Published: 04 செப் 2017

மிகவும் திறமையான மருந்து விநியோகத்திற்கு தங்கம் என்பது விடையாக இருக்கலாம்

Benefits Of Gold For Health

ஒரு மிருகத்தின் இரத்த ஓட்டத்தில் ஒரு நீல நிற சாயம் உட்செலுத்தப்படும் போது, மூளை மற்றும் தண்டு வடம் தவிர உடலில் உள்ள இரத்தக்குழாய் முழுவதும் நீல நிறமாக மாறிவிடும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டதாக செயின்ட் லூயிஸ்-ல் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் (UW) கூறுகிறது. இதையே நாம் தலைகீழாகப் பார்த்தால், மூளை மற்றும் தண்டு வடம் ஆகியவற்றில் சாயத்தை வைக்கும்பொழுது, அது சிக்கிக் கொண்டதாக தோன்றியது, அது உடலில் மற்ற இரத்தக் குழாய்களுக்குப் பரவுவதில்லை.

மூளையின் நுண்சூழலைக் கட்டுப்படுத்தும், மற்றும் மூளையில் நுழையும் இரத்தத்தில் உள்ள பொருட்களைக் கட்டுப்படுத்தப்படும் 'இரத்தம்-மூளை-தடுப்பு' (BBB) பற்றி விஞ்ஞானிகள் இப்படித்தான் அறிந்து கொண்டார்கள். நானோ பயோடெக்னாலஜி பத்திரிகையின்படி, இது பல்வேறு மருத்துவ இமேஜிங் மற்றும் சிகிச்சை நடைமுறைகளுக்கு ஒரு தடையாக உள்ளது.

மருத்துவத்தில் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் முன்னேற்றங்கள் இருந்தாலும், மூளைக்கு நேரடியாக சிகிச்சைகள் வழங்க BBB மூலம் முக்கியமான, பெரும்பாலும் உயிரைக் காக்கக்கூடிய மருந்துகளை நாம் எவ்வாறு அனுப்ப முடியும்? – என்பது சமீபத்தில் ஆய்வாளர்களைத் திகைப்புக்குள்ளாக்கிய ஒரு பிரச்சனை ஆகும்

UW ஆய்வாளர்கள் அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கலாம் - அது தங்கத்தை உள்ளடக்கியது ஆகும்.

இதுவரை, இந்தத் தொழில்நுட்பமானது வெட்டுக்கிளிகளின் மீது மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அவை மனிதர்களைப் போன்றே BBB கொண்டதாக அறியப்படுகிறது. குறிப்பிட்ட அளவு, வடிவம், மின் சுமை மற்றும் வெட்டுக்கிளிகளின் உள்ளே அவற்றின் இயக்கத்தைக் கண்காணிக்கும் வகையில் ஒளிரும் பட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு தங்க நானோ துகள்கள் உருவாக்கப்பட்டது.

தங்க நானோ துகள்களானது வெட்டுக்கிளிகளின் ஆண்டெனாக்கள் மீது தெளிக்கப்பட்டன. அது நரம்புகள் வழியாக, BBB-ஐ கடந்து, வெட்டுக்கிளிகளின் மூளையினுள் செல்வதை, ஒளிரும் பட்டி வழியாக தங்க நானோ துகள்களின் இயக்கத்தை ஆய்வாளர்கள் கண்காணித்தனர். இது ஒரு பெரிய திருப்புமுனையாகும், மேலும் எதிர்காலத்திற்கு இது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்க உதவியது.

இந்த தங்கத் துகள்களில் புற்றுநோய் சிகிச்சைக்கான உண்மையான மருந்துகளை இணைப்பதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது UW-ன் ஆராய்ச்சியாளர்களுக்கான அடுத்த படியாகும். அது வெற்றிகரமாக முடிந்தால், இறுதியாக சில புற்றுநோய் மருந்துகள் போன்ற மூளையை-இலக்காக கொண்ட மருந்துகளை நாசியில் தெளித்து அளிக்க முடியும்.