Published: 20 பிப் 2018

1991ன் தங்கக் குழப்பம்

Gold rescuing economy in 1991 and ahead

1991ன் நிதிப் பிரச்சனை பற்றிய கலந்துரையாடல் தொடங்கியபோது, இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங் எப்படி விதிமுறைகளை வகுத்தார் என்பதைப் பற்றிதான் பெரும்பாலும் எல்லாக் கலந்துரையாடல்களும் தொடங்கியது. அது சரிதான், அந்த நேரத்தில் பெரும் குழப்பம் நிலவியது. ஒருவேளை, குழுப்பம் தவறான வார்த்தையாக இருக்கலாம், ரகசியம் என்பது சரியாக இருக்கும்.

நாடு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையை (BoP) சமாளிக்க முடியாமல் போனபிறகு உலக வங்கிக்குத் தரவேண்டிய கடன் தொகையான 72 பில்லியன் $ அளவில் இருந்தது, இதனுடன் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் சில வாரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்பதை அரசு உணர்ந்தது, அந்த நேரத்தில் இந்தியாவின் தங்கக் கையிருப்பிலிருந்து பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் 47 டன் மற்றும் பெயர் தெரியாத வங்கியில் 20 டன்கள் என மொத்தம் 67 டன் தங்கத்தை அடகு வைத்து 2.2$ பில்லியன் டாலரைக் கடனாகப் பெறுவது என உடனடியாக முடிவுசெய்தது. எல்லோருக்கும் தங்கம் சுவிட்சர்லாந்தின் ஸூரிச்சுக்கு சென்றது என்றுதான் தெரியும். ஆனால் யாருக்கு எங்கே என்பது இன்றுவரை தெரியாது.

சிக்கலான இந்தக் காலத்தில் நியூயார்க் டைம்ஸ் இதழ், "வாங்கியவரை அடையாளம் காட்ட அரசு மறுத்துவிட்டது, ஆனால் ஆற்றல் மிக்க இந்தியத் தொழில்துறையால் வெளியிடப்பட்ட தி பிஸினஸ் அண்ட் பொலிடிகல் அப்சர்வர் என்ற பத்திரிக்கை, பாரத ஸ்டேட் வங்கி அந்தத் தங்கத்தை ஸ்விஸ் ஏர் விமானத்தில் ஸூரிச்சுக்கு அனுப்பியதாகத் தெரிவித்தது" என எழுதியது.

600 மில்லியன் $ தொகையைப் பெறுவதற்கு 20 டன் தங்கம் சுவிட்சர்லாந்தின் யூனியன் வங்கிக்குச் சென்றதாக இன்று நமக்குத் தெரியவருகிறது.

அரசின் அறிக்கையில், அந்தத் தங்கம் இந்தியாவின் கையிருப்பின் ஒரு பகுதியல்ல என்றும் அது கடந்த காலங்களில் கடத்தல்காரர்களிடமிருந்தும், பதுக்கி வைத்தவர்களிடமிருந்தும் கைப்பற்றப்பட்டது என கூறப்பட்டது. தன்னுடைய தங்கக் கையிருப்பில் அதீதப் பெருமை கொண்ட நாட்டின் அறிக்கையாகவே அது இருந்தது மேலும் இது தேசிய அளவிலும் அரசியலிலும் ஏற்பட்ட கொந்தளிப்பை சிதறடித்தது.

பெரும்பாலான அரசியல்வாதிகள் இது சரியான நகர்வுதான் என்பதை ரகசியமாகவாவது ஒப்புக்கொண்டார்கள். தி ஹிந்து பத்திரிக்கையில், முன்னாள் ஆர்பிஐ கவர்னர் எஸ்.வெங்கட்ரமணன் எழுதிய கட்டுரையில், ராஜீவ் காந்தியின் உரையாடலைப் பற்றி ஒப்புக்கொண்டுள்ளார், அதில் மறைந்த பிரதமர் கூறியதாவது: “தேசம் சிரமத்தைச் சந்திக்கும் காலத்தில் தேச நலனுக்கு உதவாவிடில் தங்கத்தினால் பயன் என்ன?”

நரசிம்மராவ் அரசு புதிதாகப் பொறுப்பேற்ற பிறகு, சிறிய கிராம அளவிலான நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஒரு முழுமையான திட்டத்தை அரசு அறிவித்தது. அது இரண்டாம் வர்த்தகக் கொள்கையையும் வெளியிட்டது மேலும் நிதித் துறை சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கான கமிட்டி அமைக்கப்பட்டதையும் அறிவித்தது, இதைத் தொடர்ந்து புதிய வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் விளைவாக, இந்தியா பிரச்சனையைத் தவிர்த்தது மேலும், 1992-93 ஆம் ஆண்டு வாக்கில் பொருளாதாரம் நல்ல நிலையை அடைந்திருந்தது. 1992ல் தனது இரண்டாவது நிதிநிலை அறிக்கையைப் படிக்க நிதியமைச்சர் எழுந்தபோது, தன்னுடைய கடன்களை திருப்பி செலுத்தாமல் இருக்கும் பேராபத்தை தவிர்த்திருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு 11,000 கோடி அளவுக்கு மேம்பட்டிருந்தது மேலும் 1991-92ல் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 6.5% என்ற அளவிலேயே நிலைத்திருந்தது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் தங்கம் திருப்பி வாங்கப்பட்டது, இன்றைக்கு இந்தியாவில் 557.8 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பில் உள்ளது, இது 1991ல் இருந்ததை விட மிக அதிகம். மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு சிறிதளவு குழப்பம் தேவை என்று கூறுவார்கள்.