Published: 29 அக் 2018

வரவிருக்கும் பத்தாண்டுகளில் தங்கச் சந்தை எவ்வாறு மாறவிருக்கிறது?

What will be the forecast of gold market in the coming future?

நீங்கள் தங்கம் வாங்கும் விதத்தை தொழில்நுட்பம் மாற்றவிருக்கிறதா? அது விலை மதிப்பற்ற சொத்தாக தொடருமா? உங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யவேண்டுமா?

அடுத்த 30 ஆண்டுகளில் தங்கச்சந்தை எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடையவிருக்கிறது என்று உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா. இது குறித்து நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்.

தங்கச் சந்தையின் பரிமாற்ற வளர்ச்சி குறித்தும், தங்கத்தை சுரங்கத்திலிருந்து வெட்டி எடுப்பதால் அது கால நிலை மாற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் உலகெங்கும் உள்ள தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.

தங்கத்தின் தேவைக்கு பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தரும்

வரவிருக்கும் ஆண்டுகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறும் திறன் இந்தியாவிற்கு உள்ளதால், தனது பொருளாதார சக்தியில் மாபெரும் உயரத்தை அது அடையவிருக்கிறது. இந்திய பொருளதாரத்தில் உள்ள மாபெரும் பொருளாதார வளர்ச்சிக்கு தங்கச் சந்தையானது ஓர் ஆசிர்வாதம்.

வரவிருக்கும் ஆண்டுகளில் மத்தியதர குடும்பங்கள் வளருவிருக்கின்றன. பணிபுரியும் வயதிலுள்ள மக்கள்தொகை உயரும். உபரி வருமானம் உயரத்தொடங்கும். எனவே தங்கத்திற்கான தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே தங்கத்தை அதிகமாக நுகரும் இரண்டாவது நாடு இந்தியா. இதற்கு பல நூற்றாண்டுகளாக இந்த விலையுயர்ந்த உலோகத்துடன் இந்தியாவிற்கு இருக்கும் கலாச்சார பற்றுதலே காரணம். இந்திய பொருளாதார, சமூக, அரசிய வளர்ச்சியின் மாபெரும் உந்து சக்தி இந்தியாவின் மத்திய தர வர்க்கம்தான். எனவே இந்த சக்தியை கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

தங்க சுரங்கத் தொழிலும் உற்பத்தியும் மாறுபாட்டைக் காணும்

கடந்த 30 ஆண்டுகளாக, தங்க உற்பத்தி இரண்டு மடங்காக வளர்ந்துள்ளது. 2000களிலிருந்து அகழ்வாராய்ச்சி செய்வதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இருப்பினும் தங்கத்தை கண்டுபிடிக்கும் விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.

தானியங்கி இயந்திரம் உட்பட தொழில்நுட்ப வளர்ச்சிகளால் வரவிருக்கும் காலங்களில் தங்க சுரங்கத் தொழிலில் மாபெரும் மாற்றம் ஏற்படும். அதிகரித்த கணிப்பொறி சக்தி மற்றும் தொடர்பு அடுத்த 30 ஆண்டுகளில் தங்கம் எவ்வாறு சுரங்கத்திலிருந்து எடுக்கப்படுகிறது என்ற வழியை மாற்றும்.

திறந்தவெளியிலிருந்து குழியை சுரண்டுவதை விஞ்சி நிலத்திற்கு அடியில் சுரண்டுவது ஏற்படும். நீடித்த, பாதுகாப்பான சுரங்கத் தொழிலுக்கும் உற்பத்தி தொழில்நுட்பத்திற்கும் தானியங்கிகளும் சூரிய ஆற்றலும் உதவும்.

தொழில்நுட்ப அடிப்படையிலான தங்க முதலீடுகள்

தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் வியத்தகு மாறுதல்களை உண்டாக்கி வருகிறது என்று சொல்லத் தேவையில்லை. தங்கச் சந்தையும் இதற்கு விதிவிலக்கல்ல. டிஜிட்டல் தங்கம், தங்க இடிஎஃப்கள் ( எக்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ்), ஆகியவற்றில் முதலீடு செய்வதும் வர்த்தகம் செய்வதும் தற்போது சாத்தியமாகியுள்ளன. இந்தியாவில் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கி, விற்று, முதலீடு செய்து பரிசளிக்க உதவும் மொபைல் செயலிகள் வந்துவிட்டன.

சந்தையில் வாங்குவதை தாண்டி பரிமாற்றங்கள் போன்ற வெளிப்படையான வர்த்தக அலகுகளுக்கு ஒழுங்கமைப்பு மாற்றங்கள் புலம்பெயர்ந்துள்ளன. மொபைல் செயலிகள் மூலம் தங்கத்தை எளிதாக வர்த்தகம் செய்து முதலீடு செய்வது இளம் தலைமுறையினருக்கு உதவும். இதனால் தங்க பயன்பாட்டாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்குமான வாடிக்கையாளர் அடித்தளம் அதிகரிக்கும்.

பொருளாதார வீழ்ச்சியின் போதும் நிதி நெருக்கடிகளின்போதும் தங்கம் பாதுகாப்பான விருப்பத்தேர்வு. எனவே, பொருளாதார வளர்ச்சி காரணங்களுக்காகவும் ஸ்திரத்தன்மை வளர்ச்சிக்காகவும் தங்கத்தில் முதலீடு செய்வது உயரவிருக்கிறது.

இந்திய நகைத்தொழில் தொடர்ந்து மின்னவிருக்கிறது

தங்க நகைக்கான இந்தியாவின் ஆசைக்கு எந்த முன்னுரையும் தேவையில்லை. பல நூற்றாண்டுகளாகவே இந்திய குடும்பங்களின் விலை உயர்ந்த சொத்தாக நகைகள் உள்ளன. எனினும், பழைய தலைமுறைகளைப்போல் அல்லாமல், தற்போதுள்ள இளம் குடும்பங்கள் மிகவும் நம்பகமான ஆதாரமுள்ள முறையில் வாங்கவேண்டும் என்று நினைக்கின்றன. இந்த நுகர்வோர்களைக் கவர்வதற்காக நகை வியாபாரிகள் அதிக ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகையை விற்கிறார்கள். வரவிருக்கும் ஆண்டுகளில் இது அதிகரிக்கவிருக்கிறது.

கிராமப்புற இந்தியாவின் வருமானமும் செலவு செய்யும் சக்தியும் வளர்வதால், இந்திய தங்க நகையின் தேவையும் கணிசமாக வளரவிருக்கிறது. இதனால் இந்திய தங்க நகை சந்தையும் மிகவும் ஒருங்கிணைந்து கட்டுக்கோப்பாக வளரவிருக்கிறது. தங்கத்தை மறுசுழற்சி செய்வதற்கு பெரும் திறன் உள்ளது. தற்போதுள்ள தங்கத்தில் ஏறத்தாழ 25,000 டன்கள் மறுசுழற்சிக்கு தயாராகின்றன.

வரவிருக்கும் தசாண்டுகளில், கடந்த ஆயிரமாண்டுகளாக இருப்பது போலவே தங்கம் மதிப்பிடப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு விலை உயர்த்தப்படும். நிபுணர்களின் கருத்துப்படி, தங்க முதலீட்டு பொருட்கள் மிகவும் முன்னுரிமை பெறும். கலாச்சார பண்டிகைகளில் நகைக்கென எப்போதுமே தனி இடம் கிடைக்கும்.

ஆகையால் தங்கத்தை கொள்முதல் செய்து, அதில் முதலீடு செய்து அதனை அணியும் முறைகளில் காலப்போக்கில் மாற்றம் ஏற்படலாம். ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் அது ஜொலிக்கத் தொடங்கும்.

கட்டுரையின் ஆதாரம்