Published: 04 செப் 2017

தேவாவின் வரலாறு

இந்தியாவில் நகைகளின் வரலாறு என்பது அதன் சமூக மற்றும் கலாசார பின்னணியுடன் பிணைக்கப்பட்டுள்ளது; ஒரு நாடு உருவாக்கிய நகைகளின் மூலம் ஒரு நாட்டின் வரலாறை நீங்கள் கண்காணிக்க முடியும். 5000 ஆண்டுகளாக இந்திய நகைகள் என்பவை இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அழகியல் மதிப்புகளின் வெளிப்பாடாக இருந்தது, இது மக்கள், அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் ராஜ்யங்களை விவரிக்கிறது, அவை பொறிக்கப்பட்டு, தங்கமாகப் பாதுகாக்கப்படுகிறது. இந்த விரும்பத்தக்க உலோகத்தை செதுக்கும் பல்வேறு முறைகள் மற்றும் பல்வேறு கலை வடிவங்களின் கலவை ஆகியவற்றால், ஆட்சியாளர்களாலும் அரச குடும்பத்தினராலும் மட்டுமல்லாமல் வெளிநாட்டினராலும் விரும்பப்படும் உன்னதமான வடிவமைப்புகளையும் உருவாக்க உதவுகிறது. காலப்போக்கில், உள்ளூர் கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகளானது வெளிநாடுகளில் பரவியது. இது கைவினைக்கு புகழ் பெற்றுத் தந்தது, சில நேரங்களில் கலைப்படைப்புகளை உருவாக்கிய கைவினைஞர்களுக்கும் புகழை உருவாக்கியது.

தேவா எனப்படும் ஒரு கலையானது 400 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும், அப்பொழுது கைவினை தொழில் புரியும் கைவினைஞர்களின் குடும்பங்களுக்கு பிரதாப்கார்கின் ஆட்சியாளர்கள் நிலத்தை மானியமாக கொடுத்தனர். எனினும், நகையை உருவாக்கும் ஒரு வடிவமான அது நீண்ட காலத்திற்கு முன்பே இருந்ததாக நம்பப்படுகிறது. அதை பெங்காலி கைவினைஞர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே செய்துவந்ததாகவும், அவர்கள் விரும்பிய ஆதரவு வழங்கப்படவில்லை என்பதால், ஒரு கொடையாளரைத் தேடி அவர்கள் மேற்கு நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப்படுகிறது. இறுதியாக, அவர்களின் தேடல் முடிந்து, அவர்கள் ராஜஸ்தானில் குடியேறினார்கள். அவர்கள் உள்ளூரில் உள்ள சிலருக்கு தனித்துவமான கலை வடிவங்களை கற்பித்தனர், பின்னர் 'மீதமுள்ளவை வரலாற்றில்' இடம் பெற்றது. காலப்போக்கில், தேவா என்பது ஒரு குடும்ப வணிக உரிமையைப் பெற்றது, அதைச் செய்பவர்களால் அது கடுமையாகப் பாதுகாக்கப்பட்டது. பெண்கள் திருமணம் செய்துகொண்டு மற்ற குடும்பங்களுக்கு செல்வார்கள் என்பதாலும், அதனால் மற்றவர்களுக்கு இது தெரிந்துவிடும் என்பதாலும் இது பெண்களுக்கு ஒரு போதும் கற்பிக்கப்படவில்லை, ஆனால் தங்கள் மருமகளோடு இதைப் பகிர்ந்து கொண்டார்கள்!

நவீன காலத்தில், இந்திய கலைஞர்கள் தங்களின் பழமை வாய்ந்த கலையின் முந்தைய பெருமையை மீட்டெடுக்க முயற்சி மேற்கொள்ளும் முன்பு வரை, அக்கறை மற்றும் உதவும் மனமுள்ள ஆதரவாளர்கள் இல்லாததால் அழிந்துகொண்டிருக்கும் பல்வேறு மரபுகள் மற்றும் கலை வடிவங்களைப் போலவே, தேவாவும் காலப்போக்கில் வீழ்ச்சியை சந்தித்தது. தேவாவின் புத்தெழுச்சியில் பெரும்பாலும் குறிப்பிடப்படும் நபராக இருப்பவர் ரூபா வோரா. 1990களில் இந்தக் கலை வடிவத்தின் அசல் தன்மையை மீட்டு அவர் புத்துயிர் அளித்தார், அதனால் இன்றைய காலகட்டத்தில் அதன் புகழ் மீண்டும் பரவியது.

தேவா நகை என்பது கண்ணாடி மற்றும் தங்கம் ஆகியவற்றின் ஒரு தனித்துவமான கலவையாகும். பொறிக்கப்பட்ட நேர்த்தியான தங்கத் தகடுகள், கண்ணாடியுடன் இணைக்கப்பட்டு, இந்த தலைச்சிறந்த படைப்பு உருவாக்கப்படுகிறது. தங்கத் தாள்கள், தூய்மை மிகுந்தவை என்பதால், இவற்றைப் பொறுமையாகக் கையாள வேண்டும் மற்றும் இதில் நிபுணத்துவம் தேவை. ரூபாவால் எடுக்கப்பட்ட மாபெரும் மற்றும் பலமான முயற்சிகளால், தேவா என்பது இப்போது ஒரு குடும்பப் பெயராக மாறிவிட்டது! முகலாய அரசவைக் காட்சிகள், இந்து மத இதிகாசங்கள், மலர் வடிவங்கள், வரலாற்று காட்சிகள், விலங்குகள் - மான், யானை, இறகு கொண்ட தேவதைகள் மற்றும் வரலாற்றிலிருந்து பல வேறுபட்ட சித்திரங்கள் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் வடிவமைப்புகளுடன், தேவா என்பது ராஜாங்க மற்றும் செல்வச்செழிப்பு காலத்திலான இந்தியாவைக் காண்பிக்கும் ஒரு வகை நகைகள் ஆகும்.

அழகான கழுத்தணிகள், காதணிகள், கொண்டை ஊசி, மோதிரங்கள், மாங்க டிக்காஸ் ஆகியவை குறைவான விலையிலிருந்து மிக அதிக விலை வரை கிடைக்கின்றன, இது இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என இரு தரப்பினராலும் விரும்பப்படுகிறது. மகிமை வாய்ந்த நிறங்கள் மற்றும் வடிவமைப்புகளின் சாயல் உள்ளது என்பது தேவா நகைகளில் நவீன தலைமுறையினருக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. நாம் உற்று கவனித்தால், ஒவ்வொரு தேவா நகையும் தங்கத்தால் செய்யப்பட்ட ஒவியத்தில், ஒரு கலைஞர் தனது பார்வையை ஊற்றிய ஒரு படைப்பாக உள்ளது.