Published: 04 செப் 2017

தங்கத்தின் உணவு வகைகள்

மேலும் மேலும் கொடுக்கக்கூடிய பரிசு தங்கம்தான்.

பல ஆண்டுகளாக, நகைகளாகவும் நாணயங்களாகவும் பயன்பட்ட தங்கம் பல்வேறு பயன்பாடுகளில் உபயோகப்படுகிறது. ஆரோக்கியம், அலங்காரப் பொருட்கள், அறிவியல், மற்றும் முதலீடுகள் ஆகியவற்றில் தங்கம் பயன்படுகிறது. தங்கத்தை சாப்பிடவும் முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா?

சாப்பிடக்கூடிய தங்கம் விஷம் இல்லாதது. தங்கத்தின் சுத்த வடிவம் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. தங்க இலை, தங்கத் தூவல்கள், மிக நுண்ணிய தங்க தவிடுகள் என்று பல்வேறு தங்க உணவுகள் கிடைக்கின்றன. உலகெங்கும் கிடைக்கும் அற்புதமான, தங்கத்தைப் பயன்படுத்தும் உணவுகள் உங்கள் பார்வைக்காக இங்கே அளிக்கப்பட்டுள்ளது.

 
  1. 2007ஆம் ஆண்டு ஃப்ரோசன் ஹௌட் சாக்லெட் “Frozen Haute Chocolate” என்ற உணவு வகையை நியூயார்க்கை சேரந்த உணவு நிறுவனமான ஸ்டீஃபன் ப்ரூஸ் (Stephen Bruce) அறிமுகப்படுத்தியது. இதன் விலை 25,000 அமெரிக்க டாலர்கள் (ரூ. 16,11,137 ). இந்த இனிப்பு வகையானது 5 கிராம்கள் உண்ணக்கூடிய 23 காரட் தங்கத்தையும் 28 கோக்கோக்களையும் கலந்து உருவாக்கப்பட்டது.

    Frozen Haute Chocolate

    Image Source: Source
  2. சக நியூயார்க்வாசியான காப்ரியல் க்ரூத்தர் (Gabriel Kreuther) இதிலிருந்து மேலும் செழுமையான உணவை படைத்தார். அதன் பெயர் சாக்கலேட் கிர்ச் (“Chocolate Kirch”). இந்த உணவானது ஒரு மென்மையான கேக். இது நிறைவிற்கு ஒரு தங்க இலையைப் பயன்படுத்துகிறது.

    Chocolate Kirch

    Image Source: Source
  3. மிகவும் வரையறை உள்ள பிரதியான தங்க முலாம் பூசப்பட்ட கிட்கேட் சாக்லேட் 2015ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க டாலர் மதிப்பில் 16 டாலர்கள் மதிப்புள்ள இந்த சாக்லெட்டானது (ரூ.1031) 500 சாக்லெட்டுகள் விற்கப்பட்டது. இதன் ஒவ்வொரு கட்டியிலும், 24காரட் தங்கத்திலான மெல்லிய இழை உள்ளது. இது உள்ளே இருந்த வேஃபர் கட்டியை உள்ளிருந்து மூடியிருந்தது.

    Kitkat

    Image Source: Source
  4. நியூயார்க் நகரில் உள்ள ஒரு உணவு வண்டி $666 மதிப்பில் ஒரு பர்கரை உருவாக்கியது. டவுச் பர்கர் (Douche Burger) என்று அழைக்கப்பட்ட இந்த உணவில் கிளிஞ்சல், கறுவாடு, காளான்கள், பன்றி கறியிலான பெட்டி (patty) ஆகியவை உள்ளன. இதில் என்ன சிறப்பு? பன்றி கறியிலான பெட்டியில்(patty) 6 தாள்கள் உள்ளன. இவை 24 காரட் தங்க இலையில் சுற்றப்பட்டுள்ளது!

    Douche Burger

    Image Source: Source
Sources:
Source1, Source2, Source3, Source4, Source5