Published: 31 ஆக 2017

அழகுசாதனப்பொருட்களில் தங்கம்

சுமார் 30 நூற்றாண்டுகளுக்கு, பண்டைய எகிப்து நாடானது மத்தியதரைக்கடல் உலகில் மிகப்பெரிய நாகரிகம் ஆகும். இங்கு தங்கம் என்பது முதலில் அழகுசாதனப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது என்று பலர் நம்புகிறார்கள். உண்மையில், தாலமிய எகிப்தின் கடைசிப் பேரரசியான கிளியோபாட்ரா, தனது தெய்வம் போன்ற அழகு மற்றும் செழிப்பான நிறம் ஆகியவற்றை பாதுகாக்க ஒவ்வொரு இரவும் 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு முகமூடிக்குள் தூங்கியதாக வதந்திகள் பரவின. சருமப் பராமரிப்புக்காக தங்கம் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புகள் பண்டைய சீன நாகரிகங்களில் காணப்படுகிறது, அங்கு பல மகாராணிகள், தங்கள் அழகை மேம்படுத்துவதற்காக தங்களின் அன்றாட சருமப் பராமரிப்பு பழக்கங்களில் நொறுக்கப்பட்ட தங்கத்தைப் பயன்படுத்தினர்.

அழகு சார்ந்த தோல் நோய் சிகிச்சை மற்றும் அழகு சார்ந்த லேசர் அறுவை சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்ளும் ஒரு தோல் நோய் சிகிச்சை மருத்துவரான தபசும் மீர் என்பவர், முகப்பரு அழற்சியைத் தணித்தல், தோல் சிவத்தலை குறைத்தல் மற்றும் சுருக்கங்கள் மற்றும் வெயிலால் சேதம் ஏற்பட வழிவகுக்கும் பொருட்களுக்கு எதிராக பாதுகாத்தல் ஆகியவற்றை தங்கத்தால் செய்ய முடியும் என்று ஹஃபிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கூறினார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, முடக்குவாத சிகிச்சைக்கான மருந்துகளில் தங்கமானது அழற்சி எதிர்ப்பு மருந்தாக தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள புத்துணர்ச்சி மையங்கள் மற்றும் முக்கிய அழகுச்சாதனப்பொருட்களுக்கான பிராண்டுகள் ஆகியவை, பண்டைய காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறையின்படி மீண்டும் தோல் பராமரிப்பு சிகிச்சைக்கு தங்கத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டதில் வியப்பேதும் இல்லை. உலக தங்க கவுன்சிலின் கருத்துப்படி, தங்க இலை முகச் சிகிச்சைகள் என்பது ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த சிகிச்சைகள் உங்கள் தோல் புத்துணர்ச்சி பெற உதவுகிறது மற்றும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. தங்கம் என்பது உங்கள் தோலில் ஈரப்பதத்தை நிலைநிறுத்தி, உங்கள் தோலை உறுதியாகத் தக்க வைக்க உதவும் என்பது, ஒரு தோல் சிகிச்சை பொருளாக தங்கத்தின் வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம் ஆகும்.