Published: 04 செப் 2017

தங்க தோசைகள்

இந்தியாவின் ஐடி தலைநகரில் சாதாரண தோசைகளானது ஒரு ராஜ்ஜிய முக்கியத்துவம் பெறுகிறது.

கிட்டத்தட்ட 2 நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவில் சாதாரணமாக செய்யத் தொடங்கிய இந்திய பான்கேக் என்பது இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பிரபலமாகியது. அதன் பிறப்பிடமானது உன்னதமான பாரம்பரியம் கொண்டதாக இருந்தாலும், அதன் தோற்றம், பெரும்பாலும் கர்நாடகத்தில் உள்ள உடுப்பி உடன் தொடர்புபடுத்தப்படுகிறது. கே. டீ. அச்சயாவின் புத்தகமான ‘நமது உணவுகளின் கதை’ என்ற புத்தகத்தின்படி, தென்னிந்திய ஆட்சியாளர் சோமேஷ்வரர் III என்பவர் தொகுத்த 12 வது நூற்றாண்டு சமஸ்கிருத கலைக்களஞ்சியமான மனாசோல்லாசா என்பதில்கூட, தோசை (தோசகா என்று) என்று ஒரு உணவு செய்முறையை கொண்டிருக்கிறது.

இன்று, தோசை என்பது பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வகைகள் மூலம் அறியப்படுகிறது. இது பாரம்பரிய மசாலா தோசை மற்றும் ரவா தோசை ஆகியவற்றிலிருந்து, நவீன காலத் திருப்பங்களான சைனீஸ் தோசை மற்றும் சாக்லேட் தோசை என எண்ணற்ற முறை மாற்றப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரின் இதயப் பகுதியில், ஒரு தைரியமான உணவகக்காரர் யாரும் இதற்கு முன்னர் செய்யாததை செய்யத் துணிந்தார். நமது வரலாற்றில் முதன்முறையாக, ராஜ் போக் உணவகம் என்பது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தூய தங்க பூச்சினால் மூடப்பட்ட தோசைகளை அளித்தது.

12 செ.மீ-க்கு 12 செ.மீ அளவிலான தங்கப் படலமாக பரப்பப்பட்ட 1 மில்லி கிராம் தூய தங்கத்தால் தூவப்பட்ட ஒரு சாதாரண தோசையானது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆடம்பரப் பொருளின் விலை என்பது ரூ.1,001 (20 சாதாரண தோசைகளின் விலையில்) என்று பிபிசி தமிழ் சேவையில் உள்ள பி.சிவராமகிருஷ்ணன் கூறுகிறார்.

பண்டைய இந்தியர்கள் எப்பொழுதும் தங்கத்தால் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தனர், மேலும் நீரிழிவு மற்றும் மூட்டு வலி ஆகியவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சையில், இது ஆயுர்வேத மருந்துகளாகக் கூட பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகு நமது முன்னோர்களின் அடிச்சுவடுகளை நாம் பின்தொடர்வதில் ஆச்சரியம் எதுவுமில்லை. இப்போது, தங்கள் உணவில் சிறிது ஆடம்பரத்தைக் காட்ட யாரும் இந்த அரசகுல உணவை அனுபவிக்க முடியும்.