Published: 04 நவ 2021

இப்படித்தான் ரக்‌ஷா பந்தனுக்கு தங்கம் ஒரு சிறந்த பரிசாக இருக்கும்

ரக்ஷா பந்தன் இந்திய துணைக் கண்டத்தில் மிகவும் மதிப்புடன் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். பெரும்பாலான உறவுகள் சிதறக்கூடியதாகவும் மற்றும் நிலையற்றக்கூடியதாகவும் இருக்கும் காலகட்டத்தில், சகோதர பிணைப்பு என்பது நீங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய ஒன்றாகும். ரக்ஷா பந்தன் என்பது பெரும்பாலான குடும்பங்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாகும், ஏனென்றால் அவர்கள் சகோதர சகோதரிகளுக்கிடையேயான பிணைப்பை தொடர்ந்து மதிக்கிறார்கள் - இரத்த சம்பந்தம் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும். மக்கள் தங்கள் சிறந்த பாரம்பரிய உடைகளை அணிந்து, நல்ல நகைகளை அணிந்து கொண்டு, கொண்டாட்டங்களை இனிப்புகள், உணவு மற்றும் பரிசுகளை பரிமாறிக் கொண்டாடுகிறார்கள். சகோதர சகோதரிகளுக்கிடையேயான என்றுமே நீடித்திருக்கும் உறவை அடையாளப்படுத்த தங்கத்தை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. அதிர்ஷ்டவசமாக, தங்கம் ஒரு பிரத்தியேகமான விருப்பமாகும் மற்றும் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது, எனவே சரியான பரிசை கண்டுபிடிப்பது கடினமான காரியமல்ல. 

உன்னதமான வழியில் செல்லுங்கள்

நீங்கள் தங்க நகைகளை வாங்குவதில் புதியவராக இருந்தால் அல்லது உங்கள் உடன்பிறப்புகளின் விருப்பம் பற்றி உறுதியாக தெரியாவிட்டால், தங்க நாணயங்கள் அல்லது தங்கக் கட்டிகள் சில பாதுகாப்பான விருப்பங்களாகும். அவை மதிப்புமிக்கவை மட்டுமல்ல, உங்கள் உடன்பிறந்தவரின் விருப்பத்திற்கும் ஸ்டைலுக்கும் பொருந்தக்கூடிய வகையில் ஒரு நகையாகவும் அவற்றை உருக்கி மாற்ற முடியும். சில தங்க சில்லறை விற்பனையாளர்கள் தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகளில் பிரத்தியேக ராக்கி வடிவமைப்புகளை பொறித்து, இந்தப் பரிசை இன்னும் மறக்கமுடியாத மற்றும் நிகழ்வுக்கு பொருத்தமானதாகவும் ஆக்குகிறார்கள். 

தங்க ராக்கிகள்  

 gold jewellery
Jewellery Credits: Vaibhav Jewellers 

கடந்த சில வருடங்களாக, தங்க ராக்கிகள் மிகவும் பிரபலமான பரிசுப் பொருள்களாகி விட்டன. இந்த ராக்கிகள் உங்கள் பாசத்திற்கான நினைவுப் பரிசு மட்டுமல்ல; தங்க உலோகம் அவற்றை அதிக நீடித்ததாக ஆக்குகிறது. சகோதரர்கள் பொதுவாக ராக்கியைப் பெறுபவர்களாக இருந்தாலும், இந்தியாவின் சில பகுதிகளில் லம்பா ராக்கியைக் கொண்டாடுகிறார்கள், அந்த சமயத்தில் ஒருவரின் அன்ணிக்கு ராக்கி பரிசளிப்பது வழக்கமாக இருக்கிறது. இன்று, மலர் வடிவங்கள் மற்றும் ஆன்மீக சின்னங்கள் முதல் சமகால நுண்ணிய கலை வடிவங்கள் மற்றும் பல அழகான வடிவமைப்புகளில் பரந்த அளவிலான தங்க ராக்கிகளை நீங்கள் காணலாம். நீங்கள் இந்த ராகிகளை சிறப்பு உருவங்கள் அல்லது எழுத்துக்கள் கொண்டு தனிப்பயனாக்கலாம், இதனால் அவை பதக்கங்களாக மாறலாம். 

தங்கக்காப்பு 

 gold jewellery
Jeweller Credits: Gold kada Plain (Curated by the Brand Poonam Soni)

அதன் காலங்கடந்த கவர்ச்சி காரணமாக காப்புகள் ஆண்களின் மிகவும் பிரபலமான அணிகலனாக உள்ளது. அனைத்து வகையான ஆடைகளுக்கும் பொருத்தமாக இருப்பதால், அன்பு, இரக்கம் மற்றும் தூய்மை நிரம்பிய உறவின் அடையாளமாக உங்கள் சகோதரருக்கு தங்கக்காப்பை பரிசளிப்பதை நீங்கள் பரிசீலிக்கலாம். உட்புறமாக ஒரு சிறப்பு செய்தி அல்லது உங்கள் சகோதரரின் பெயரை பொறிப்பதன் மூலம் நீங்கள் பரிசை தனிப்பயனாக்கலாம்.

பிரேஸ்லெட்கள் அல்லது காது வளையங்கள்

 gold jewellery
Jeweller Credits: Gold Kada Plain (Curated by the Brand Poonam Soni)

மறுபுறம், நீங்கள் உங்கள் சகோதரிக்கு ஒரு நேர்த்தியான பரிசைத் தேடுகிறீர்களென்றால், தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட நுண்ணிய சந்த்பாலிகள் ஒரு சிறந்த பரிசாக அமையும். பெயர் குறிப்பிடுவது போல, சந்த்பாலிஸ் என்பது பிறை நிலவு வடிவ காதணிகள் ஆகும், அவை பெரும்பாலும் படிகங்கள் அல்லது ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு மற்றும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டவை ஆகும். அவற்றின் நுண்ணிய ஆனால் விழாக்கால வடிவமைப்பு, பண்டிகை மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாக அமைகிறது. பல ஆடைகளுக்கு ஏற்றது போல் விரும்பினால், ஒரு தங்க வளையல் - சாதாரண அல்லது வைரங்கள் அல்லது பிற ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டவை - பாரம்பரிய மற்றும் சமகால ஆடைகளுடன் நன்றாக ஒத்துப்போகும். 

டிஜிட்டல் தங்கம்

 smartphone
 

நீங்கள் பரிசளிக்கக்கூடிய தங்கத்தின் மற்றொரு மறைமுக வடிவம் டிஜிட்டல் தங்கம். பாதுகாப்பாக சேமித்து வைக்கும் கவலை இல்லாமல் 24 காரட் தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு நம்பிக்கைக்குரிய விருப்பமாகும். நீங்கள் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யும்போது, அது உங்கள் உரிமையில் உள்ள MMTC-PAMP பெட்டகங்களில் சேமிக்கப்படுகிறது. MMTC-PAMP இலிருந்து 24 காரட் அல்லது 999.9 தூய தங்க நாணயங்கள் அல்லது தங்கக் கட்டிகளாக எந்த நேரத்திலும் அதை மீட்டெடுக்கலாம். டிஜிட்டல் தங்கம் வாங்கும் போது நீங்கள் பரிவர்த்தனை கட்டணம் அல்லது செய்கூலி செலவு எதுவும் உங்களுக்கு இல்லை என்பது அதன் சிறப்பம்சமாகும். கூடுதலாக, நீங்கள் பல மொபைல் பேமெண்ட் விருப்பங்கள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் எந்த மதிப்புக்கும் தங்கத்தை வாங்கலாம். 

முடிவுரை

தங்கம் ரக்ஷா பந்தனுக்கு ஒரு சிறந்த பரிசு தேர்வாக அமைகிறது ,ஏனெனில் இது பாரம்பரியமானது மட்டுமல்லாமல், பன்முகத்தன்மை கொண்டது, மேலும் அதன் மதிப்பு காலப்போக்கில் அதிகரிக்கிறது, உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பணவீக்கத்திலிருந்து பாதுகாப்பை அது உறுதி செய்கிறது. நீங்கள் நகைகள், நாணயங்கள், தங்க ETFகள், டிஜிட்டல் தங்கம் அல்லது சவரன் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தாலும், தங்கப்பரிசு என்பது ரக்ஷா பந்தன் பண்டிகையைப் போல புனிதமானது மற்றும் சக்தி வாய்ந்ததாகும். நீங்கள் தங்கத்தை பரிசாக அளிக்கும்போது, நீங்கள் வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு பாதுகாப்பையும், என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு தருணத்தையும் பரிசளிக்கிறீர்கள்.