Published: 27 செப் 2017

தங்கத்தை மறுசுழற்சி செய்வது எப்படி?

Recycling Gold Bars

தங்கத்தை மறுசுழற்சி செய்வதற்கான செயல்முறையானது மனிதர்களின் புத்திசாலித்தனமான முயற்சிகளில் ஒன்றாகும். தங்கம் என்பது இயற்கையாகக் காணப்படக்கூடிய, உற்பத்தி செய்ய முடியாத ஒரு விலையுயர்ந்த உலோகமாகும், மேலும் அது ஒரு வரையறுக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே உள்ளது. உண்மையில், சமீபத்திய மதிப்பீடுகளின்படி, தற்போதைய விகிதத்தில் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்டால், அடுத்த 20 ஆண்டுகளுக்குப் போதுமான தங்கம் மட்டுமே பூமியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பூமி என்ற கிரகம் மிகவும் பெரியது என்றும், அதில் உள்ள தங்கம் எப்பொழுதும் தீராது என்பதும் நம்புவதற்கு எளிதானது என்றாலும், உண்மையில் அது சற்று சவாலாகவே உள்ளது. தங்கத்தைத் தோண்டி எடுப்பது என்பது பொருளாதார ரீதியில் இலாபகரமானதாக இருக்க வேண்டும். சுரங்கங்களில் இருந்து தங்கத்தை வெட்டி எடுப்பதில் இலாபம் ஈட்டுவது என்பது நமக்கு மிகவும் கடினமானதாகி வருகிறது. எளிதாக தங்கம் கிடைத்த தங்க சுரங்கங்களில் இருப்புகள் பெரும்பாலும் தீர்ந்துவிட்டது. மேலும், புதிய தளங்களில் மிகவும் குறைந்த அளவிலான தங்கமே உள்ளது.

நீங்கள் தங்கத்தை எவ்வாறு மறுசுழற்சி செய்ய முடியும்?

நுகர்வோர் மின்னணுப் பொருட்களில் இருந்து தங்கத்தை மறுசுழற்சி செய்வது என்பது பொதுவான வழிகளில் ஒன்றாகும். மின்னணுப் பொருட்கள் குறைந்த அளவிள் தங்கத்தைக் கொண்டுள்ளது – அவை முதன்மையாக மின் இணைப்புப் புள்ளிகளில் இருக்கும். பல பொழுதுபோக்குவாதிகள், மற்றும் சில வல்லுநர்கள் ஆகியோர் நுகர்வோர் மின்னணு சாதனங்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுத்து தங்களுடைய பொழுதைக் கழிக்கிறார்கள்.

இந்த செயல்முறை என்பது அதிக அடர்த்தியான இணைப்பிகளைக் கொண்டுள்ள பழைய சர்க்யூட் போர்டுகளைத் தேடுவதில் தொடங்குகிறது. இணைப்பிகளின் முட்களானது தங்கத்தால் பூசப்பட்டிருக்கும். ஒவ்வொரு சர்க்யூட் போர்டில் இருந்தும் அனைத்து தங்க முலாம் பூசப்பட்ட பாகங்களையும் கவனமாக அகற்ற, ஒரு வலுவான அமிலக் கலவை (நைட்ரிக் அமிலம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம்) சேர்க்கப்பட்டுள்ளது. தங்கம் அமிலத்துடன் வினைபுரிந்து தங்க குளோரைடு உருவாகிறது. இந்தக் கலவையை கொதிநிலைக்குக் கொண்டுவருதல் அல்லது நுண்ணிய வடிகட்டியில் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம், தங்கக் குளோரைடு ஆனது திரவக் கலவையிலிருந்து பிரிக்கப்படுகிறது. இதன் பிறகு ஒரு துகள் மட்டுமே எஞ்சியிருக்கும், அதை தங்கத்தின் உருகுநிலைக்கு அதிகமாக சூடேற்றும் போது, தங்கமானது சிறிய பொத்தான் போன்று உருவாகும். ஒரே ஒரு கணினியில் இருந்து பெறப்படும் தங்கப் பொத்தானின் அளவு என்பது மிக மிக குறைவாக இருந்தாலும், உலகின் எந்தவொரு தங்கச் சுரங்கத்தில் இருந்தும் பெறப்படும் 1 டன் தாதுவில் உள்ள தங்கத்தை விட, 1 டன் ஐஃபோன்களில் அதிகளவு தங்கம் இருக்கும் என்ற தகவல் ஆச்சர்யமாக இருக்கலாம்.