Published: 27 செப் 2017

தங்கத்தை ஏன் நீங்கள் மறுசுழற்சி செய்ய வேண்டும்?

Gold Metal Recycling

காலப்போக்கில் வலுவான பந்தத்தின் காரணமாக, மனித சமுதாயத்தின் மீதான தங்கத்தின் செல்வாக்கு பரவலாக உள்ளது. நகைகள் மற்றும் பல் க்ரவுன்களிலிருந்து விண்கலம் மற்றும் மின்னணுவியல் வரை, தங்கத்தின் பண்புகள் ஆனது பல்வேறு மனிதக் கண்டுபிடிப்புகளுக்கு மதிப்பைச் சேர்க்கின்றன.

இருப்பினும், பூமியின் மேற்புறத்தில் சுரங்கம் தோண்டுதல் மற்றும் தங்கத்தைப் பிரித்தெடுத்தல் ஆகியவை பொருளாதார ரீதியாக சாத்தியமற்றதாக உள்ள ஒரு சூழலையும், மேலும் கூடுதல் தங்கத்தை பெறுவதற்கான வாய்ப்பு முடிவடையும் ஒரு உலகையும் நாம் விரைவில் காணலாம். எனவே, தங்கத்தை மறுசுழற்சி செய்வது என்பது இப்போது மிக முக்கியமானது ஆகும், மேலும், இத்தகைய ஒரு நல்ல நோக்கத்திற்காக ஆப்பிள் நிறுவனமானது ஒரு தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் போன்ற நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் குறைந்த அளவில் தங்கத்தைக் கொண்டுள்ளன. தங்கத்தின் சிறந்த கடத்தும் பண்புகளின் காரணமாகவும், முக்கியமாக துருப்பிடித்தலுக்கு எதிரான அதன் திறன் காரணமாகவும், நுகர்வோர் மின்னணுப் பொருட்களில் அது முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. துருப்பிடித்த உலோகங்களானது மின்சாரத்தைக் கடத்தாது, எனவே, உடனடியாக, உங்களின் மின்னணு சாதனத்தின் செயல்பாடு நின்றுவிடும். சிறந்த கடத்துத்திறன் மட்டுமே அனைத்து பொறியியலாளர்களுக்குமான தேவையாக இருந்தால், வெள்ளி என்பது அவர்களுக்கான தேவைகளை சிறப்பாக வழங்கும். வெள்ளி என்பது மனிதர்கள் அறிந்த வகையில் மிகுந்த கடத்தும் திறன் கொண்ட பொருள் ஆகும், ஆனால் துரதிருஷ்டவசமாக அது அதிக அரிக்கும் தன்மை கொண்டுள்ளது. எனவே, அதைப் பயன்படுத்த முடியாது. இருப்பினும், தங்கத்தின் மிக அதிக விலை காரணமாக, வெள்ளியை விட அதிகமான அரிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட உலோகமான தாமிரம் என்பது பொறியியலாளர்களுக்கு சிறந்த மாற்றாக செயல்படுகிறது, ஆனால் தங்கத்துடன் ஒப்பிடும்பொழுது அதன் கடத்துத்திறன் குறைவாக உள்ளது. இந்த காரணத்திற்காக, தங்கம் என்பது மின்னணு சாதனங்களில் மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது, முக்கியமாக இரண்டு மின்னணு கூறுகளின் இணைப்புகளுக்கு இடையே பயன்படுத்தப்படுகிறது.

உங்கள் தொலைபேசியில் உண்மையில் எவ்வளவு தங்கம் இருக்கிறது? சராசரியாக ஒரு ஐபோன் ஆனது அதனுள் 0.034 கிராம் தங்கத்தைக் கொண்டுள்ளது. இது உங்களுக்குக் குறைவானதாகத் தெரிந்தாலும், உங்களிடம் அதிக எண்ணிக்கையிலான போன் இருக்கும்பொழுது அதன் தாக்கம் பெரியதாக இருக்கும். இதுவே, ஆப்பிள் அதன் மறுசுழற்சி திட்டத்தைத் தொடங்கியதற்கான காரணமாகும். ஆப்பிள் நிறுவனத்தால் 90 மில்லியன் பவுண்டுகள் அளவிலான மின்னணுக் கழிவுகளை சேகரித்து, 2,204 பவுண்டுகள் தங்கத்தைப் பெற முடிந்தது, இது 43.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ளதாகும். இதனால், தங்கத்தின் தேவை இன்னமும் ஒரே மாதிரியானதாகவே இருந்தாலும், மறுசுழற்சி மூலம் ஓரளவு ஈடுசெய்யப்பட்டதால், அவர்கள் வாங்க வேண்டிய தங்கத்தின் அளவு குறைந்தது.