Published: 27 செப் 2017

இந்தியாவின் தங்க நதி

River With Traces Of Gold

ஜார்க்கண்டின் தலைநகரான ராஞ்சிக்கு தெற்கே சோட்டா நாக்பூர் பீடபூமியில் தோன்றும் தங்க நதியானது, மேற்கு வங்கம் மற்றும் ஒரிசா ஆகியவற்றில் சுமார் 400 கிலோமீட்டர் பாய்ந்து, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

இந்த ஆற்றின் பெயரான, சுபர்ணரேகா என்பது பல இந்திய மொழிகளில் "தங்கக் கோடு / நதி" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, ராஞ்சிக்கு அருகில் பிஸ்கா என்ற ஆறு தோன்றும் கிராமத்தில் தங்கம் தோண்டப்படுகிறது. ஆற்றின் கரையில் தங்கம் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும், ஆற்றின் மணல் படுக்கை மற்றும் கரைகளில் தங்கக் துகள்கள் உள்ளதா என்று பல மக்கள் தொடர்ந்து தேடுகிறார்கள்.

சுபர்ணரேகா நதியை ரபீந்திரநாத் தாகூர் மற்றும் பிபூதிபூஷன் பந்தோபத்யாய் ஆகியோர் தங்களின் பல படைப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்த டக்காவில் பிறந்த இந்தியத் திரைப்பட இயக்குனரான ரிட்விக் கடக் (1925-76) என்பவர் இந்த ஆற்றின் மூலம் கவரப்பட்டவர் ஆகும். சுபர்ணரேகா என்றழைக்கப்படும் அவரது திரைப்படமானது இந்திய சினிமாவில் அழியாத தடத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலர் நம்புகிறார்கள். 1962 ஆண்டின் இந்தத் திரைப்படமானது, பிரிவினை காலத்தில் மறக்கப்பட்ட இந்தியர்களின் அவல நிலையை ஒரு உருவகமாக பயன்படுத்துகிறது. அதன் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி, தங்களின் நிலம் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த பிறகு, ஆற்றின் அருகே புதிதாக குடியேறியவர்களின் நம்பிக்கையை, தனிமை உணர்வை மற்றும் அந்நியப்படுத்தலை இந்தத் திரைப்படம் வெளிப்படுத்தியது.

இன்று, இந்த நதியானது நகராட்சிக்கு குடிநீர் வழங்கல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒரு ஆதாரமாக உள்ளது, மேலும் இதில் ஒரு நீர்மின் நிலையத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மேலும், பல சுரங்க மற்றும் கனிமத் தொழிற்சாலைகள் ஆகியவை ஆற்றின் கரையோரங்களில் காணப்படுகின்றன. உண்மையில், நாட்டின் செழிப்பான தாமிர இருப்புகள், ஆற்றுப் பள்ளத்தாக்கின் கீழ் பகுதிகளில், ஒடிசாவின் மயுர்பன்ஜ் மற்றும் சிங்பம் மாவட்டங்களில் உள்ளன.

தங்க நதிப் படுக்கைகள் என்பது இனிமேல் இல்லாமல் போகலாம் என்றாலும், ஆற்றின் தங்க சாயல் ஆனது தொடர்ந்து பிரகாசிக்கும்.