Published: 14 ஜூலை 2017

தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பணிபுரியும் பெண்களுக்கான வழிகாட்டி

பணிபுரியும் ஒரு பெண் நமது நவீன சமுதாயத்தின் சிறந்த கலாச்சாரமாக கருதப்படுகிறாள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஏன் பாதுகாக்கக் கூடாது? பெண்களுக்கு எப்போதும் தங்கத்தின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. செல்வம், செழிப்பு, அந்தஸ்து, நாகரீகம் என அனைத்து வடிவங்களிலும் தங்கம் அழகாக இருக்கிறது. தங்கத்தின் மீதான இந்த மோகம் உங்களுக்காக செயல்படும் இலாபகரமான சேமிப்பு திட்டமாக மாறலாம்.

பணிபுரியும் பெண்ணுக்கு அவளுடைய 20கள், 30கள் அல்லது 40களில் தங்கம் எவ்வாறு மிகவும் பயனுள்ள மற்றும் இலாபகரமான முதலீட்டு விருப்பமாக மாறுகிறது என்பது குறித்து நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

சிறிதாக துவங்கவும்:
பெரும்பாலான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பெரிய மூலதனம் தேவை என நினைக்கிறார்கள். அது முற்றிலும் உண்மையல்ல. இப்போது ஒரு மாதத்திற்கு ரூ.1000 என்ற சிறிய தொகை முதல் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்கத்தை பணமாக்குதல் திட்டங்கள், தங்க ஈ.டி.எப் (பங்குச்சந்தை வர்த்தக நிதி) மற்றும் தங்கக் குவியல் திட்டங்கள முதலியவற்றில் உடனடியாக ஒரு பெரும் தொகையை செலுத்தாமல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உங்கள் தங்க வங்கியை உருவாக்க முயற்சிக்கலாம். சேமிக்கப்பட்ட உங்கள் தங்கம் வருமானத்தையும் தரும், அதேநேரத்தில் பல வரிச் சலுகைகளையும் பெற்றுத் தரும்.

உங்கள் பணம் பெருகுவதை பாருங்கள்:
தங்க ஈ.டி.எப் போன்ற வழிமுறைகள் மூலம், நீங்கள் தரம், தூய்மை, விலை போன்றவற்றை உறுதிப்படுத்தலாம். பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செய்வது போலவே நீங்கள் தங்க ஈ.டி.எப். களில் வர்த்தகம் செய்யலாம் மற்றும் ஒவ்வொரு நாளும் உங்கள் தங்கத்தின் மதிப்பை மின்னணுவாயிலாக கண்காணிக்கலாம். உங்களுக்கு டிமெட்டீரியலைஸ்டு (டிமேட்) கணக்கு இருக்கும் வரை, நீங்கள் எங்கும் செல்லாமல் ஆன்லைனிலேயே வாங்கலாம் விற்கலாம்.

முன்கூட்டியே திட்டமிடவும்:
உங்கள் தங்கத்தை ஆடம்பரமாக காண்பிக்க விரும்பினால், நகைகளே சிறந்த தேர்வாகும் ஆனால் நகைகளுக்கு உங்களுக்கு மிக அதிக பணம் தேவைப்படும். அதற்காக நீங்கள் எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்? இது ஒரு எளிய வழியாகும். ஒரு நகைக் கடைக்காரரிடம் சிறு தொகையை வழக்கமாக சேமிப்பதன் மூலம், நகைக் கடைக்காரர் வழங்கும் எஸ்.ஐ.பி (SIP) மூலமாக ஒரு நகையை வாங்க நீங்கள் திட்டமிடலாம். ஒவ்வொரு மாதமும் அல்லது ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறை ஒரு சிறிய டிக்கெட் அளவுள்ள நாணயங்கள் மற்றும் கட்டிகளில் முதலீடு செய்யலாம். இதில் நகைகள் போலல்லாமல், செய் கூலி மற்றும் இதர சேதாரச் செலவுகள் குறைவாக இருக்கும். நீங்கள் உங்கள் தங்கத்தை சொந்தமாக்கிக் கொள்வீர்கள் மற்றும் தேவைப்படும் போது அதை நகைகளாக மாற்றிக் கொள்ளலாம். தூய்மையை உறுதிப்படுத்த எப்போதும் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என பாருங்கள் மற்றும் நீங்கள் செலுத்தும் பணத்திற்கு உரிய நகைகளை பெறுகிறீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தங்கத்தில் முதலீடு செய்வதற்கு எது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பளிக்கிறது?
  • உங்கள் பெற்றோர்களின் உதவியில்லாமலே உங்கள் திருமண நகைகளை நீங்களே சுயமாக திட்டமிடலாம். நகைக் கடைக்காரர்கள் வழங்கும் எஸ்.ஐ.பி திட்டங்களில் முதலீடு செய்வது பெரிய திருமண நகைகளை வாங்க உதவும்.
  • சிறு நிதி முதலீடுகள் மூலம் வீடு அல்லது கார் வாங்குவது போன்ற பெரிய நிதி இலக்குகளை நீங்கள் திட்டமிடலாம். எளிமையாகக் கூற வேண்டுமானால், பல சிறிய தங்கத்தில் முதலீடு செய்வது உங்கள் பெரிய நீண்ட கால இலக்குகளை நிறைவேற்ற உதவும்.  
  • உங்கள் ஓய்வுக்காக திட்டமிடும் போது, தங்கத்தில் முதலீடு செய்வது உங்கள் முதலீட்டு பிரிவில் சேர்க்க வேண்டிய ஒரு நல்ல தேர்வாகும். தங்கம் பண மதிப்பின் ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்தி ஆபத்தை குறைக்கிறது மேலும் இது பணவீக்கத்திற்கு எதிரான ஒரு வேலியாகவும் செயல்படுகிறது.