Published: 28 அக் 2021

ஏன் 2021 தங்கத்தில் முதலீடு செய்ய ஏற்ற ஆண்டு

gold bars

வரலாற்று ரீதியாக, பலவீனமான நாணய மதிப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றிற்கு எதிராகவும் மற்றும் நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீடாகவும் தங்கம் ஒரு நல்ல பாதுகாப்பு அரண் என்பதை நிரூபித்துள்ளது. தொற்றுநோய் உலகளவில் அதிகரித்தபோது, தங்கத்தின் தேவை அதிகரித்தது என்ற உண்மையை, 2020 ஆம் ஆண்டில் நாம் கண்டோம்.

தொற்றுநோயின் பின்னணியில் 2020 இல் தங்கம் ஒரு பிரதான முதலீடாக இருந்தது. இரண்டாவது அலை வடிவத்தில் அது மீண்டும் வரும்போது, 2021 ஆம் ஆண்டும் அதே போன்ற சவால்கள் வரக்கூடும் இதன் காரணமாகவே தங்கம் மிகவும் மதிப்புமிக்க முதலீடாக உள்ளது- ஏனென்றால் பொருளாதார நெருக்கடியின் போது கூட அதன் மதிப்பை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

தங்க அடிப்படைகள்

தங்கம் ஒரு பழமையான முதலீடாகும், மேலும் குறுகிய காலத்திற்கு விலை ஏற்ற இறக்கங்களை எதிர்பார்க்கலாம் என்றாலும், அதன் இணக்கத்தன்மை விவாதத்திற்குரிய ஒரு விஷயமாக இருந்ததில்லை. இது உண்மைதான், ஏனெனில் தனிநபர் மற்றும் அரசாங்க மட்டங்களில் தங்கத்திற்கு தேவை உள்ளது (உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வெளிநாட்டு இருப்புக்களாக சேமித்து வைக்கின்றன). இன்று, உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கத்தை பாரம்பரிய பங்குகள் மற்றும் பத்திரங்களுக்கு மாற்றாக பார்க்கிறார்கள், ஏனெனில் இது இடர்-சரிசெய்யப்பட்ட வருமானம் மற்றும் போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தலை உறுதி செய்கிறது. இதனால்தான் உங்கள் போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியை தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் நல்ல யோசனையாக இருக்கும்.

தங்கத்தின் இணக்கம் அதிகரித்துள்ளது

பல ஆண்டுகளாக, முதலீட்டாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்கத்தை ஒரு பிரதான சொத்தாகப் பார்க்கத் தொடங்கினர். 2001 முதல் உலகளாவிய தங்கத்தின் தேவை சராசரியாக 15% ஆக அதிகரித்துள்ளதுடன், அதே காலகட்டத்தில், தங்கத்தின் விலை சுமார் பதினொரு மடங்கு அதிகரித்துள்ளது. தனிநபர்கள் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற பாரம்பரிய முதலீடுகள் தங்கள் போர்ட்ஃபோலியோவிற்கு பாதுகாப்பை சேர்க்க போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இது மற்ற சொத்துக்களுடன் தொடர்பில்லாதது மற்றும் அதிக பணப்புழக்கத்துடன் இருப்பது மற்றும் முதலீட்டாளர்களின் முதலீடுகள் அனைத்துமே நெருக்கடி காலங்களில் பாதிக்கப்படாது என்பதை உறுதி செய்கிறது. கடந்த ஆண்டு தங்கத்தின் செயல்திறன் அதன் இணக்கத்தை அதிகரித்தது மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு கருவியாக முன்னணியில் இருந்து வருகிறது.

தங்கம் ஒரு பொருளாக

பொருட்களின் குறியீட்டில் தங்கம் ஒரு முக்கிய அங்கமாகும். இருப்பினும், இது மற்ற சொத்துகளிலிருந்து வேறுபடும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது நீண்ட காலத்திற்கு அதன் செயல்திறனையும் பிரதிபலிக்கிறது. அபூர்வமாகவும் மற்றும் அதிக பணப்புழக்கத்துடன் இருப்பதால், இது கடினமான காலங்களில் உங்கள் போர்ட்ஃபோலியோவைப் பாதுகாப்பதற்கு ஒரு சிறந்த புகலிடமாகும். அதன் விநியோகம் புவியியல் ரீதியாக வேறுபட்டதானது அதன் நிலையற்ற தன்மையைக் கட்டுப்படுத்துகிறது. கூடுதலாக, ஆபரணமாக அதன் பயன்பாடு மற்ற சொத்துக்களுடன் எவ்வளவு தொடர்புடையது என்பதைக் குறைக்கின்றது. அரசாங்கங்கள் தங்கத்தில் வர்த்தகம் செய்வதால், அதன் மதிப்பை அதிவேகமாக இழக்கும் வாய்ப்புகள் குறைவு. அதனால் அதன் முதலீடு தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

இந்தியப் பயன்பாடு

இந்த தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதும் தங்கத்தின் விலைகள் அதிகரித்து, இந்தியாவில் 10 கிராம் 24k தங்கம் சுமார் 58,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. 2021 நிலையான விலை ஏற்ற இறக்கங்களால் நிரப்பப்பட்டிருந்தாலும், இது தனிநபர்கள் இந்த ஆண்டு தங்கத்தில் முதலீடு செய்வதைத் தடுக்கவில்லை, ஏன் என்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. யூனியன் பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட கலால் வரி குறைப்பு காரணமாக வாங்குபவர்கள் அவர்கள் முன்பு செலுத்திய 16.26% க்கு பதிலாக 14.07% வரி மட்டுமே செலுத்துவார்கள். இந்தக் குறைவானது விலையை பாதித்திருக்கலாம், ஆனால் இது தங்கம் வாங்குவதை மேலும் கவர்ச்சிகரமானதாகவும் 2020 ஐ விட மலிவாகவும் கிடைக்கச் செய்கிறது. கூடுதலாக, SEBI கோல்ட் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச்களுக்கான ரெகுலேட்டராக மாறியுள்ளதால், இனி நேரடி தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் மக்களுக்கு தரமான உத்தரவாதம் ஒரு கவலையாக இருக்காது. மத்திய அரசு பட்ஜெட்டில் இந்த வகையான மாற்றங்கள் தங்க முதலீடுகளைத் ஊக்குவிக்கின்றன, ஏனெனில் விலை குறையும்போது அதிகமான மக்கள் தங்கத்தை வாங்குவார்கள்.

பணவீக்கத்தை வெல்லுதல்

Gold and commodity returns in rupees as a function of annual inflation*

Gold returns

கடந்த இரண்டு தசாப்தங்கள் குறிப்பிடத்தக்க பொருளாதார ஏற்ற இறக்கங்களைக் கண்டதற்கான காரணம், அது 2008 இன் பங்குச் சந்தை சரிவாக இருக்கலாம் அல்லது கடந்த ஆண்டின் தொற்றுநோயாக இருக்கலாம் தங்கம் மற்றும் பங்குச் சந்தை பொதுவாக எதிர்மறையான தொடர்பைப் பகிர்ந்து கொள்கின்றன, அதனால்தான் முந்தைய தசாப்தத்தில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. அதிக பணவீக்க சூழ்நிலைகளில்  தங்கம் வலுவாக செயல்படுகிறது மற்றும் பணவீக்கம் குறையும்போதும் அது தன்னை தக்க வைத்துக்கொள்வதாக ஆராய்ச்சி கூறுகிறது அதிக பணவீக்கம் மற்றும் பலவீனமான டாலர் மதிப்பு போன்ற தீவிர பொருளாதார சூழ்நிலைகளில், தங்கம் பிற சொத்துக்களை தோற்கடிக்கிறது. உங்கள் போர்ட்ஃபோலியோவின் ஒரு சிறிய சதவீதத்தை தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் செல்வத்தைப் பாதுகாத்து அதற்கு பாதுகாப்பைச் சேர்க்கலாம்.

குறைந்த வட்டி விகிதங்கள்

தங்கம் ஒரு பொருளாக வட்டி விகிதங்களுக்கு மிகவும் உணர்திறன் கொண்டது. 2020 ஆம் ஆண்டில்,தொடரும் குறைந்த வட்டி விகிதங்கள், மற்றும் டொலரின் ஏற்ற இறக்கமான கண்ணோட்டத்தால் தங்க முதலீட்டு தேவை அதிகரித்தது. தேவையின் உயர்வு என்பது, குறைந்த வட்டி விகிதங்கள் தங்கம் வைத்திருப்பதற்கான செலவைக் குறைப்பதால் ஆகும். 2020-ல், மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் தங்க ETF-களில் சாதகமான வரவுகள் இருந்தபோது இது தெளிவாக இருந்தது, இது தங்க விலையின் அதிகரிப்புக்கு பங்களித்தது. 

நீண்ட கால முதலீடு

Average annual return over the past five and ten years

Avg annual return

முதலீட்டாளர்கள் பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாக பார்க்க முனைகிறார்கள் மற்றும் பொருளாதாரம் நிலையாகும்போது பெரும்பாலும் விற்கிறார்கள். இருப்பினும், இந்த காலங்களில் தேவை அதிகரிப்பதால் வளரும் ஒரு நிலையான பொருளாதாரமானது, தங்கத்திற்கு சாதகமான விளைவைத் தருகிறது. தனிநபர்கள் அதிக செலவழிக்கும் வருமானத்தைப் பெறுவதால், தங்கத்தின் தேவை உயர்ந்து தங்கத்தின் விலையை சாதகமாக பாதிக்கிறது. இந்தியாவில் இது குறிப்பிடத்தக்க உண்மை ஏனெனில் தங்கம் ஒரு முதலீடு மட்டுமல்ல, கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டதாகும். தங்கத்தின் செயல்திறன் மற்ற நிதி சொத்துக்களுக்கு இணையாக உள்ளது, குறிப்பாக பத்து வருடங்களுக்கு கணக்கிடும் போது வட்டி விகிதங்கள், புதிய பணக் கொள்கைகள் மற்றும் டொலர் மாற்றங்கள் போன்ற குறுகிய கால காரணிகள் விலை ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் போது, நீண்ட கால முதலீட்டிற்கு தங்கம் ஒரு சிறந்த முதலீட்டு தேர்வாகும்.

பணப்புழக்கம்

உலகளாவிய தங்கச் சந்தை பெரியது மற்றும் அதிக பணப்புழக்கம் கொண்டது என்பதுடன் உண்மையில், இது பத்திரங்கள் மற்றும் பங்குகள் உட்பட பல முக்கிய நிதி சந்தைகளை விட மிகப் பெரியதானது. இது பற்றாக்குறையான பொருள் என்பதால், அது அதன் மதிப்பை தக்க வைக்கும் தங்கத்தில் முதலீடு செய்யும் போது பணப்புழக்கம் ஒரு பிரச்சனையாக இருந்தால், சந்தையின் நவீனமயமாக்கல் அந்த சிக்கலை தீர்க்கின்றது. நேரடி தங்கம் பணமாக மாற இரண்டு நாட்கள் ஆகலாம் என்றாலும், தங்க ETF மற்றும் தங்க நிதிகள் போன்ற தங்கத்தின் நவீன கால டிஜிட்டல் வடிவங்கள் உடனடியாக மாற்றப்படலாம். தங்க ETFகள் மற்றும் தங்க நிதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தங்கத்தின் தூய்மை அல்லது சேமிப்புப் பிரச்சனைகள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை, அவை இந்த ஆண்டின் இலாபகரமான முதலீட்டு விருப்பமாகும்.

இந்த காரணிகள் தங்கம் 2021 க்கு ஒரு இலாபகரமான முதலீடு என்பதைக் காட்டுகின்றன. பாதுகாப்பான புகலிட முதலீடாக அதன் பாரம்பரிய பங்கு இன்றும் உண்மையாக இருந்தாலும், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியின் போது கூட இது முதலீட்டாளர்களுக்கு நேர்மறையான வருமானத்தை கொடுக்க முடியும். எந்தவொரு முதலீட்டிற்கும் விலை ஏற்ற இறக்கங்கள் பொதுவானவை, ஆனால் தங்கம் காலப்போக்கில் இணையற்ற நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது. அதன் பணப்புழக்கத் தன்மை மற்றும் கிடைக்கக்கூடிய பல வடிவங்கள் அதை இலாபகரமான, வசதியான முதலீடாக ஆக்குகின்றன. உங்கள் போர்ட்ஃபோலியோவில் 5% முதல் 10% வரை தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு போர்ட்ஃபோலியோவின் செயல்திறனை மேம்படுத்தலாம், முதலீடுகளை பல்வகைப்படுத்தலாம் மற்றும் ரிஸ்க்-அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட வருவாயைக் கொடுக்கலாம் என விரிவான பகுப்பாய்வு காட்டுகிறது. நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால், அதைச் செய்ய நல்ல நேரம் இதுதான்.