Published: 08 பிப் 2018

சுகாதாரத்தில் தங்கத்தின் பங்கு

தங்கம் மற்றும் மருந்து ஆகிய இரண்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றிணைந்து வருகின்றன. மேலும், சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய ஒழுங்குமுறை அதிகாரிகளால் நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றுக்கு அவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 1980-களின் நடுப்பகுதியில் மூட்டு வாத நோய்க்கான சிகிச்சைக்காக தொடக்கத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட, ஒரு தங்கம் சார்ந்த மருந்தான ஆரானோஃபின் என்பது, கருப்பை புற்றுநோய் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்களுக்கு எதிராக அதன் செயல்திறனை சோதிக்க தற்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் ஒரு புதிய சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தைப் பயன்படுத்தும் அதே போன்ற மருந்துகள், தற்போது அதிகரிக்கும் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் உலகளாவிய உடல்நலப் பராமரிப்புப் பிரச்சினைக்கு உதவ நுண்ணுயிர் எதிர்ப்பிகளாக வடிவமைக்கப்படுகிறது. இறுதியாக, மலேரியா மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்ற நிலைமைகளைக் கண்டறிவதற்கான குறைந்த ஆதார அமைப்புகளில், தங்கத்தின் அடிப்படையிலான நோயறிதல் என்பது மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் மலேரியாவை முதன்மையாக கண்டறிவதற்காக, 2016ஆம் ஆண்டில் 312 மில்லியன் தங்கம் கொண்ட பரிசோதனைகள் விநியோகிக்கப்பட்டன.

உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையில் சிறிய அளவுகளிலான தங்கம் எவ்வாறு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான பிரதான உதாரணங்கள் இவை ஆகும்.