Published: 27 செப் 2017

நிதிச் சேர்க்கையை நோக்கியப் போரில் தங்கத்தால் எப்படி உதவ முடியும்?

Financial Inclusion With Gold In Indian Market

பெரும்பாலான முதலீட்டு ஆலோசகர்கள் சிந்திப்பது போல, கிராமப்புற பகுதியில் உள்ள மக்களுக்கு தங்கம் என்பது அவசியமான மற்றும் விரும்பத்தக்க சொத்து ஆகும். சில காரணங்கள், கலாசாரம் தொடர்புடையதாக இருக்கலாம், ஆனால் கிராமப்புற வருமானங்கள் என்பது இரண்டு அறுவடை பருவங்களின் முடிவில் மட்டுமே பெரும்பாலும் கிடைத்து வருகின்றன என்பதால், அவை ஒழுங்கற்றவை மற்றும் நிலையில்லாதவை ஆகும். எனவே, எளிதில் பணமாகப் பெறும் வகையிலான தங்கம் என்பது ஒரு சேமிப்பு முறையாகும்.

மற்றொரு முக்கிய காரணியும் உள்ளது. மக்களில் பெரும்பகுதியினருக்கு வங்கிக் கடன் அல்லது வங்கிச் சேவைகளை அணுகும் வசதி இல்லை; முறையான வங்கிக் கடன்கள் என்பது சொத்துக்களைக் காட்டிலும் பணப்புழக்கத்தின் அடிப்படையில்தான் உள்ளது. அது கிராமப்புற மக்களுக்கு நிலம் மற்றும் தங்கம் ஆகிய இரு வடிவங்களில் உள்ளது. நிலத்தை எளிதில் பணமாக மாற்ற முடியாது. மேலும், வங்கிகள் என்பது தங்கத்தில் மிகவும் குறைவான நிபுணத்துவமே கொண்டுள்ளது.

கடனை திருப்பிச் செலுத்தாதபட்சத்தில் தங்கத்தை ஒரு பிணையமாக பயன்படுத்தி விற்க முடியும் என்று சில நிபுணர்கள் வாதிடுகின்றனர்; அதிகரிக்கும் வட்டி செலுத்துதல் காரணமாக கடனாளிகள் கடன் வலையில் சிக்கிக்கொள்ளக்கூடாது; பருவமழை தவறுவதன் காரணமாக விவசாய விளைச்சல் பாதிப்பதால், அது ஒரு விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர்களின் கடனில் இருந்து மீள முடியாத சுமையை அளிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களானது, குறிப்பாக தங்கத்திற்கு கடன் வழங்கும் சந்தைக்குள் நுழைந்துள்ளது; இந்தச் செயல்முறைகள் மிகவும் எளிமையானவை ஆகும், ஆவணங்களும் எளிமையானவையே. மேலும் விவசாயிகள் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள குடும்பத்தினர்கள் ஆகியோர் அவர்களுக்கு தேவைப்படும் போது எளிதாகக் கடன் பெற முடியும். நிபுணர்கள் பலரின் கருத்துப்படி, தங்கக் கடன்கள் என்பது நிதிச் சேர்க்கைக்கான சிறந்த கருவியாக இருக்கின்றன. அவை முறையான நிதி அமைப்புகளை விட சிறந்ததாக உள்ளன.

எண்ணிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கவை ஆகும். தனிநபர்களிடம் உள்ள தங்கத்தின் அளவானது சுமார் 24,000 டன்கள் ஆகும். இது சுமார் ஒரு டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை குடும்பத்தினர்களிடம் உள்ளது. இவற்றில் கிராமப்புற இந்தியாவில் வாழும் மக்களிடம் ஒரு கணிசமான எண்ணிக்கையில் உள்ளது. இந்தச் சமன்பாட்டின் மறுபுறத்தில், இந்தியாவின் உற்பத்தியில் பாதிக்கும் மேலானது சுமார் 70 சதவிகித உழைக்கும் மக்கள் பணிபுரிகின்ற அமைப்புசாரா துறையிலிருந்து வருகிறது. அந்தத் துறையில் உள்ள தொழில்களின் உரிமையாளர்கள் தங்களின் தங்க சேமிப்புகளைப் பிணையமாகப் பயன்படுத்தி கடன் வாங்கும் சாத்தியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

நிதிச் சேர்க்கையின் பின்னணியில், தங்கம் என்பது எளிதில் பணமாக்கக்கூடிய ஒரு சொத்து ஆகும், அதன் மதிப்பு நீண்ட கால அடிப்படையில் குறையாமல் இருக்கும்; இது வியாபாரத்தின் உயிர்நாடியாக இருக்கக் கூடிய கடன் பெறுவதற்கான கதவுகளைத் திறக்கிறது. இதை சவாலான நேரங்களில் அல்லது அவசரகாலங்களில் எளிதாக விற்க முடியும்.