Published: 04 செப் 2017

இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

பல இந்தியர்களுக்கு தங்க முதலீடுகள் மற்றும் தங்க நகைகள் ஆகியவை என்றும் பிரியமானவை ஆகும். பல்வேறு வகையான தங்க முதலீடுகள் உருவாகியிருந்த போதிலும், இந்தப் போக்கு பல ஆண்டுகளாக மாறவில்லை. எந்த வகையிலான முதலீட்டை வாங்கும் போதும், முதலீடுகளை கண்காணிக்க சில அடிப்படை இணக்கம் தேவைப்படுகிறது. தங்கத்தை வாங்கும் போது தேவைப்படும் ஆவணங்களின் அளவு மாறுபடும், ஆனால் பெரும்பாலான பிற சேமிப்பு பொருட்களை கொள்முதல் செய்யும் போது தேவைப்படும் ஆவணங்களுடன் இதை ஒப்பிடலாம். தங்க நகை அல்லது தங்க முதலீட்டின் பல்வேறு மின்னணு வடிவங்களில் ஒன்றை வாங்குவதற்கு முன்னர் நீங்கள் என்னென்ன வழங்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

இயல்பான தங்கம்

ரூபாய் 2 இலட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கும் ஒருவருக்கு, ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. வாங்குபவர், நகைக் கடைக்கு சென்று, தேவையான கொள்முதலை செய்யலாம். ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை என்ற இந்த குறிப்பிடத்தக்க அம்சமானது தங்கத்தின் பெரிய நன்மைகளில் ஒன்றாகும்.

இருப்பினும், 2 இலட்ச ரூபாய்க்கு அதிகமான மதிப்பிலான தங்க நகைகளை வாங்குவதற்கு, பான் கார்டு அவசியம் என்பது முக்கியம் ஆகும். முன்னதாக, 5 இலட்ச ரூபாய்க்கு மேல் நகை வாங்குவதற்கு மட்டுமே பான் கார்டு அவசியமாக இருந்தது. எனினும், ஜனவரி 1, 2016 முதல் அரசாங்கம் விதிமுறைகளை மாற்றியது. பான் கார்டு சமர்ப்பிப்பதால் ஒரு நபர் வரி எதுவும் செலுத்த வேண்டியிருக்காது - அது அதிக வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் கொண்டுவருகிறது மற்றும் ஒரு நல்ல நடைமுறையாக உள்ளது. அரசாங்கத்தின் பணமதிப்பு நீக்க முன்னெடுப்புக்கு பின்னர், இது மேலும் அவசியமானதாக ஆனது.

தங்க இடீஎஃப்-கள்

தங்கம் இடீஎஃப்-கள் என்பது மற்றொரு பிரபலமான முதலீட்டு முறையாகும், மேலும் கடந்த சில ஆண்டுகளில் இவை நல்ல பணப்புழக்கத்தைக் கண்டிருக்கிறது. தங்க இடீஎஃப்-களை ஒருவர் வாங்குவதற்கு, ஒரு டிமேட் கணக்கைத் திறக்க வேண்டும், இதில் "உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்" என்பதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். ஒரு நபருக்கு அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவை தேவை என்பது இதன் பொருள் ஆகும். நீங்கள் ஒரு பங்குத் தரகு கணக்கு மற்றும் ஒரு டீமேட் கணக்கு ஆகியவற்றைத் திறக்க வேண்டும் என்பதால், இந்தத் தகவல்களை வழங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் (அடையாளச் சான்று / முகவரிச் சான்று ஆக சில வகையான ஆவணங்கள் மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும்) செல்லுபடியாகும் என்பது குறித்து உங்கள் பங்கு தரகர் ஆலோசனை அளிப்பார்.

தங்கப் பத்திரங்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இவை, தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய வழிகளில் சமீபத்திய சேர்க்கைகள் ஆகும். இந்தப் பத்திரங்களானது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன, இவற்றை அஞ்சல் அலுவலகங்களில் இருந்து வாங்க முடியும். தனிநபர்கள் இந்தப் பத்திரங்களை நாட்டில் உள்ள செபி அமைப்பால்- அங்கீகரிக்கப்பட்ட தரகர்கள் மூலமும் வாங்கலாம். நீங்கள் முதலீட்டை மேற்கொள்வதற்கான ஒரு கணக்கைத் திறக்கும் முன்னர், தங்கப் பத்திரங்கள் பெறுவதற்கு முகவரி மற்றும் அடையாளச் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். சுருக்கமாக, "உங்கள் வாடிக்கையாளரைத் அறிந்து கொள்ளுங்கள்" என்பதற்கான தேவைகளுக்கு நீங்கள் இணங்க வேண்டும்.

பல்வேறு முதலீட்டு வழிகாட்டல்களிலிருந்து பார்க்கும்பொழுது, எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் தங்கம் வாங்குவதற்கு எளிய வழி என்பது தங்க நகைகள் வாங்குவதாகும் (நீங்கள் ரூபாய் 2 இலட்சம் வரை வாங்கும் வரை). தங்க நகைகள் வாங்குவது என்பது எப்போதுமே எளிமையானதாகவும், எளிதான முதலீட்டு வடிவமாகவும் இருக்கிறது, மேலும் இந்த நிலை எப்போதும் மாறப்போவதில்லை. மேலும், இதை எந்தவித ஆவணங்களும் இல்லாமல் எளிதாக விற்பனை செய்ய முடியும். அதனால்தான், தங்கம் என்பது எப்பொழுதும் விருப்பமான சொத்து வகையாக உருவானது, மேலும் அதன் நுகர்வு மதிப்பை மறந்துவிட வேண்டாம்.