Published: 12 செப் 2017

வாழ்க்கைக்குப் பின்னர் தங்கம்

இறந்தவர்களுடைய உலகத்திலிருந்து உயிருடன் இருப்பவர்களின் உலகத்தைப் பிரிக்கும் ஒரு ஆற்றின் குறுக்கே, இறந்த மனிதர்களின் ஆன்மாவைக் சுமந்த செல்லும் ஹேடீஸின் படகோட்டியான சரோன் என்பவரின் கதையை கிரேக்க புராணக் கதை ஒன்று சொல்கிறது. கொண்டு செல்வதற்காக சரோனுக்கு செலுத்தும் கட்டணமாக, பண்டைய கிரேக்கர்கள் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு நாணயத்தை இறந்தவரின் வாய்களில் வைத்தனர்.

சுமார் 6,000 கி.மீ. தொலைவில் உள்ள இந்திய நாட்டில், மாய நம்பிக்கைகள் மற்றும் புனிதமான கடவுளர்கள் நிறைந்த ஒரு நிலத்தில், இறந்தவரின் வாயில் தங்கத்தை வைப்பதற்கு, வேறுபட்ட காரணங்களை இந்தியர்கள் பின்பற்றினர். இங்கே, தங்கம் ஒரு என்பது பாதுகாப்பான தாயத்தாக கருதப்படுகிறது, இது தீயவை, ஆபத்துகள் மற்றும் நோய் ஆகியவற்றுக்கெதிராக பாதுகாப்பு வழங்குவதாக நம்பப்படுகிறது.

இறந்தவரின் வாயில் தங்கத்தை வைக்கும் பழக்கம் பரவலாக உள்ள வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில், தங்கம் ஒரு வலுவான பாதுகாப்பாகக் கருதப்படுகிறது. இந்த சிந்தனையானது விலைமதிப்பற்ற உலோகத்தின் அரிதாகக் கிடைக்கும் தன்மையையும், மதிப்பையும் மற்றும் அதன் நிறத்தையும் அடிப்படையாகக் கொண்டது ஆகும், இது தீய ஆவிகளுக்கு இடையூறாக இருக்கும் எனக் கூறப்படுவதாக, வட இந்தியாவின் புகழ்பெற்ற மதம் மற்றும் நாடோடிக் கதைகள் என்ற புத்தகத்தில் வில்லியம் க்ரூக் என்பவர் கூறுகிறார்.

இந்த விலைமதிப்பற்ற உலோகமானது ஆபரண வடிவத்தில் இருக்கும்பொழுது, குறிப்பாக இறந்தவர்களின் குடும்பத்திற்கான சில மர்மமான முக்கியத்துவம் கொண்ட கடவுள்களின் உருவங்களில் செய்யப்படும்பொழுது, அல்லது சில புனிதமான இலை, பூ அல்லது மிருகம் ஆகியவற்றைப் போன்று செய்யப்பட்டிருக்கும்பொழுது, இறந்தவர்களைச் சுற்றி உள்ள தீய சக்திகளைக் களைவதில் திறன்மிக்கதாக உள்ளது.

க்ரூக் என்பவரின் கூற்றுப்படி, மத்திய இந்தியாவிலிருந்து வந்த கந்தேஷ் மக்கள், இறந்த ஆணின் வாயில் ஒரு வெற்றிலையுடன், அவரது மனைவியின் கழுத்திலிருந்த நெக்லஸில் இருந்து ஒரு தங்க மணியையும் வைக்கிறார்கள். தங்க மணி என்பது சடலத்தை பாதுகாப்பதற்கும், கடவுளிடம் நெருங்கி வர உதவுவதற்கும் வைக்கப்படுகிறது. இந்த இறப்புக்கு பிறகான சடங்கானது இறுதி சன்ஸ்கர் என்று கருதப்படுகிறது, மேலும் மனிதனின் ஆன்மாவானது பூமியில் (பூலோக்) அல்லது இறந்த பகுதியில் (மார்டியோலோக்) சிக்கிக் கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்து மத ஜனஜக்ருதி சமிதியின் கூற்றுப்படி, வாயில் வைக்கப்படும் தங்கம் என்பது ஆன்மாவிற்கு சாதகமான வேகத்தை அதிகரிக்கச் செய்து, உயர்ந்த பகுதிகளை அடைய உதவுகிறது. இதன் விளைவாக, தங்கம் என்பது எதிர்மறை சக்திகளால் அடிமைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது மற்றும் இறந்த நபரின் ஆத்மாவானது குடும்பத்தைத் துன்புறுத்துவதை சாத்தியமற்றதாக்குகிறது.

இதேபோல், பஞ்சாபில், பஞ்சரத்னா அல்லது தங்கம் உட்பட ஐந்து வகையான நகைகளை இறந்தவரின் வாயில் வைக்க வேண்டும் என்பது பொதுவான நடைமுறை ஆகும்.

புவியியல், மதம் மற்றும் பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் வடிவமும், அமைப்பும் மாறுபடும்போதும், தங்கம் என்பது பூமிக்குரிய எல்லைகளை கடந்து செல்லும் என்பதால், அது ஆன்மா மற்றும் உடலை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கையாகும்.