Published: 31 ஆக 2017

தங்கத்தை மறுசுழற்சி செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

அதிகாரப்பூர்வ தங்க இருப்புக்களாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வைத்திருப்பது நீங்கலாக, இந்தியாவில் சுமார் 23,000 டன் தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிடுகிறது. உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோராக இந்தியா உள்ளது. இது, உலகத்தின் தங்க நுகர்வில் கால் பங்கிற்கு மேல் இருக்கிறது. 23,000 டன்கள் தங்கமானது குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரால், தங்கள் வீடுகளிலும் அல்லது வங்கி சேமிப்புப் பெட்டகங்களிலும், மற்றும் வரலாற்று ரீதியாக பெறப்பட்ட தங்கக் கட்டிகள், நாணயங்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடைகளாக பெறப்பட்ட நகைகள் ஆகியவை இந்திய கோவில்களாலும் வைத்திருக்கப்படுகிறது.

எனினும், வருடாந்திர தங்கத்தின் தேவையானது உற்பத்தியை விட அதிகமாக உள்ளது. ஒரு ஆண்டில் உலகில் நுகரப்படும் 4,300 டன்களுக்கும் மேற்பட்ட தங்கத்தில், சுமார் 25 சதவீதமானது மறுசுழற்சி (பெரும்பாலும் பழைய நகைகள்) மூலம் பெறப்படுகிறது. தங்கம் கெட்டுப்போவதோ அல்லது கிழிந்துபோவதோ இல்லை என்பதால், பூமியில் இதுவரை தோண்டப்பட்ட அனைத்து தங்கங்களும் இன்னும் ஏதாவது சில வடிவங்களில் உள்ளன. துருப்பிடித்தல்-எதிர்ப்புத்திறன் போன்ற அதன் தலைசிறந்த பண்புகள் காரணமாக, தங்கமானது மறுசுழற்சி செய்வதற்கு உகந்ததாக இருக்கிறது. உலக தங்க கவுன்சில் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப்பின் ஆய்வின்படி, உண்மையில் 1995ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில் கிடைக்கப்பெற்ற தங்கத்தின் மொத்த விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கமே ஆகும்.

ஆய்வானது, தங்க மறுசுழற்சியில் உள்ள பிராந்திய வேறுபாடுகளை அடையாளம் கண்டது. உதாரணமாக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள், உலக நிதி நெருக்கடி காரணமாக, அதன் மொத்த மறுசுழற்சியானது 2004-ல் 27 சதவிகிதத்திலிருந்து 2011-ல் 43 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. ஆசியாவிற்குள், சீனாவின் தங்கத்தின் இருப்பானது, அதன் மறுசுழற்சி செய்யும் நிலை காரணமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் மறுசுழற்சி நிலையானது, மாறாக, நிலையானதாக உள்ளது, மேலும் மொத்த தங்க கையிருப்பில் அவை ஒரு சிறிய விகிதத்தை மட்டுமே கொண்டுள்ளது - இது இந்தியாவில் மதிப்பிடப்பட்ட 23,000 மெட்ரிக் டன்களில் 0.5 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது.

இந்தியாவில், மறுசுழற்சி செய்யப்படும் தங்கமானது நமது நாட்டின் தங்க விநியோகத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, இது 1990-ல் இருந்து இந்திய நகைகள் தேவையில் 15%-ஐ பூர்த்திசெய்கிறது. தங்களுடைய தங்கத்தை மறுசுழற்சி செய்ய விரும்பும் நுகர்வோர்கள், எதிர்காலத்தில் சிறந்த முறையில் பணம் ஈட்டுவார்கள். ஹால்மார்க்கிங்கில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை நுகர்வோருக்கு தங்கள் ஆபரணங்களின் கேரட் குறித்து அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்றன.

உலக தங்க கவுன்சிலின் கருத்துப்படி, தங்க மறுசுழற்சிக்கான மூன்று ஆதாரங்கள் உள்ளன: நகைகள், உற்பத்தி கழிவு, மற்றும் ஆயுள்-நிறைவடைந்த தொழிற்சாலைப் பொருட்கள். நகை கழிவு என்பது மிகப் பெரிய பிரிவாகும், இது மறுசுழற்சி செய்யப்படும் தங்கத்தில் 90% -95% ஆகும். இது தனிநபர்களிடமிருந்து (பணத்திற்காக தங்கத்தை விற்பவர்கள் அல்லது புதிய தங்கத்திற்காக பழைய நகையை மாற்றிக்கொள்பவர்கள்), அல்லது தவணை செலுத்தத் தவறிய கடன்களுக்காக அடமானமாகப் பெறப்பட்ட தங்கத்தை விற்பனை செய்யும் அடகு கடைக்காரர்கள் அல்லது நகைக் கடன் அளிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது.

பல சுத்திகரிப்பு நிறுவனங்களும், நகைக் கடன் அளிக்கும் நிறுவனமும், சில நேரங்களில் நகைக்கடையுடன் இணைந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் மறுசுழற்சிக்கான சேகரிப்பு மையங்களை அமைத்துள்ளன. எதிர்காலத்தில், மறுசுழற்சிக்கான சேகரிப்பு என்பது மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான மற்றும் உயர்ந்த அமைப்பாக மாறும். இது விலைமதிப்பற்ற உலோகத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மஞ்சளாக அல்லாமல் பசுமையானதாகவும் மாற்றும்.