Published: 04 செப் 2017

பூகோளரீதியான அரசியல் பதற்றங்கள் தங்க விலைகளை எவ்வாறு பாதிக்கின்றன?

2017ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில், கொரிய தீபகற்பத்தில் புதிய பதற்றங்கள் ஏற்பட்டதை நாம் கண்டோம், மேலும் மத்திய கிழக்கு நாடுகளானது மற்ற நாடுகளுடன் தூதரக உறவுகளைத் துண்டித்ததையும் கண்டோம். எல்லையில் ஏற்படும் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டு கலவரங்கள் ஆகியவை மிகவும் அசாதாரணமானவை அல்ல. இந்த நேரத்தில், ஒரு சொத்துமுதலீட்டில் ஏற்படும் விலை வீழ்ச்சியை ஈடுகட்ட, பல முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கண் வைக்கிறார்கள்.

அரசியல் பதற்றங்களின் போது தங்கத்தின் விலைகள் ஏன் உயர்ந்தன?

தங்கம் ஒரு 'பாதுகாப்பான புகலிட' சொத்தாக கருதப்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது, மேலும் முதலீட்டாளர்கள், பங்குகள் போன்ற அபாயகரமான சொத்துக்களை விற்று, பணத்தை தங்கமாக மாற்றும்பொழுது விலை உயர்கிறது. பாதுகாப்பான புகலிட சொத்தான தங்கம் போன்றவற்றில் முதலீடு என்பது, குழப்பமான காலங்களில் அதன் மதிப்பை தக்கவைத்துக்கொள்ளும் அல்லது அதன் மதிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் அடமானம் வைக்கும் அளவிலான கடன் நெருக்கடி ஏற்பட்ட சூழலானது ஒரு உன்னதமான உதாரணமாக இருந்தது, அதன்பின் தங்கத்தின் விலைகள் வியக்கத்தக்க வகையில் மீண்டெழுந்தன. உண்மையில், 2008-ல் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடி காலத்திலிருந்து, இந்தியாவில் தங்கத்தின் விலைகள் நான்கு மடங்காக உயர்ந்திருக்கிறது.

பிற சொத்துகளுடன் இணைத்துப் புரிந்துகொள்ளுதல்

பூகோளரீதியான அரசியல் பதற்றங்களின் காலங்களில், வெவ்வேறு சொத்துக்கள் எப்படி மாறுகின்றன என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு சொத்துகளானது நேர்மறையாக தொடர்பு (1 என்ற மதிப்புக்கு நெருக்கமாக) கொண்டு இருக்கும் போது, அவற்றின் விலைகள் ஒரே திசையில் செல்வதைக் காணலாம். சந்தை நிலைமைகள் சீர்குலையாதபோது, குறுகிய காலத்தில் பார்க்கும்பொழுது பங்குகளும் ரியல் எஸ்டேட்களும் ஒரே திசையில் செல்லும். சொத்துகளானது எதிர்மறையாக தொடர்பு (எதிர்மறை 1) கொண்டிருக்கும் போது, அவை எதிர் திசைகளில் செல்கின்றன. சொத்துக்களுக்கு இடையிலான தொடர்பானது பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்தால், இரண்டு சொத்துகளும் சுதந்திரமாக செயல்படும் என்று அர்த்தமாகும்.

தங்கம் என்பது ஆபத்தான சொத்துகளின் பிரிவுடன் நேர்மறையான தொடர்பில் இல்லை என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவேதான் உலகெங்கிலும் உள்ள பல தனிநபர்கள் தங்களுடைய முதலீட்டுப் பட்டியலில் தங்கத்தை வைத்திருக்கிறார்கள், இது சரிந்து வரும் பங்குகள் அல்லது வருமானம் ஈட்டாத பத்திரங்கள் ஆகியவற்றால் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது. உலகில் எந்தப் பெரிய முன்னேற்றமும் இல்லாத நிலையில், அனைத்தும் அமைதியாக இருக்கும்போது, அவை ஒன்றன்பின் ஒன்றாக செல்கின்றன.

புவிசார் அரசியல் அழுத்தங்கள் தவிர, தங்கம் வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் உந்தப்படுகிறார்கள், ஏனெனில் நடுத்தரமான காலத்தில் இருந்து நீண்டகாலம் வரை, அது அதன் மதிப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது மற்றும் பணவீக்கத்தை திறம்பட சமாளித்துள்ளது.