Published: 08 பிப் 2018

வாகனத் துறையில் தங்கம்

நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் தங்கத்தின் பயன்பாடு இருக்கிறது. அதிக கடத்துத்திறன் மற்றும் அரிப்பு எதிர்ப்புத்திறன் ஆகியவை அன்றாட மின்னணு சாதனங்களில் இந்த உலோகத்தை ஒரு முக்கிய பகுதியாக ஆக்குகிறது. கூடுதலாக, மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் தங்கத்தின் பயன்பாடு என்பது மற்ற நன்கு அறியப்பட்ட தயாரிப்புகள் மற்றும் செயல்களுக்கு முக்கியமானதாகும். நாம் பயன்படுத்தும் பொருட்களில், பல வழிகளில் தங்கம் என்பது 'மறைவான உறுப்பாக' இருந்து அதன் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கலப்பின மற்றும் முழுமையாக மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களை நோக்கி இயங்குவது என்பது வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் ஆகும். இதில் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் ஆகியவற்றின் நீண்ட கால தேவையால் இது முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் - குறிப்பாக கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற பேட்டரி தொழில்நுட்பங்களுடன் தொடர்புடையவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது தங்கத்தின் தேவையையும் பாதிக்கும். ஒரு பரந்த அளவிலான சில்லுகள் ஏற்கனவே வாகனத் துறையில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் மின்சாரமயமாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த சில்லுகளின் தேவை அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.

எஞ்சின் மற்றும் பிரேக்கிங்-அமைப்பு மேலாண்மையிலிருந்து கார்-இணைப்பு மற்றும் பொழுதுபோக்கு அமைப்புகள் வரை அதன் பயன்பாடு பரவலாக உள்ளது. இவை ஒவ்வொன்றிலும் ஒளி உமிழும் டையோட்கள் (எல்இடி) மற்றும் அச்சடிக்கப்பட்ட சர்க்யூட் போர்டுகள் (பீசிபி) போன்ற உயர்தரமான மின்னணு கூறுகள் தேவைப்படுகின்றன.

நீண்டகால நோக்கில் பார்த்தால், தானியங்கு வாகனங்களின் எதிர்காலத்தின் காரணமாக, மோதல்-தவிர்ப்பு அமைப்புகள் போன்றவற்றுக்கான உயர்தரமான மின்னணு கூறுகளை சேர்ப்பதன் காரணத்தால் தங்கத்தின் தேவை மேலும் அதிகரிக்கும்.