Published: 18 ஆக 2017

உங்களது விலை உயர்ந்த பொருட்களுக்கான தங்க நகை காப்பீடு

Gold Insurance

இந்தியர்களிடம் 24,000 டன்கள் தங்கம் இருப்பதால், அவர்களுக்கு தங்கம் பிரியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தங்கம் எவ்வளவு மதிப்புமிக்கது, விலை உயர்ந்தது என்று கருதும்போது, நாம் சற்று அதிக சிரமம் எடுத்து அதனை திருட்டிலிருந்தும் பழுதடைவதிலிருந்தும் காக்க வேண்டியுள்ளது. காப்பீடு என்று வரும்போது மக்கள் வீடு, கார், வாழ்கை, ஆரோக்கியம் ஆகியவற்றை பற்றி சிந்திக்கிறார்கள். உங்களது விலை மதிப்பற்ற தங்க நகைகளையும் காப்பீடு செய்ய முடியுமா என்று உங்களுக்குத் தெரியுமா?


நகைக் காப்பீடு எதையெல்லாம் பூர்த்தி செய்கிறது?

தங்கத்தையும் மற்ற விலை உயர்ந்த பொருட்களையும் விபத்தினால் இழத்தல், பழுதடைதல், திருட்டு, கொள்ளை ஆகியவற்றால் பறிபோகுதல் உள்ளிட்ட இடர்களை நகைக் காப்பீடு ஈடுசெய்கிறது. இது சில குறிப்பிட்ட வங்கிகளில் பெட்டகங்களில் வைக்கப்பட்ட நகைகளுக்கும் பொருந்தும். ஒருவர் தற்போது அணிந்திருக்கும் நகைகளையும் இதில் சேர்க்கலாம்.

விருப்பத்தேர்வுகள்:
  • வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்: மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் நகைப் பாதுகாப்பையும் உள்ளடக்கிய ‘contents cover’ எனப்படும் பொருட்களையும் இணைத்த வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இடர்களுக்கு என்று ஓர் உள் எல்லை உண்டு. அதாவது வீட்டு உள்ளடக்க இடர் ரூ.10 இலட்சத்திற்கு பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், ரூ.2.5 இலட்சம் மதிப்புள்ள நகைகளுக்கான காப்பீடு கிடைக்கும்.
  • தனியான நகைக் காப்பீட்டுத்திட்டம்: மற்ற காப்பீட்டுத் திட்டங்களை விட பல்வேறு விதமான சம்பவங்களை இத்தகு காப்பீடு உள்ளீடு செய்யயும். எவ்வளவு தொகைக்கு காப்பீடு எடுத்துள்ளோமோ அவ்வளவு தொகையை இந்த காப்பீடு நஷ்ட ஈடாகக் கொடுக்கும்.

நன்மைகள்:
  1. ஒரு வங்கி பெட்டகத்தை திறப்பது என்ற முறையிலிருந்து உங்களைக் காக்கிறது. வங்கி பெட்டகத்தில் அதிக இடர் உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை சேமித்து வைப்பதற்காக உயர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  2. நீங்கள் அணிய விரும்பும் நகைகளை அணிய விரும்பும் நேரத்தில் நீங்கள் பெட்டகத்திலிருந்து எடுத்து வைக்க வேண்டியதில்லை. அவற்றை உங்கள் வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாம்.
முறை:

பின்வரும் முறைகள் மிகவும் இறுகலானவை அல்ல. ஆனால் அவை உங்கள் விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாக்கப் பயன்படும்.
 

  • மதிப்பீட்டுச் சான்றிதழ் பெறுவது: இந்த காப்பீட்டில் நீங்கள் சேர்க்க வேண்டிய பொருட்களின் பட்டியலை தயார் செய்யுங்கள். அவற்றின் மதிப்பீட்டை பெறுங்கள். ஒரு நம்பிக்கையான நகை வியாபாரியிடமிருந்து நீங்கள் மதிப்பீட்டு சான்றிதழைப் பெற முடியும்.
  • வேறுபட்ட காப்பீட்டு கொள்கைகளை மதிப்பிடுதல்: முதல் இழப்பு எல்லை என்பதன் அடிப்படையிலேயே சில காப்பீட்டு பாலிசிகள் செயல்படும். உங்களது நகைகளின் மதிப்பில் (காப்பீட்டு நிறுவனம் முயற்சிப்பதில்) ஒரு பங்கைக் காப்பீடு செய்யவும். 100 சதவீத கவரேஜ் அல்லது அனைத்து இடர் கவரேஜ் எடுத்துக்கொள்ளவும். ஏனெனில் தீப்பிடித்தல் திருட்டு ஆகிவற்றிலிருந்தும் இந்த காப்பீடு பாதுகாப்பு அளிக்கிறது.முதல் இழப்பு காப்பீட்டுத் தொகை என்பது ஒற்றைச் சம்பவத்தில் ஏற்படக்கூடிய இழப்பின் மதிப்பீடாகும். இதனைக் காப்பீட்டு நிறுவனம் முடிவு செய்யும். ஆனால் இந்த தவணைத் தொகையானது மொத்த காப்பீட்டுத் தொகையைப் பொறுத்தது. இதில் அளிக்கப்பட்டுள்ள தள்ளுபடிகளையும் நீங்கள் பார்க்கலாம்.

எதெல்லாம் கவர் செய்யப்படவில்லை?
  1. போர், தீவிரவாதத் தாக்குதல் அல்லது கலகம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பு
  2. காப்பீடு செய்த நபரோ, அல்லது அவரது ஊழியரோ அல்லது குடும் விரும்பினர்களோ வேண்டுமென்றே நகைகளுக்கு சேதம் ஏற்படுத்தியிருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு
  3. உங்கள் வீட்டில் 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக ஆட்கள் இல்லாமல் போகும்போது ஏற்படும் திருட்டு அல்லது கொள்ளை

க்ளெய்ம் கோரி ஃபைல் செய்வது
  • நீங்கள் காப்பீடு செய்த நகைகளில் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் நீங்கள் அவற்றிற்கு க்ளெய்ம் கோரி ஃபைல் செய்ய வேண்டும்.
  • இழப்பின் எல்லா விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். குறிப்பிடப்பட்ட நகையின் மதிப்பையும் அளிக்க வேண்டும்.
  • தீப்பிடித்தல் மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களுக்கான தேவையான ஆவணங்களை நீங்கள் அளிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக தீயணைப்புத் துறை அல்லது காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையின் நகலை அளிக்க வேண்டும்.

நிதி நெருக்கடி காலத்தின் போது உங்களைக் காப்பது உங்களது தங்க நகை. அதன் உணர்ச்சி பூர்வமான மதிப்பு விலை மதிப்பற்றது. எனவே அதனை காப்பீடு செய்யுமாறு அறிவுறுத்துவது நல்லது.

Sources:

Source1, Source2, Source3, Source4