Published: 10 ஆக 2017

சட்டரீதியாக தங்கம் வைத்துக் கொள்வதென்றால் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

2016ஆம் ஆணடு டிசம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் தேடுதலின்போது கைப்பற்றிய வெளிப்படைத் தன்மையில்லாத செல்வத்தின் மீது இந்திய அரசு அதிகாரம் விதித்தது. இதன் பொருள் என்னவென்றால் பரம்பரை வழியாக தங்கத்தை வைத்துக் கொள்ள எந்த எல்லையும் இல்லை என்றாலும் , நீங்கள் கணக்குக் காட்ட முடியாத தங்கம் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக இருந்தால் நீங்கள் அபராதம் விதிக்கப்படுவீர்கள்.


இதற்கான அபராதம் எவ்வளவு?

அனுமதிக்கப்பட்ட அளவிலிருந்து தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருந்தால் இந்த அபராதத் தொகையானது 60 சதவீதமாகக் கணக்கிடப்படுகிறது. 25 சதவீதம் சர்சார்ஜ்ஜூம் (துணை வரி) செலுத்த வேண்டும். ஒரு திருமணமான பெண்மணி 750 கிராம் தங்கம் வைத்திருந்தால், அதற்கு கணக்கு காண்பிக்கவில்லை என்றால், அந்த தங்கத்தில் 250 கிராம் தங்கத்திற்கு அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அதாவது இதன் மதிப்பில் (60+25)% என்று இது கணக்கிடப்படுகீறது.


எல்லாவிதமான தங்கத்திற்கும் கணக்கு அளிப்பது அவசியமா?

நீங்கள் தங்கத்திற்கென கணக்கு அளிக்காத தருணங்கள் மூன்று உள்ளன.

முதலாவதாக, உங்களுக்கு சொந்தமான தங்கம் அனுமதிக்கக்கூடிய எல்லையில் இருந்தால். அதாவது ஒரு திருமணமான பெண்ணுக்கு 500 கிராம் தங்கமும் திருமணமாகாத பெண்ணுக்கு 250 கிராம் தங்கமும் அந்தக் குடும்பத்தின் ஆண் நபருக்கு 100 கிராம் தங்கமும் சொந்தமாக இருந்தால் அந்த தங்கம் சட்ட ரீதியாக செல்லுபடியாகும். இதனை எந்த சூழ்நிலையிலும் கைப்பற்ற முடியாது. இந்த எல்லையை தாண்டினால்தான் அபராதம் விதிக்கக்கூடும்.

இரண்டாவதாக, தள்ளுபடி செய்யப்பட்ட வருமானங்களான விவசாய வருமானம், கணக்கில் காட்டப்பட்ட வருமானம், காரணமுள்ள வீட்டு சேமிப்பு ஆகியவை மூலம் வாங்கப்பட்ட தங்கமும் நகைகளும் தற்போதுள்ள முறைகளின் படி அபராதத்திற்கு உட்பட்டவை அல்ல. வரிவிதிப்பு முறைகளில் முன்மொழியப்பட்ட ஷரத்துகளிலும் இவை உள்ளடங்கவில்லை. எனவே இத்தகைய தங்கத்திற்கும் கணக்கு தேவையில்லை.

மூன்றாவதாக, சட்ட ரீதியாக பெறப்பட்ட நகைகளும் தங்கமும், அதற்கான ஆதாரங்கள் சரியாக விளக்கப்பட்டால் எந்தக் கட்டணத்தையும் பெறாது. எதிர்காலத்தில் உள்ள வருமானவரி சட்டத்திருத்தங்களினாலும் பாதிக்கப்படாது.

அப்படி என்றால் இந்த விளக்கப்பட்ட ஆதாரங்கள் என்பன யாவை? உங்களது தங்கம் சட்ட ரீதியாக பெறப்பட்டது அல்லது பரம்பரை சொத்தாகக் கிடைத்தது என்று நீங்கள் எப்படி நிரூபிப்பீர்கள், அதாவது இந்த விளக்கப்பட்ட ஆதாரங்களின் மூலம் பெறப்பட்டு கணக்கில் கொண்டு வரப்பட்டது என்று எவ்வாறு நிரூபிப்பீர்கள்?
 
  1. நீங்கள் வைத்துள்ள வம்சாவழித் தங்கத்திற்கான சொத்து வரி ரசீதுகள் நீங்கள்தான் அதற்கு சட்ட பூர்வமான உரிமை பெற்றவர்கள் என்று நிரூபிக்க தேவை.
  2. உங்களுடைய தங்கத்திற்கான சொத்துரிமை உங்களுக்கு ஒரு உயிலின் மூலம் கிடைத்திருந்தால், அந்த வம்சாவழி சொத்தை நிரூபிக்க அதன் நகல் ஒன்று அவசியம்.
  3. அந்த தங்க நகை உங்களுக்கு பரிசாகக் கொடுக்கப்பட்டிருந்தால், அதற்கான ஆதாரத்தை நீங்கள் காண்பிக்க வேண்டியிருக்கும். இதற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வரையில் நீங்கள் வட்டி கட்ட வேண்டும்.
  4. உங்களுக்கு தங்க நகைகள் வம்சா வழியாகக் கிடைத்துள்ளது, ஆனால் இது வரை நீங்கள் அவற்றிற்கென எந்த வரியும் செலுத்தவில்லை என்றால், மதிப்பீட்டு அறிக்கைகள் அளிக்கப்படவேண்டும். அந்த நகையை வடிவம் மாற்றினாலோ அல்லது வேறு மாதிரியாக செய்தாலோ, அதற்கான ரசீதுகளை கேட்கும்போது கொடுக்க வேண்டும்.
  5. அந்த தங்கம் வம்சாவழியானது புதிதாக வாங்கப்பட்டது அல்ல என்று நிரூபிக்க அத்தாட்சியான திருமணப் புகைப்படங்களை நீங்கள் காண்பிக்கலாம்.
  6. தங்கம் உட்பட பிற மதிப்பான பொருட்கள் உங்கள் வீட்டு காப்பீட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தால், அந்த காப்பீட்டு பாலிசியை தெளிவான சான்றாகப் பயன்படுத்தலாம்.
  7. நிதி நெருக்கடி காலங்களின்போது அடமானமாக வைத்த நகையின் ரசீதுகளும் இந்த காரணங்களுக்கு சான்றாக உதவும்.

இந்திய குடிமக்கள் இதுவரை 23,000 டன்கள் தங்கம் வைத்துள்ளார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முதல் தரமான சொத்தானது பரம்பரையாகக் கிடைத்தது அல்லது சட்ட ரீதியான வருமான ஆதாரங்களால் வாங்கப்பட்டது என்று நிரூபிப்பதற்கான சான்றுகள் தேவை. எனினும் நீங்கள் வம்சாவழியாகப் பெற்றுள்ள தங்க நகைகள் சட்ட ரீதியாகப் பெறப்பட்டவைதான் என்று நிரூபிப்பதற்கான எந்த ஒற்றை சாளரமும் கிடையாது.

Sources:
Source1Source2Source3Source4Source5