Published: 09 பிப் 2018

நெருப்பில் சுடுதல்: தங்கம் சுத்திகரிப்பு

ஒரு காலத்தில், உங்கள் தங்க நெக்லஸ் மற்ற பல உலோககங்களுடன் சேர்ந்து பாறையில் மறைந்திருந்தது. தங்கம் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டபோது, அது சிறிதும் நாம் விரும்பும் உலோகத்தைப் போன்று இல்லை. உண்மையில் அதை நிபுணர்கள் உலோகத்தாது என்றே அழைத்தனர். உலோகத்தாது எடுக்கப்பட்ட இடத்தைப் பொருத்து அதில் தங்கத்தின் அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். உலோகத்தாதுவிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க, பொற்கொல்லர்கள் சயனைடைப் பயன்படுத்துகின்றனர், இதிலிருந்து 'டோர்' என்ற ஒன்று உருவாகிறது.

அடுத்த நிலைக்குச் செல்வோம். சுத்திகரிப்பு சாலையில் 'டோர்' நெருப்பில் சுடப்படும். சுத்திகரிப்பு என்ற சுவாரஸ்யமான செயல்முறையில், அது ஒரு உலையில் உருக்கப்பட்டு அதிக அளவிலான சோடா சாம்பல் மற்றும் போரக்ஸுடன் கலக்கப்படும். இந்த செயல்முறை தங்கத்தை அழுக்குகளிலிருந்தும் பிற உலோகங்களிலிருந்தும் பிரிக்கும். உண்மையில் தங்கத்தை சுத்திகரிப்பதற்கு, சுவாரஸ்யமான பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறைகள் உள்ளன. முறை எதுவாக இருந்தாலும், அதில் கிடைப்பது இந்த பூமியிலேயே சுத்தமான தங்கம் மேலும் அது ஒரு சூரியனைப் போல ஜொலிக்கும் ஒரு கட்டியாக வார்க்கப்படுகிறது.

அதிலிருந்துதான் உங்கள் நெக்லஸ் உருவாகிறது, சரிதானே? இல்லை! சுத்தமான தங்கம் நெக்லஸ் செய்வதற்கு ஏற்ற வகையில் திடமானதாக இருப்பதில்லை. அதில் ஒரு உலோகத்தைச் சேர்க்கும்போது மட்டுமே அதிலிருந்து நகை செய்யமுடியும். உங்கள் நெக்லஸை மற்றொரு முறை பார்ப்போம், பார்க்கலாமா? சில குறிப்பிட்ட ஒளிகளில் அது சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் மின்னுகிறதா? அப்படியெனில், தங்கத்துடன் செம்பு அல்லது தங்கத்தின் கலப்பு உலோகம் ஒன்று கலக்கப்பட்டிருக்கும். வெள்ளைத் தங்கம் பொதுவாக வெள்ளி அல்லது நிக்கலுடன் சேர்க்கப்படும். நீங்கள் தங்கத்தில் குறிப்பிட்ட அளவு இரும்பைச் சேர்த்தால், அது நீலத் தங்கமாக மாறும். தங்கத்தின் காரட் அளவு, அதில் எந்தளவு தூயத் தங்கம் உள்ளது என்பதைப் பொருத்து அளவிடப்படுகிறது. 22 காரட் தங்கத்தில் 91.75 சதவீதம் தூய தங்கம் உள்ளது. ஐரோப்பிய நாடுகள் 18 காரட் தங்கத்தை விரும்புகின்றன அதே நேரத்தில் இந்தியர்கள் 22 காரட் தங்கத்தையே பெரிதும் விரும்புகின்றனர் என்று உலக தங்க கவுன்சில் வெளியிட்ட ஆராய்ச்சி ஆய்வு காட்டுகிறது. நமக்குச் சிறந்ததைத் தவிர வேறெதுவும் தேவையில்லை, சரிதானே?