Published: 28 ஆக 2017

தங்கத்திற்கு அதன் பெயர் எப்படி வந்தது?

17ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டிற்காக ஆஸ்டெக் சாம்ராஜ்ஜியத்தை தூக்கி எறிந்து, மெக்சிக்கோவை வென்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஹெர்னான் கோர்டெஸ் என்பவர், "தங்கம் மட்டுமே குணமளிக்கக்கூடிய இதயத்தின் ஒரு நோய் பற்றி ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்களான நாங்கள் அறிவோம்" என்றார். லியோ டால்ஸ்டாய் மற்றொரு பார்வையைக் கொண்டிருந்தார்: உண்மை என்பது தங்கத்தைப் போன்றது, "அதை அதன் வளர்ச்சியில் இருந்து பெறக்கூடாது, தங்கமாக இல்லாத அனைத்தையும் துடைப்பதன் மூலம் பெற வேண்டும்" என்று கூறினார். பிரெஞ்சு புரட்சியின் போது இருந்த எழுத்தாளரான ஆண்டோய்ன் டி ரிவரால் என்பவர் கூறிய "தங்கம் என்பது, சூரியனைப் போல் மெழுகை உருக்கும், ஆனால் களிமண்ணை கடினமாக்கும், பெரும் ஆன்மாக்களை விரிவுபடுத்தும்" என்பதை எடுத்துக்கொள்ள வேண்டும். தங்கம் ஒரு விலையுயர்ந்த உலோகம் மட்டுமல்ல, அது வாழ்க்கையின் உருமாதிரி ஆகும்.

எது நமக்கு ஒரு முக்கியமான கேள்வியை கொண்டுவருகிறது: இந்த விலைமதிப்பற்ற உலோகத்திற்கான பெயர் எங்கிருந்து வந்தது? கிட்டத்தட்ட ஒவ்வொரு கலாச்சாரமும் தங்கத்துடன் சில அனுபவத்தைக் கொண்டுள்ளன, மேலும் இந்த விலைமதிப்பற்ற உலோகத்திற்கு பல பெயர்கள் உள்ளன. இன்று நாம் அறிந்த மற்றும் பயன்படுத்திக்கொண்டுள்ள "தங்கம்" என்ற வார்த்தையானது, பழைய ஆங்கில மற்றும் ஜெர்மானிய மூலங்களிலிருந்து பெறப்பட்டது.

ஜெர்மானிய கோதிக் மொழியானது குல்பா என்ற வார்த்தையுடன் தங்கத்தை குறித்தது, அது பின்னர் பழைய ஆங்கில மொழியில் கியோலு என்று உருவானது. கியோலு என்பது "மஞ்சள்" என்பதைக் குறிக்க மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதனால் அதன் மிகுந்த மேலாதிக்க பண்பான தங்க மஞ்சள் நிறத்திற்காக, இந்த உலோகத்திற்குப் பெயரிடப்பட்டது. பன்னிரண்டாவது நூற்றாண்டில், மத்திய ஆங்கிலமானது இந்த வார்த்தைக்கு மற்றொரு பரிணாமத்தைத் தந்தது, பின்னர் நமது நவீன வார்த்தையான தங்கம் என்பது உருவானது.

தனிமங்களின் கால அட்டவணையில் தங்கத்திற்கான வேதிக் குறியீடு என்பது 'Au' ஆகும். இந்தக் குறியீடானது லத்தீன் வார்த்தையான அயூரம் (aurum) என்பதிலிருந்து வந்தது, அதற்கு "பிரகாசமான விடியல்" என்று அர்த்தமாகும்; இது பண்டைய ரோமில் தங்கத்தை விவரிக்கப் பயன்படுத்தப்பட்டது. பண்டைய ரோமானியர்கள் தங்கத்தை கண்டறிந்த முதல் நாகரீகம் அல்ல, ஆனால் தங்கம் தோண்டி, பிரித்தெடுக்கப்படும் வழிமுறைகளில் முன்னேற்றங்களை அவர்கள் கண்டறிந்தனர், இதனால் தங்களுடைய சாம்ராஜ்யம் முழுவதும் தங்கம் கிடைப்பதை அதிகரித்தனர். பண்டைய ரோமானியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மேம்பட்ட வழிமுறைகளில் பெரும்பாலானவை காலங்கள் பல கடந்து, இன்றும் தங்க சுரங்கத் தொழிலாளர்களால் பயன்படுத்தப்படுகின்றது.

இருப்பினும், அதன் பல பெயர்களில் தங்கம் போல எதுவும் சிறப்பாக இல்லை.