Published: 20 பிப் 2018

தங்கத்தின் குணப்படுத்தும் பண்புகள்

Health benefits of gold

முதன்மையான குணப்படுத்தும் பொருள் என விவரிக்கப்பட்ட இது மஞ்சள் உலோகம் என நம்பப்படுகிறது - தங்கம் அதனுடன் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஒரு விஞ்ஞானக் கண்ணோட்டத்தில், 24 காரட் தூய தங்கம் முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டது. கலப்புலோகங்கள் என்ற முறையில் மக்கள் இது, தூய தங்கத்தின் குணப்படுத்தும் பண்புகளையும் அதில் இருந்து உமிழும் வெதுவெதுப்பான அதிர்வுகளையும் மாற்றியமைக்கும் என நினைத்தனர். ஒரு நபர் தூய தங்கத்தை ஒரு நோய்த்தொற்று அல்லது புண் உள்ள இடத்தில் வைத்தால், அது காயத்தை வேகமாகக் குணப்படுத்தவும் சில நேரங்களில் நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது எனக் கூறப்படுகிறது. எப்படி? தங்கமானது உடலுக்கு ஆசுவாசமளிக்க உதவுகின்ற மற்றும் இரத்தக்குழல்களுக்கு ஆசுவாசமளிக்க உதவுகின்ற, ஒரு வெதுவெதுப்பான ஆற்றலையும் ஆறுதலளிக்கும் அதிர்வுகளைக் கொண்டிருப்பதாகவும் திசுக்களின் ஊடாகப் பயணிக்கின்ற இரத்தமானது புதிய உயிரணுக்களின் விரைவான வளர்ச்சியைத் தூண்டுவதையும் இறந்த உயிரணுக்களை மாற்றி வைப்பதையும் உறுதிசெய்வதாகவும் கருதப்பட்டது. இது, தியானமானது உடலை ஆசுவாசப்படுத்துகிறது மற்றும் ஒருவரை ஆரோக்கியமாகவும் புத்துயிர் அளிக்கப்பட்டவராகவும் இருக்கச் செய்கிறது என நம்புகின்றனவர்களின் கருத்தை ஒத்ததாக உள்ளது.

அக்குபஞ்சர் நிபுணர்கள் வெள்ளி மற்றும் தங்க ஊசிகளையும் கூடப் பயன்படுத்தினர். தங்கம் வெதுவெதுப்பானது மற்றும் உற்சாகமாகவும் இருக்கச் செய்கிறது என்கிற அதே வேளையில்; வெள்ளி ஒரு குளிரான, தடுக்கக்கூடிய காரணியாக உள்ளது. உடலை தூய்மையாக்குவதற்கான ஒரு மிகச்சிறந்த மாற்றாகச் செயல்படுகின்ற தங்கமானது மனித உடலின் உணர்வுசார் மண்டலத்தின் மீது செயல்படுவதாகவும், அதை நிலைப்படுத்துவதாகவும், மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் ஒழிக்க உதவுவதாகவும், சிந்தனையிலும் செயலிலும் நேர்மறையாக இருக்கும் நிலையை அதிகமாக்க உதவுவதாகவும் நம்பப்படுகிறது.

இயல்பான மனச் செயல்களை மேம்படுத்துவதற்கும் நாளமில்லா மண்டலத்திற்குப் புத்துயிர் அளிப்பதற்கும் தங்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது வலது மற்றும் இடது மூளை சமநிலையில் இருப்பதற்கும் உதவுகிறது மற்றும் ஆட்டிஸம், புரிந்து படிக்க இயலாமை, கால் கை வலிப்பு மற்றும் உடல் ஒருங்கிணைப்புடன் தொடர்புடைய நிலைமைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் உதவுகிறது.

தங்கத்தின் ஆற்றல் நுட்பமானது எனினும் வெளிப்படையானது. இது ஏற்புத்திறனுடையது மற்றும் ஒத்துழைப்புடன் இருக்கும் ஒரு ஆற்றலை வெளிப்படுத்துகிறது. . மேலும், கிளியோபாட்ரா ஒரு பிரகாசமான தோலைக் கொண்டிருந்ததாக அனைவருக்கும் ஆச்சரியப்பட்டனர் - ராணி கிளியோபாட்ரா ஒவ்வொரு இரவின் தங்க முகத்திரையை அணிந்துக்கொண்டு தூங்கினாள் என்று நம்பப்படுகிறது. பிரகாசமான தோலுக்கான இரகசியம் இங்கே இருக்கிறது! பளிச்சிடும் தங்கம் அதன் பிரகாசத்தைச் சுற்றிலும் பரப்புகிறது, இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்தானே?