Published: 28 ஆக 2017

வருடத்தில் ஒரு முறை மட்டுமே காண முடியும் புனிதமான தங்க நகைகள்

புராண காலத்தில் இருந்து, தங்கம் என்பது இந்தியர்களின் வாழ்க்கையில் ஒரு செல்வாக்குமிக்க மற்றும் குறியீட்டு நிலையில் உள்ளது. இந்தியாவின் பல்வேறு கோவில்களில் பல நூற்றாண்டுகளாக கடவுள்கள் மற்றும் தேவியர்களின் தங்க ஆபரணங்கள் பொக்கிஷமாகக் வைத்திருக்கப்படுகின்றன. மிகவும் புகழ்பெற்ற மற்றும் அதிசயிக்கப்படும் பொக்கிஷங்களில் ஒன்றான ஐயப்ப பகவானின் புனித நகைகளானது திருவாபரணம் என்று அழைக்கப்படுகிறது, இது சபரிமலை கோவில் என்று பிரபலமாக அறியப்படுகிறது, இது கேரளாவில் அமைந்துள்ள இந்து சமய யாத்திரை மையமாகும்.

பாண்டலம் மன்னன் ஐயப்ப பகவானின் தற்காலிக மனித பிறவியை தனது மகனாக தத்தெடுத்து, மணிகண்டன் என்று பெயரிட்டார். அவர் நேர்த்தியாக நகைகளை வடிவமைத்து உருவாக்கும் மிகத் திறமையான கைவினைஞரை, தெய்வத்திற்காக ஆபரணம் உருவாக்குமாறு கட்டளையிட்டார். திருவாபரணம் என்ற அவருடைய புனித நகைப்பெட்டியானது, தற்போது பாண்டலம் அரண்மனை வளாகத்தில் உள்ள சிராம்பிக்கல் அரண்மனையில் அமைந்துள்ளது.

மாய நம்பிக்கைகளை வாழ்க்கையில் கொண்டு வரும், ஐயப்பனின் பொன் முகமூடி உட்பட திருவாபரணத்தில் பல தங்க ஆபரணங்கள் உள்ளது. தெய்வத்தின் வாகனமான (முகடு/ வாகனம்) புலியின் சிறிய உருவம், அத்துடன் ஐயப்பனின் மற்றொரு வாகனமாக இருக்கும் ஒரு தங்க யானை,ஆகியவை அதில் உள்ள பிற பொருட்கள் ஆகும். சரபோலி மாலை (கழுத்தணி), வெளக்கு மாலை (கழுத்தணி), மணி மாலை (கழுத்தணி), எருக்கம்பூ மாலை (கழுத்தணி) மற்றும் நவரத்தின வளையம் ஆகியவை தெய்வத்தின் பிற புனிதமான ஆபரணங்கள் ஆகும்.

திருவாபரணத்தின் மூன்று நாள் ஊர்வலம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் தேதி தொடங்குகிறது. இந்த ஊர்வலத்தில், அரச குடும்பத்தினரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் புனித பெட்டிகளில் தெய்வத்தின் புனிதமான ஆபரணங்களைக் 83 கி.மீ மலைத்தொடர் வழியாக, காடுகள் மற்றும் ஆறுகள் வழியாக கடந்து கொண்டு செல்கின்றனர். திருவாபரணம் சபரிமலை கோவிலுக்குள் செல்லும்போது, ஊர்வலத்தின் மூன்றாம் நாளாகிய மகர ஜோதி ஆகும். தரிசனத்திற்காக (பார்வை) ஸ்ரீகோவில் (கருவறை) திறக்கும் போது, திருவாபரணத்துடன் அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப பகவானை பக்தர்கள் பிரார்த்திக்கின்றனர். எனவே, தெய்வத்தின் நகைகளை ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும்.

இந்த கம்பீரமான ஆபரணங்களுடன், சபரிமலை ஐயப்பன் கோவிலானது, பக்தர்களிடம் இருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட தங்கம் மற்றும் மதிப்புமிக்க நன்கொடைகளையும் காட்சிப்படுத்துகிறது. கோவிலின் செம்பு-பூசப்பட்ட கூரையானது அதன் உச்சியில் தங்கத்தால் நான்கு அலங்காரங்களுடன் மூடப்பட்டுள்ளது. தங்கத்தால் செய்யப்பட்ட பதினெட்டு படிகள் (18 புனிதமான படிக்கட்டுகள்) மூலம் இந்தக் கோவில் பெருமை பெற்றுள்ளது. இது முன்னர் பஞ்சலோகத்தால் (புனிதமான முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து-உலோகக் கலவைகள்) செய்யப்பட்டிருந்தது. இந்த படிகளில் பரிசுத்தமான பொருட்கள் கொண்ட ஒரு மூட்டையான "இருமுடிக்கட்டு" உள்ளவர்கள் மட்டுமே ஏற முடியும். இத்தகைய பண்டைய சடங்குகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதால், கோவில் அதன் சுபீட்சத்தை பாதுகாக்க உதவுகிறது.