Published: 09 பிப் 2018

தூய்மையான ஆற்றல் உற்பத்தியில் தங்கத்தின் பங்கு

நானோ தொழில்நுட்பமானது, சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்கள் அதிகரித்துவருவதன் காரணமாக, இடைக்காலம் முதல் நீண்ட காலம் வரையில் தங்கத்திற்கான தேவையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மெருகிடுதல் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பில் நீண்ட காலமாக தங்கம் பயன்படுத்தப்பட்டுவருகிறது; 1960 முதல், தங்கமானது, கட்டிடங்களில் மின்னாற்றல் செலவினை மிச்சப்படுத்துவதற்காக, மெருகிடுதலில் மெல்லியப் பூச்சாக தங்கம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

அதன் மேன்மையான அகச்சிவப்பு கதிர் பாதுகாப்புத் திறன், பரந்த அளவில் மெருகிடப்பட்ட பரப்புடைய கட்டிடங்கள் அதிக வெப்பமடைவதைத் தடுப்பதன் மூலம், மின்செலவினைக் குறைக்கிறது. டொரொன்டோவிலுள்ள பிரபல ராயல் பேங்க் பிளாசா கட்டிடத்தில் 14,000 ஜன்னல்கள் உள்ளன, இவை அனைத்தும், இந்தக் காரணத்திற்காகவே, ஓர் அடுக்கு தூய தங்கத்தால் பூசப்பட்டுள்ளன.

சோலார் பயன்பாடுகள் மற்றும் தங்கம் இடையேயான பிணைப்பு சமீபத்திய ஆண்டுகளில் வலுப்பெற்றுள்ளது. சூரியனின் ஆற்றலை அதிகளவில் பெறுவதற்கும் மின்சக்தியாக மாற்றுவதற்கும் பல்வேறு வகையான சூரிய செல்களில் தங்க நானோ துகள்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. புதிய சோலார் தொழில்நுட்பங்களில் மிகச்சிறந்தது என பரவலாகக் கருதப்படும் பெரோவ்ஸ்கைட் சோலார் செல்கள், தங்க மின்வாய்களைப் பயன்படுத்துகின்றன. சிலிக்கான் அடிப்படையிலான தொழில்நுட்பங்களுக்கு இணையாக, இன்றளவில், இவை நீடித்துழைப்பதில்லை என்ற நிலையில், இவற்றின் தொழில்மயமாக்கலில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது.

தங்கத்தின் தேவை மற்றும் பயன்பாட்டை பொருத்தவரை சோலார் தொழில்துறையானது மின்னணுத் தொழிற்துறைக்கு நிகராக உருவாகும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது. தங்கத்தை நானோ துகள்களாகவோ, அல்லது பூச்சாகவோ, பயன்படுத்துகின்ற சோலார் தொழில்நுட்பம் பெருமளவில் பின்பற்றக்கூடியதாக ஆகலாம். பெரும் எண்ணிக்கையிலான சோலார் மாட்யுல்களில், குறைந்த அளவு தங்கத்தை ஒருங்கிணைக்க இது வழிவகுத்து, தங்கத்திற்கான தேவையை கணிசமாக அதிகரிக்கும்.

தங்க ஒருங்கிணைக்கப்பட்ட சோலார் செல்கள், கட்டிடங்களுக்கு மின்னாற்றலை அளிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.