Published: 11 ஆக 2017

நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய தங்க முறைகேடுகள்

தங்கம் இந்தியர்களுக்கு மிகவும் ஆழமான உணர்வுபூர்வமான வாங்கு பொருள். நாம் பாதுகாப்பு வளையமாக நினைக்கும் உலோகம் அது. ஏமாற்றுவதற்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களுடன் தங்க இடிஎஃப்கள் வருகின்றன. இருப்பினும் சில்லரை சந்தையில் இயல் தங்கத்தை வாங்கும்போது சில முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. நீங்கள் தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் சில தங்க முறைகேடுகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

 
  1. தி ரெலிக் ஊழல்

    இந்த ஊழல் பொய்யான தங்க நினைவுச் சின்னங்களை விற்பதாக எழுந்த ஏமாற்றுத்தனத்தால் உருவானது. இத்தகு ஒரு வழக்கில், இராஜஸ்தானில் இருந்து வந்த ஏமாற்றுக்காரர்கள் விவசாயத் தொழிலாளிகள் போல் வேடம் அணிந்து தங்கக் கட்டிகளைக் கண்டுபிடித்ததாக சொல்லி விற்றிருக்கிறார்கள். சந்தை விலைக்குக் குறைவாக அவற்றை விற்று ஏமாற்றினர். பரிமாற்றம் சுமூகமாக நடந்தது. ஆனால் அந்தப் பொருட்களை வாங்கியவர்கள் விற்க முயன்றபோது அவை போலியானவை என்று தெரிய வந்தது.

  2. பெய்ட் மற்றும் ஸ்விட்ச்

    தங்க சந்தையில் market. இது பொதுவான ஏமாற்று வித்தை. ஒரு தங்க நிறுவனம் உங்களை தூண்டக்கூடிய ஒப்பந்தத்துடன் அணுகும். அவைகள் உங்களது நம்பிக்கையைப் பெற்றவுடன், உங்களை ஒரு இடைத்தரகருக்கோ அல்லது மூன்றாவது நபருக்கோ உங்களை அறிமுகப்படுத்தும். அவர் உங்கள் தேவைகளுக்கு ஏற்றது என்று சொல்லி வேறு ஏதாவது பொருள் குறித்து உங்கள் கவனத்தைக் கவர்வார். எடுத்துக்காட்டாக, தங்க நாணயங்கள் குறித்த சிறப்பு பதிவுகள். அந்த நிறுவனம் நம்பிக்கைக்குரியது என்று நீங்கள் யூகித்துக் கொள்ளுங்கள். அந்த தரகரும் நம்பிகைக்குரியவர் என்று யூகியுங்கள். அங்குதான் ஏமாற்றம் தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக, வரலாற்று நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் அசல் தங்க நாணயங்கள் என்று போலிக்களை விற்பனையாளர்கள் விற்பார்கள். விற்பனைக்கு முன் பல்வேறு விதமான பேச்சுவாரத்தைகளும் சோதனைகளும் நடைபெறும். ஆனால் விற்பனை முடிந்தபிறகு, விற்கப்பட்ட நாணயம் மாற்றப்பட்ட வேறு போலி நாயணம் என்பதை வாடிக்கையாளர் உணர்வார்.

  3. சேகரிக்கக்கூடிய தங்க நாயணங்களில் முதலீடு செய்வது

    உங்களது தொகுப்புக்கு தங்க நாணயங்களை நீங்கள் வாங்கும்போது, புதிய நுண்ணிய வேலைப்பாடுகள், வடிவங்கள் தேவை என்று நீங்கள் தேடலாம். இங்குதான் சில ஏமாற்று வித்தகர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த முறையில் பொருட்களை வாங்குவதும் முதலீடு செய்வதும் பல ஏமாற்றுத்தனங்களை உருவாக்கும்.

    அரிய தங்க நாணயங்கள் குறித்த துறையில் நீங்கள் ஒரு கற்றுக்குட்டி என்றால், புராதன பாரம்பரிய நாயணத்திற்கும் அசுத்தமான போலி நாணயத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உங்களால் கண்டறிய முடியாமல் போகலாம். அது மிகவும் விலை உயர்ந்தது என்ற நினைப்பில் நீங்கள் அந்த தங்க நாணயத்தை வாங்கலாம். அந்த நாணயத்தின் அசல் விலையை விட 10 மடங்கு அதிகமாகக் கொடுக்கலாம். அரிய தங்க நாணயங்களை வாங்குவது என்றாலோ அல்லது முதலீடு செய்வது என்றாலோ யாரேனும் நிபுணரை ஆலோசிப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

  4. பாதி விற்பனை முறைகேடு

    அங்கீகரிக்கப்படாத தளங்களில் தங்கத்தை ஆன்லைன் மூலம் வாங்குவதால் ஏற்படும் விஷயங்களில் இந்த ஊழலும் ஒன்று. பகுதி நேர விற்பனை முறைகேடு இரண்டு வழக்குகளை உள்ளடக்கியது.

    • அ. தங்கத்தை பகுதியாக விற்பதற்காக வாங்குபவர் பணம் செலுத்துகிறார். ஆனால் அதனைப் பெறுவதேயில்லை.
    • ஆ. வாங்குபவர் சிறிதளவு தொகைசெலவு செய்கிறார். ஆனால் பரிமாற்றத்தில் சிறிய பகுதியே உங்களுக்குக் கிடைக்கிறது. தங்கத்தின் தூய்மை குறித்து வாங்குபவர் திருப்தி அடைந்தால், முழு தொகையையும் அவர்கள் செலுத்துகிறார்கள். ஆனால் அவர்களுக்கு மீதி தங்கம் கிடைப்பதேயில்லை. அல்லது போலி தங்கம் கிடைக்கும்.

    இத்தகைய போலித்தனங்களால் ஏமாறாமல் இருக்க வேண்டுமானால் அந்த நிறுவனம் குறித்த பின்னணியைத் தெரிந்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது அலுவலக முகவரியை சோதிக்கவும். ஆன்லைன் பணபரிவர்த்தனையை தவிர்க்கவும். பொருட்கள் உங்களை அடைந்த பிறகு பணம் செலுத்தும் விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. சுரங்க முதலாளிகள்

    இது மிகவும் பொதுவான தங்க ஊழல் முறை. தங்கம் வாங்குபவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அந்த அஞ்சலை அனுப்பியவர் ஒரு தங்க சுரங்கத்தின் முதலாளி என்றோ அல்லது ஆப்பிரிக்காவின் இராஜ குடும்பத்தின் உறுப்பினர் என்றோ குறிப்பிடப்பட்டிருக்கும். தாங்கள் மிகக்குறைந்த விலையில் அதிகபட்ச தங்கத்தை விற்கப்போவதாகவும் அதற்கான விலையை உடனே அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வரும். மாபெரும் அளவிலான தங்கத்தை மலிவு விலையில் அளிப்பதாக இந்த ஏமாற்றுக்காரர்கள் கூறுவதால் அதன் பயணச் செலவு மிகவும் அதிகமாக இருக்கும். வாங்குபவர் பணத்தை செலுத்திவிட்டால், அதன் பின் விற்பனையாளரிடமிருந்து எந்தத் தகவலும் வராது.

  6. சிறப்பு விலை ஊழல்

    வலைதளத்தில் தங்கம் வாங்கவதற்கு சிறப்பு விலை என்ற விளம்பரத்தைக் கண்டால் உடனே களத்தில் இறங்காதீர்கள். அந்த வலைதளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் பொருட்களை பரிமாற்றம் செய்ய மாபெரும் சரக்குக் கட்டணத்தை அவை கூறும். இதனை வாங்குபவருக்கு பொருட்கள் சென்று சேரும் காலம் வரை குறிப்பிடாது. .பெரும்பாலான ஆன்லைன் பரிவர்த்தனைகளில் சரக்குக் கட்டணம் உள்ளடங்கியுள்ளது என்பதால் இது எச்சரிக்கை ஒலி எழுப்ப வேண்டிய தருணமேயாகும். அவர்கள் விற்கும் தங்கத்தின் விலையை விட சரக்குக் கட்டணத்தின் விலை இருமடங்காகும். இந்தக் கட்டணம் வாங்குபவருக்கு முதலில் தெரிவிக்கப்படாது. வாங்கும் தங்கத்தின் அளவிற்கேற்ப சரக்குக் கட்டணம் அதிகரிக்கும் என்று வலைதளங்கள் குறிப்பிடுகின்றன. இது வெளிப்படையாக தெரிவ்க்கப்படாததால் வாங்குபவர் பரிவர்த்தனையை முடித்துவிடுவார். இறுதி நிலையில்தான் உண்மையான விலையைவிட அதிகக் கட்டணம் கிடைத்தது என்று உணர்வார். இதனைத் தவிர்க்க அசல் தகவல்களைப் படிக்கவும். பொருட்களை வினியோகிக்கும் முன் உள்ள அசல் கட்டணங்களைத் தெரிந்துகொள்ளவும்.

  7. விலை பாதுகாப்புத் திட்டங்கள்

    விலை பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் தங்கத்தின் விலை இறங்கினால் அதனைக் குறைந்த விலையில் வாங்குவதாக விற்பவர்கள் உறுதி கூறுவார்கள். இந்த திட்டம் 4லிருந்து 7 நாட்கள் வரையே செல்லுபடியாகும். இந்த ஒப்பந்தம் மகத்தானதாகத் தோன்றும். குறைந்த விலையில் தங்கத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள். விற்பனையாளர்கள் உங்களுக்கு சொல்லாத பிடி இதுதான். இந்த விலை பாதுகாப்பு உண்மையில் நாணய சேரிப்பு முறையிலான நாணயங்களுக்கு மட்டும்தான். (அதாவது அரிதான மதிப்பு மிக்க நாணயங்களுக்கு மட்டும்தான்.) இதன் விலை சராசரிக்கும் அதிகமாக இருக்கும். புல்லியன் நாணயங்களைப் போல் இருக்காது. இறுதியில் தான் வாங்கியதற்கு சம்பந்தம் இல்லாத ஒரு திட்டத்தில் அதிக விலை கொடுத்து நுகர்வோர் தங்கத்தை வாங்க வேண்டியிருக்கும்.

இத்தகு பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்கு சில வழிகள் உள்ளன.

  • மிகவும் நம்பத்தன்மை கொண்ட வியாபாரிகளிடமிருந்து மட்டும் தங்கம் வாங்கவும்.
  • • நீங்கள் நகை வாங்க வேண்டும் என்று விரும்பினால், அது ஹால்மார்க் hallmarked,தங்கம் என்பதை உறுதி செய்யவும். அதில் ஹால்மார்க்கின் நான்கு சமிக்ஞைகளும் இருக்க வேண்டும்
  • நீங்கள் தங்க நாணயங்களை வாங்கினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அச்சிட்ட நாணயங்களையே வாங்கவும். பழுதில்லா பாக்கிங்கில் (packing) இருக்க வேண்டும். அத்தகைய நாணயங்களுள் ஒன்று இந்திய தங்க நாணயம். இதில் போலித்தனத்திற்கு எதிரான அம்சங்கள் உள்ளன. திரும்ப வாங்கும் உத்தரவாதமும் உள்ளது.
Sources:
Source1Source2Source3Source4Source5Source6Source7