Published: 15 செப் 2017

தங்கம் என்னும் நிறம் எதனைக் குறிக்கிறது?

செல்வம், வளமை, சொகுசு, பிரம்மாண்டம், நளினம் ஆகியவற்றை தங்கம் குறிக்கிறது. தங்கம் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் தங்கம் அதற்கும் மேல் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. தங்கம் என்னும் நிறம் எதனை குறிக்கிறது என்பது குறித்த ஒரு பார்வை.

முதல் இடத்தை பெற்றவர்களுக்கான பரிசு எப்போதுமே தங்க உலோகமாக இருப்பது ஏன் என்று நீங்கள் எப்போதாவது வியந்துள்ளீர்களா? ஏனெனில் தங்கம் என்பது பெருந்தன்மையையும் புத்திசாலித்தனத்தையும் குறிக்கும். சாதனை மற்றும் வெற்றியை குறிக்கும் நிறமாக தங்கம் கருதப்படுகிறது.

அழகியல் ரீதியாக மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களுக்கு அருகில் உள்ளது- தங்கம் பளபளப்பு, ஒளிரும்தன்மை, இரக்கம், தைரியம், பாசம் மற்றும் மந்திரம் ஆகியவற்றை குறிக்கிறது.

தங்கம் ஆன்மையையும் சக்தியையும் குறிக்கிறது. இது சூரியனின் நிறம். எனவேதான் மற்ற நிறங்களை விட பொன்னிறம் ஆதிக்கம் மிக்கது.

உங்களது தன்னம்பிகையையும் சுய மதிப்பீட்டையும் மேம்படுத்தும் தன்மை பொன்னிறத்திற்கு உண்டு.

தங்கத்தை அணிவது உங்கள் வாழ்வில் நேர்மறை தன்மையை அதிகரிக்கும். இது உங்களுக்கு வலிமையை அளிக்கும். உங்கள் வாழ்வில் நேர்மறை ஆற்றலை அளித்து எதிர்மறை உணர்வை விரட்டும்.

தங்கத்திற்கு அற்புதமான குணமளிக்கும் பண்புகள் உள்ளன. இது போதைத் தன்மைகளையும் மனச்சோர்வையும் வெல்வதற்கு உதவுகிறது.

மற்ற எல்லா நிறங்களையும் விட அபரிமிதமான செல்வம் படைத்த நிறம் பொன்னிறம். இது கண்ணைக் கவரும் வெதுவெதுப்பான தன்மை கொண்டது. எதனுடன் இதனை இணைத்தாலும் ஓரளவு அழகைக் கூட்டும். எனவே திருமணம் போன்ற சிறப்பு தருணங்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளது.

மதத்திலும் தங்கத்திற்கு என்று ஆழ்ந்த பொருள் உள்ளது.

கிறித்தவ மதத்தில், தங்கம் கடவுளின் இறைதன்மையின் பிரதிநிதி. அது செல்வத்தையும், புனிதத்தன்மையையும் நேர்மையையும் குறிக்கும்.

இந்து மதத்தில் தங்கம் அறிவு, கற்றல் மற்றும் தியானத்தைக் குறிக்கும். இதனால்தான் இந்து கடவுள்கள், அவர்களது தலையைச் சுற்றி தங்க ஒளிவட்டத்துடன் காண்பிக்கப்பட்டுள்ளார்கள்.

இஸ்லாமிய மதத்தில், தங்கம் பச்சை நிறத்துடன் இணைந்தால், சொர்க்கத்தைக் குறிக்கும்.

Sources:

Source1, Source2, Source3, Source4, Source5, Source6