Published: 09 ஆக 2017

தங்கமும் ஆன்மிகமும்

பிறப்பு, கல்வி, திருமணம், பணி ஓய்வு என்று நம் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய அங்கங்களிலும் தங்கம் கணிசமான பணியாற்றுகிறது. சிகிச்சை அளித்தல், வளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சியிலும் தங்கம் முக்கிய பங்காற்றுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

தங்கம் உங்களுக்கு எப்படியெல்லாம் ஆன்மிக ரீதியாக உதவுகிறது என்று அறிய மேலும் படிக்கவும்:

  1. நேர்மறை உணர்வை அளிக்கிறது

    தங்கத்தில் ஒரு விதமான ஆன்மிக சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. அதை அணியும் நபரின் வாழ்வில் நேர்மறை உணர்வை அது உண்டு பண்ணும். கோபம் மற்றும் மனச்சோர்வு ஆகிய உணர்வுகளை மட்டுப்படுத்தி உங்களை அமைதியாக்க தங்கம் உதவும். நேர்மறை எண்ணங்களைக் கவரும் சக்தி தங்கத்திற்கு உண்டு. உங்கள் உடலைச் சற்றி இதமான அதிர்வலைகளால் வெதுவெதுப்பான ஆற்றலை தங்கம் உண்டாக்கும். தங்க ஆபரணங்களை ஒருவர் தொடர்ந்து அணிவதால் உச்சகட்ட நினைவிற்கு அவர் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.

    Positivity With Gold Ornaments

  2. எதிர்மறை உணர்வை தடுக்கிறது

    வரக்கூடிய முன்மொழிதல் அல்லது பட்டமளிப்பு விழாவிற்கான பரிசு ஆகிய தருணங்களின்போது அளிக்கப்படும் தங்க மோதிரமானது எதிர்மறை சக்தியை விரட்டுவதாக நம்பப்படுகிறது. தங்கத்தை அணியும் நபரைச் சுற்றி ஒரு சக்கரத்தை தங்கம் உருவாக்குகிறது. உங்கள் வாழ்வில் எதிர்மறை ஆற்றல் வடிவத்தில் வரும் தடைகளை நீக்க ஒரு விதமான இறை சக்தியை தங்கம் கவர்வதாக நம்பப்படுகிறது. இந்த ஆன்மிக பலன்களைப் பெற, பெண்கள் தங்க மோதிரத்தை தங்களது இடது கையிலும் ஆண்கள் வலது கையிலும் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    Positive Energy With Gold

  3. ஆன்மிக சிகிச்சை

    குணமாக்கும் சுத்தப்படுத்தும் பண்புகளை தங்கம் அளிப்பதாக நம்பப்படுகிறது. எனவே தாயத்துக்கள், காப்புகள், மற்றும் பாதுகாப்பு கவசங்கள் ஆகியவை தங்கத்தில் வழங்கப்படுகின்றன.

    Spiritual Healing With Gold Jewellery

  4. நம்பிக்கையை ஊக்குவிக்கிறது

    தங்கம் அணிவது உங்களது தன்னம்பிக்கையையும் உள் வலிமையையும் அதிகரிக்கும். உங்களது அடுத்த பெரிய நேர்காணலுக்கான பொருள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதில் சரியான பரிசீலனை உண்டு. தங்கத்தை ஆளும் கடவுள் சூரியன். இது தைரியம் மற்றும் உறுதியுடன் தொடர்புடையது.

    Gold Accessories To Boost Confidence

உங்கள் வாழ்வில் தங்கம் வகிக்கும் பாத்திரம் குறித்து மேலும் இணைக்க உங்களிடம் ஏதாவது தகவல் உள்ளதா? கீழே உள்ள கருத்துக்களிலிருந்து தெரிந்துகொள்வோம்.

Sources:
Source1, Source2, Source3, Source4, Source5, Source6, Source7, Source8, Source9, Source10, Source11