Published: 16 ஆக 2017

நவீன பெண்ணிற்கான அன்றாட தங்க சங்கிலிகள்

ஒவ்வொரு பெண்ணின் அன்றாட நகைத்தொகுப்புகளின் இன்றியமையாத பகுதி தங்க நெக்லேசுகள். உங்களுக்கு எத்தனை வயதானாலும் சரி, எந்தவிதமான வாழ்க்கை முறையை நீங்கள் வாழ்ந்தாலும் சரி, நீங்கள் தங்கத்தை பாராட்டுவதற்கென்று தனித்துவமான வழிகள் உள்ளன. ஒரு தங்க சங்கிலி எவ்வாறு மற்றொன்றிலிருந்து வேறுபடுகிறது, எந்தவிதமான பண்டிகைகளுக்கும் எந்தவிதமான உடைகளுக்கும் எப்படிப்பட்ட சங்கிலியை அணிவது என்று தெரிந்துகொள்வது உங்களது நவநாகரிக பாணியை சற்று உயர்த்திக் காட்டும். இன்று கிடைக்கும் சில வகையான தங்க சங்கிலிகளின் வகைகள் இதோ:


ஆங்கர் / மரைனர் சங்கிலி (ANCHOR/ MARINER CHAIN)

ஆங்கர் சங்கிலிகளில் ஒரே மாதிரி அளவுள்ள நீள்வட்ட பிணைப்புகள் உள்ளன. இவை செங்குத்தாகவும் படுக்கைவாட்டிலும் மாறி மாறி வரும் முறையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு செங்குத்தான கட்டி இதற்குள் ஓடுகிறது. இந்த வடிவமான படகுடன் நங்கூரத்தை இணைக்கும் மாதிரியிலிருந்து கவரப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சங்கிலி முறைகளின் வலுவான வகைகளில் இதுவும் ஒன்று. தட்டையான ஆங்கர் சங்கிலிகள் மற்றும் உருண்டையான ஆங்கர் சங்கிலிகள் என்று இரண்டு வகைகள் உள்ளன. இவற்றிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

எதற்கு ஏற்றது. மேற்கத்திய உடையுடன் செல்லக்கூடிய அரை பாரம்பரிய நிகழ்வுகள்

Gold Chain For Formal Wear

ரோலோ சங்கிலி (ROLO CHAIN)

பெல்ச்சர் சங்கிலிகள் (Belcher chains) என்றும் இவை அழைக்கப்படுகின்றன. இந்த சங்கிலிகளில் தட்டையான அல்லது நீள்வட்ட இணைப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகள் நீளத்தில் குறைவானவை, ஆனால் தடிமனான சுற்றளவு கொண்டவை. அளவில் மாற்றி அணியக்கூடியவை. அன்றாட அணிதலுக்கு ஏற்றவை ரோலோ சங்கிலி நெக்லேசுகள். உங்களது தோற்றத்திற்கு மெலிதான சொகுசான அழகை அளிக்கிறது

எதற்கு ஏற்றது. மேற்கத்திய அல்லது இந்திய பாரம்பரிய உடையுடன் அணியும்போது அன்றாட கார்ப்பரேட் தோற்றத்திற்கு ஏற்றது

Everyday Wearing Rolo Gold Chain

ஹெர்ரிங்போன் சங்கிலி (HERINGBONE CHAIN)

V-வடிவிலான இணைப்புகளால் இத்தகைய சங்கிலிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் தளத்தில் தட்டையாகத் தோற்றமளிக்கும். V- வடிவ இணைப்புகள் ஒவ்வொரு வரியிலும் மாறி மாறி வருவதால் தட்டையான உருண்டோடும் தோற்றம் கிடைக்கிறது. இந்த பாணிக்கு ஹெர்ரிங்போன் பாணி என்று பெயர். விரைப்பான நேர்த்தியான சட்டை அணியும்போது இந்த வகை சங்கிலிகள் ஏற்றது. ரோஸ் நிற தங்கம் அல்லது வெள்ளை நிற தங்கத்தில் இந்த சங்கிலி அமைந்தால் நச்சென்று நவீனமாக இருக்கும்.

எதற்கு ஏற்றது: ஒரு முக்கியமான அலுவலக நிகழ்ச்சி அல்லது மாநாடுகளுக்கு ஏற்றது. பாரம்பரிய சொகுசு முறையிலிருந்து நவீன தொடர்பை இணைக்கிறது

V Shaped Herringbone Gold Chain

ஃபிகாரோ சங்கிலி (FIGARO CHAIN)

ஃபிகாரோ சங்கிலிகள் சிறிய மற்றும் நீண்ட தட்டையான இணைப்புகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு மூன்றிலிருந்து நான்கு குறுகிய இணைப்புகளிலும் நீண்டதான ஒன்றாக தோன்றுகிறது. இத்தாலியில் உருவான இந்த மாதிரி வடிவம், தங்க நகைகளின் நவீன டிரெண்டுக்கு ஏற்றது. ஒரு பதக்கம் அல்லது டாலருடன் இணைந்தால் இவை கவர்ச்சிகரமாக விளங்கும். உங்களது அன்றாட நகைத்தொகுப்பில் நீங்கள் அதனை சேர்க்கலாம். அவை நவநாகரிகமாகவும் மென்மையாகவும் தோன்றும்.

எதற்கு ஏற்றது: சாதாரணமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்றது. ஒரு மதிய விருந்துக்கு செல்லும்போதோ அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்லும்போதோ இது ஏற்றது. பாரம்பரியம் கலந்த நவீன உடைகளுடனோ அல்லது இந்தோ வெஸ்டர்ன் உடைகளுடனோ பொருந்தும்.

Figaro Gold Chain For Casual Outing

கோதுமை சங்கிலி (WHEAT CHAIN)

கோதுமை தானியத்தின் தோற்றத்தை அளிக்கும் சங்கிலியின் மாதிரி இது. இந்த அழகான வடிவம் நவீன உடைகளுடன் அணி ஏற்றது. முறுக்கப்பட்ட நீள்வட்ட இணைப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அற்புதமான காட்சியை அளிக்கின்றன. இது நீண்ட நாட்களுக்கு உழைக்கக்கூடிய சங்கிலி. கனமான பதக்கம் அணிந்தாலும் தாங்கக்கூடியது. இந்த சங்கிலியை மட்டும் அணிவதும் நவநாகரிகமான தேர்வுதான்.

எதற்கு ஏற்றது: சற்று நன்றாக உடையணிந்து அலங்காரம் செய்து செல்லக்கூடிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்றது. உயர் கம்பெனிக்கான இரவு விருந்து அல்லது கணவர் வீட்டு உறவினர்களுடன் இரவு விருந்து போன்ற விழாக்களுக்கு ஏற்ற சங்கிலி.

Wheat Gold Chain For Modern Look

மறையக்கூடிய சங்கிலி (DISAPPEARING CHAIN)

இது மிகவும் பிரபலமான சங்கிலி வகை. அவை எவ்வளவு நுணுக்கமானவை மற்றும் அமைதியானவை என்பதால் இவை மிகவும் பிரபலம். ஒரு டாலருடன் ஜோடியாக இணைந்து அணியத்தக்க சங்கிலி. உங்களது கழுத்தின் அழகிற்கு அழகு சேர்க்கக்கூடியது. ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது பூ வடிவம் கொண்ட பதக்கத்துடன் அணிந்தால் இதன் அழகிற்கு அழகு கிடைக்கும்.

எதற்கு ஏற்றது.: உங்களுக்கு முக்கியமான மற்றவருடன் ஆண்டு விழா இரவு உணவு, நண்பர்களுடன் கொண்டாட்டம் போன்றவற்றிற்கு ஏற்றது. ஒரு மோனோக்ரோம் உடைக்கு தங்கத்தின் தீண்டலை அளிக்கும். நாக சங்கிலி (SNAKE CHAIN)

நெருக்கமாக பிணைக்கப்பட்ட வளையங்கள் கொண்ட வளைந்து கொடுக்கக்கூடிய சங்கிலி. பதக்கம் கொண்ட அட்டிகைகளுக்கு ஏற்றது. எளிமையான நகையை அணியவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற சங்கிலி. நவநாகரிகமாக அணிய வேண்டுமென்றால் இவற்றை மணிக்கட்டைச் சுற்றி கூட அணிந்து கொள்ளலாம். அல்லது குதிரைவால் கொண்டடையுடனோ அல்லது சில ஹேர் க்ளிப்புகளின் உதவியுடன் உங்கள் சடையிலோ அணிந்தால் உங்களது சிகை அலங்காரம் அழகு பெறும்.

எதற்கு ஏற்றது: அன்றாட அலுவலக அணிதலுக்கு ஏற்றது. உங்களுக்கென்று தனித்துவமாக உள்ள பாணிக்கு ஏற்றது. இதனை மற்ற வகை நகைகளுடன் இணைக்கலாம். மற்ற வகை உடைகளுடன் அணிந்திருக்கலாம். ஒரு வாரத்தின் பல்வேறு நாட்கள் அணிந்திருக்கலாம்.

Snake Designed Gold Chain For Daily Wear

 

இன்று உங்களது தோற்றத்தை எடுத்துக்காட்ட எந்த தங்க நெக்லேசை அணியப் போகிறிர்கள்?

Sources: Source1Source2Source3Source4Source5