Published: 31 ஆக 2017

தங்கத்தின் விலையைப் பாதிக்கும் காரணிகள்

வட்டி விகிதங்கள், புவிசார் அரசியல் அழுத்தங்கள், பணப்புழக்கம், பணவீக்கம், கடன் திரும்பச் செலுத்தும் திறன் ஆகியவை உட்பட தங்கத்தின் விலையின் மீது தாக்கம் செலுத்துகின்ற ஏராளமான காரணிகள் உள்ளன – அவற்றில் பின்வரும் மூன்று காரணிகள், தங்கத்தின் விலை மீது அதிக தாக்கம் செலுத்துகிறது.

பொருளாதாரத் தரவுகள்

அமெரிக்கா போன்ற பெரிய பொருளாதார நாடுகளில் இருந்து வரும் பொருளாதாரத் தரவுகள், விலைகளில் அதிர்ச்சி ஏற்படுத்தும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, வீட்டுவசதி புள்ளிவிவரங்கள், வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் பணவீக்கம் ஆகியவை பிரதான தாக்கங்களாகும், அவை விலைகளில் குறுகிய காலத் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, வேலைவாய்ப்புகளில் குறைவான வளர்ச்சி, வேலையின்மை அதிகரிப்பு, உற்பத்தித்துறை பலவீனமாதல் மற்றும் எதிர்பார்க்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைக் காட்டிலும் குறைவாக இருத்தல் போன்றவற்றைப் பார்க்கும்பொழுது, மத்திய வங்கிகள், வட்டி விகிதங்களைக் குறைக்கிறது, எனவே தங்கத்தின் விலை உயர்கிறது. எனவே, குறிப்பாக அமெரிக்காவிலிருந்து வரும் பொருளாதாரத் தரவுகளைப் பார்க்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். அரசாங்கத்தின் வரிகளும், தீர்வைகளும் விலைகளில் தாக்கம் ஏற்படுத்தலாம், ஆனால் அவை அடிக்கடி மாறாது.

தேவை மற்றும் விநியோகம்

விலைகள் எந்த திசையில் நகர்கின்றன என்பதற்கு இது ஒரு பொதுவாக கவனிக்கப்படும் காரணம் ஆகும், ஆனால் அது தங்கத்தின் விலைகளை பெரிய அளவில் மாற்றியமைக்கிறது. இருப்பினும், பொருளாதாரத் தரவுகளைப் போலல்லாமல், தேவை மற்றும் விநியோகம் என்பது நீண்ட கால அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான விலை மாறுபாட்டிற்கு காரணமாகலாம். உதாரணமாக, சுரங்கத்தில் தங்கம் எடுக்கப்படுவது குறைந்தால், விநியோகம் பாதிக்கப்படுகிறது, எனவே தங்கத்தின் விலைகள் உயர்வதை நாம் காணலாம். மறுபுறம், தேவையில் திடீர் சரிவு ஏற்பட்டு, விநியோகம் அதிகரித்திருந்தால், அது தங்கத்தின் விலைகளில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தும். உலகளாவிய ரீதியில் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவது திடீரென அதிகரித்தால், தங்கத்தின் விலையுயர்வதைக் காணலாம். மின்னணு வடிவத்தில் பல்வேறு தங்க முதலீடுகள் கிடைக்கின்றன என்றாலும், தனிநபர்கள் இன்னும் தங்க நகைகள் வாங்குவதையே விரும்புகின்றனர், இது தேவையை அதிகப்படுத்துகிறது.

தங்கம் இடீஎஃப்-களின் (பரிமாற்ற வர்த்தக நிதியங்கள்) தேவை

தங்க இடீஎஃப்-களும் தங்கத்தின் விலையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. தங்க இடீஎஃப்-களுக்கு அதிகமான பணப்புழக்கம் ஏற்பட்டால் அவற்றிடமிருந்து வாங்குவது அதிகரிப்பதோடு, அது தங்க நகைகள் அல்லது இடீஎஃப் என எதுவாக இருந்தாலும், தங்கத்தில் விலை உயர்வதற்கு வழிவகுக்கிறது. சமீபத்தில், பெரிய தங்க இடீஎஃப்-கள் சிலவற்றில் பெரும் தங்கம் திரட்டப்பட்டு வருவதைக் காண முடிந்தது, இது தங்கத்திற்கான அதிக தேவைக்கு காரணமாக அமைந்தது.

தங்கத்தின் விலையை முன்கூட்டியே கணிப்பதென்பது எப்போதுமே கடினமானதாகும், ஏனென்றால் ஒரு காரணி மட்டுமே தனியாக காரணமாக இருக்கலாம் அல்லது ஒரே நேரத்தில் விலைகளைப் பாதிக்கும் பல காரணிகள் இருக்கலாம். அடிக்கடி ஏறி இறங்கும் பங்குகளைப் போலல்லாமல், தங்கத்தின் விகிதங்கள் ஒப்பீட்டளவில் மிகவும் நிலையானதாக இருக்கும் என்பது தங்கத்தின் முக்கிய நன்மையாகும். விலையில் ஏற்ற இறக்கங்கள் மிகவும் அதிக அளவில் இருப்பதால், இது முதலீட்டாளர்களுக்கு தங்கத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.