு வணிகர்கள் சந்தை அபாயத்தை எடுத்துக்கொள்கிறார்கள், அதே சமயம் பரிசை முதலீட்டாளர்கள் தங்க எதிர்கால ஒப்பந்தங்களில் முதலீடு செய்து பாதகமான விலை இயக்கங்களின் அபாயத்தை சமாளிக்கின்றனர். நோக்கம் எதுவாக இருந்தாலும், தங்க எதிர்கால வர்த்தகத்தை நிதி மற்றும் பொருட்கள் சந்தை பற்றிய நல்ல அறிவு உள்ள முதலீட்டாளர்களால் மட்டுமே திறமையாக செய்ய முடியும். அவர்களின் அறிவு, சந்தை அபாயத்தை நிர்வகிக்க உதவுவது மட்டுமல்லாமல், தங்க எதிர்கால ஒப்பந்தத்தின் செலவுகள் மற்றும் அம்சங்களைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

இந்தியாவில் தங்க எதிர்காலத்தின் பல்வேறு அம்சங்கள் 

தங்க எதிர்காலம் இந்தியாவில் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) வர்த்தகம் செய்யலாம். தங்க எதிர்கால வர்த்தகம் என்பது நேரடியாக தங்கத்தை பெறாமல் தங்கத்தில் முதலீடு செய்வதாகும் தங்க எதிர்கால முதலீட்டாளர்களின் நோக்கம் தங்கத்தை வைத்திருப்பது அல்லது அதில் முதலீடு செய்வது அல்ல. தங்கத்தின் விலை மற்றும் அதன் இயக்கத்தை அவர்கள் தங்கள் அபாயங்களைத் தடுக்க ஒரு ஊடகமாகப் பயன்படுத்துகின்றனர். 

தங்க எதிர்காலத்தின் வகைகள்: MCX இல் தங்க எதிர்காலத்தின் வர்த்தகம் பல்வேறு தொகுப்பு அளவுகளில் நடைபெறுகிறது. ஒரு தொகுப்பின் அளவு உங்கள் பரிவர்த்தனையின் மதிப்பை நிர்ணயிக்கும் 1 கிலோ தங்கத் தொகுப்பு தவிர, இந்தியாவில் தங்க எதிர்கால வர்த்தகத்தில் நுழையக்கூடிய கோல்ட் மினி, கோல்ட் பெட்டல் மற்றும் கோல்ட் கினியா ஒப்பந்தங்களும் உள்ளன. ஒரு மினி ஒப்பந்தம் 100 கிராம், கினியா 8 கிராம், பெட்டல் 1 கிராம் ஆகும். இருப்பினும், 1 கிலோ தங்கம் மிகவும் பிரபலமாக வர்த்தகம் செய்யப்படுகிறது, எனவே, மிகவும் புழக்கம் வாய்ந்தது

தங்க எதிர்கால ஒப்பந்தம்: ஒப்பந்த வெளியீட்டு காலண்டரின் படி MCX இல் தங்க எதிர்காலம் கிடைக்கிறது. MCX தங்க ஒப்பந்தங்கள் தற்போது ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் வெளிடப்படுகிறது அதன் காலாவதி 12 மாதங்கள் ஆகும். வெளியீட்டு மாதத்தின் 16 வது நாளில் ஒப்பந்தம் தொடங்குகிறது மற்றும் காலாவதி மாதத்தின் 5 வது நாள் வரை அதை வர்த்தகம் செய்யலாம். தங்க விலைப்புள்ளி 10 கிராமுக்கு வழங்கப்படுகிறது, அங்கு வர்த்தக அளவு 1 கிலோ, மற்றும் அதிகபட்ச ஆர்டர் அளவு 10 கிலோவாக இருக்கும்.

தீர்வு நடைமுறை: ஒரு தங்க எதிர்கால ஒப்பந்தத்தில் அதன் தீர்வு ஒவ்வொரு மாதத்தின் 5 ஆம் நாள் நடக்கிறது நீங்கள் ஒப்பந்தத்தை தீர்வு செய்து கொள்ளலாம் (நேரடியாக தங்கத்தைப் பெற்றுக்கொள்வது) அல்லது மாதத்தின் முதல் நாளுக்கு முன் அனைத்து வர்த்தகத்தையும் வாங்கலாம் அல்லது விற்கலாம். நீங்கள் ஒப்பந்தத்தைத் தீர்த்துக்கொள்வதைத் தேர்வு செய்தால் அது 995 தூய்மையுடன் உள்ள தங்கக் கட்டிகளின் வடிவத்தில் இருக்கும்.

மார்ஜின்: உண்மையான மார்ஜின் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், பிப்ரவரி 2022 தங்க ஒப்பந்தத்தில் ஆரம்ப மார்ஜின் 6% அல்லது SPAN மார்ஜின் இவற்றில் எது அதிகமோ அதில் அமைக்கப்பட்டிருக்கும். எனவே, தங்க எதிர்கால ஒப்பந்தத்தில் உங்கள் நிலை ரூ .1 லட்சமாக இருந்தால்,மார்ஜின் கட்டணம் ரூ .6,000 ஆக இருக்கும். ரூ. 6,000 மட்டுமே செலுத்தி ரூ .1 லட்சம் வெளிப்படுவது அதிக லாபம் ஈட்டுவதற்கான சாத்தியம் அதிகம் என்று பொருள். நீங்கள் ஒப்பந்தத்தை தீர்த்துக்கொண்டால், பொருந்தக்கூடிய வரிகள் உட்பட அடிப்படை தங்கத்தின் முழு மதிப்பையும் நீங்கள் செலுத்த வேண்டும்.

நேரடி தங்கம்: MCX தங்க எதிர்கால ஒப்பந்தங்களில் உள்ள நேரடி தங்கம் லண்டன் புல்லியன் வணிகர் சங்கம்-சான்றளிக்கப்பட்ட சுத்திகரிப்பு ஆலைகளால் தூய்மைக்காக சான்றிதழ் பெற்றது. MMTC-PAMP என்பது இந்தியாவில் LMBA சான்றளிக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும் தங்கம், நாணயங்கள் உட்பட, மின்னணு வடிவத்தில் MCX இன் கிளியரிங் கார்ப்பரேஷனின் COMRIS அமைப்பில் வைத்திருக்கலாம். வழங்கப்பட்ட அல்லது வைத்திருக்கும் அனைத்து தங்கமும் தனிப்பட்ட மதிப்பீட்டு சான்றிதழ் மற்றும் குறிப்பிடப்பட்ட தயாரிப்புக் கட்டணத்தைக் கொண்டிருக்கும். மின்னணு முறையில் வைத்திருக்கும் தங்கத்தை எளிதாக வர்த்தகம் செய்து பணமாக்கலாம்.

தங்க எதிர்கால ஒப்பந்தத்தை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளுதல்:

  • நீங்கள் இப்பொழுது ஒரு தங்க எதிர்கால ஒப்பந்தத்தில் நுழைகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் தங்கத்தின் கடைசி வர்த்தக விலை ரூ. 10 கிராமுக்கு ரூ. 50,000, உங்கள் ஒப்பந்த மதிப்பு 1 மினி தொகுப்புக்கு ரூ. 50 லட்சமாக இருக்கும்
  • MCX டிக் அளவு அல்லது குறைந்தபட்ச விலை இயக்கம் ஒரு கிராமுக்கு ரூ .1 ஆகும். எனவே, இந்த ஒப்பந்தத்தில், ஒவ்வொரு ரூபாயிலும் அதிகரிப்பு அல்லது குறைவு ஏற்படும்போது நீங்கள் ரூ .100 பெறலாம் அல்லது இழக்கலாம். இதுதான் ஒப்பந்தத்திலிருந்து நீங்கள் பெறும் லாபம் அல்லது நஷ்டம்

தங்க எதிர்காலத்தில் வர்த்தகம் செய்வதன் வழிமுறைகள் என்ன?

  1. முதன் முதலில், நீங்கள் MCX இல் பதிவுசெய்யப்பட்ட ஒரு தரகருடன் ஒரு பொருள் வர்த்தகக் கணக்கைத் திறக்க வேண்டும். கணக்கைத் திறப்பதற்கு ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும் மற்றும் அடையாளம் மற்றும் இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி விவரங்கள் போன்ற அடிப்படை KYC ஆவணங்களை வழங்க வேண்டும். 
  2. உங்கள் கணக்கைத் திறந்தவுடன், நீங்கள் மார்ஜின் பணத்தை ஒரு மார்ஜின் கணக்கில் தரகரிடம் டெபாசிட் செய்ய வேண்டும். தங்க எதிர்கால ஒப்பந்த ஆவணத்தில் மார்ஜின் விகிதத்தைக் காணலாம். வர்த்தக இழப்புகள் காரணமாக உங்கள் ஆரம்ப மார்ஜின் தொகை குறையுமானால், நீங்கள் ஒரு பராமரிப்பு மார்ஜின் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். ஆரம்ப மார்ஜினைப் பராமரிக்க செலுத்த வேண்டிய தொகை இது. 

இந்த பணத்தை நீங்கள் பரிமாற்றம் செய்தவுடன், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் இரவு 1130 மணி வரை லாக் இன் செய்து தங்க எதிர்காலத்தில் வர்த்தகம் செய்யலாம்.

தங்க எதிர்கால முதலீட்டாளருக்கு தங்க முதலீடுகள், அதன் மீது பொருளாதாரத்தின் செல்வாக்கு மற்றும் தங்க வர்த்தக சூழல் அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்க எதிர்கால ஒப்பந்தங்களில் ஆபத்து மற்றும் வெகுமதி ஆகிய இரண்டும் மிக அதிகமாக இருப்பதால் மேற்கூறிய அம்சங்களைப் பற்றிய முழுமையான புரிதல் இருக்கவேண்டும் என்று மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.