தங்கத் தாள்

பலதரப்பட்ட தங்கத்தின் விலை சார்ந்த தங்க முதலீட்டுப் பத்திரங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. இருப்பினும் இதில் முதலீட்டாருக்கு நேரடியாக தங்கத்தின் உரிமையாளராகும் வாய்ப்பு இல்லை.

நுண்மைத்தன்மை

அரிய உலோகத்தின் தூய்மையை ஒரூ கலப்புலோகத்தின் 1000 பங்குகளின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. உதாரணமாக 0.995 தூய்மையான ஒரு தங்க கட்டி 995 பங்கு தங்கத்தையும் 5 பங்கு மற்ற உலோகத்தையும் கொண்டுள்ளது.

நுழைவுக்கட்டணம்

பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களிடம் தங்க இடிஎஃப் ஆல் வசூலிக்கப்படும் நுழைவுக்கட்டணம்.பரஸ்பர நிதி இந்த கட்டணத்தை நிகரச் சொத்து மதிப்பில்(NAV).  ஒரு குறிப்பிட்ட  சதவீதக்கணக்காக வசூலிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக NAV ரூபாய் 20 என்றும் நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம் 2% என்றுமிருந்தால் ஒரு அலகின் அடிப்படை விலை ரூபாய 20.4 ஆக இருக்கும்.

மூலமதிப்புயர்வு

தங்கத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை உயர்வது  அல்லது அதிகரிப்பது ஆகியவற்றை  குறிக்கிறது.வரலாற்று ரீதியாக  இந்தியாவில் தங்கத்தின் மதிப்பு பொதுவாக உயர்ந்து கொண்டே இருக்கும் இயல்புடையது.

பிஐஎஸ் ஹால்மார்க்

ஹால்மார்க் என்பது இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான தரக்குறியீட்டு முறைமை.இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின்  (BIS) தரக்குறியீடு தங்கம்/வெள்ளி ஆகியவற்றின் தூய்மை அளவுக்கு  சான்றிதழ் அளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒரு தங்கப் பொருளின் மீது இருக்கும்  BIS தரக்குறியீடு  இந்திய தேசீய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் கீழுள்ள  இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்   வரையறுத்த   தர அளவீடுகளுக்கு உட்பட்டதற்கான  சான்றிதழ்.

சந்தை மறையிடர்

பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலை திடீரென சரியும் வாய்ப்புக்களின் இடர்பாடுகளைப்பற்றி குறிப்பிடுகிறது. இருப்பினும் இந்தியாவில் தங்கம் குறித்த இந்த இடர்பாடுகள் மிகவும் குறைவானது. ஏனென்றால் தங்கத்தில் விலை பொதுவாக எப்பொழுதும் உயர்ந்து கொண்டே செல்லும் நிலைதான் காணப்படுகிற்து.
Subscribe to