Published: 12 செப் 2017

பண்டைய இந்தியாவின் தங்க ஆயுதங்கள்

தங்கத்தை நேசித்த இந்தியர்கள், மஞ்சள் உலோகத்திலிருந்து பல்வேறு ஆபரணங்கள், நகைகள் மற்றும் பிற பொருட்களை வடிவமைத்து, கட்டமைக்க மகத்தான ஆற்றலை செலவிட்டனர். பண்டைய இந்தியாவின் அரசர்கள் தங்கள் ஆயுதங்களை ஆராதித்தனர், அவர்கள் தங்கள் செல்வத்தை இந்த வடிவத்தில் வெளிப்படுத்த விரும்பினர் - அதனால் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை உருவாக்கும் பாணி தொடங்கப்பட்டது.

வெகு சில ஆயுதங்களே அதிக காரட் தங்கத்தால் செய்யப்பட்டன - பொதுவாகவே மஞ்சள் உலோகமானது இரும்பு அல்லது வெண்கலத்துடன் இணைத்து பெரும்பாலும் பயன்படுத்தப்படும். பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆயுதங்களில், மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் அலங்காரமான சில குறித்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபிராங்கி (வாள்): இந்தப் பெரிய வாளானது 35-38 அங்குல நீளம் கொண்டது, இது வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது. மராத்திய போர்வீரர்களுடன் முக்கியமாக தொடர்புடையது என்றாலும், இது முகலாயர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

இந்த அலங்கரிக்கப்பட்ட வாளின் கைப்பிடி மற்றும் உறை ஆகியவை அழகான வண்ணங்களில் பல்வேறு நிறங்களில் தங்கத்தால் பொறிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. இந்த அட்டகாசமான மற்றும் ஆடம்பரமான அலங்காரமானது அதை வைத்திருக்கும் அரசரின் செல்வத்தையும் மகத்துவத்தையும் பிரதிபலித்தது.

கதார் (கத்தி): இந்த ஆயுதமானது தென்னிந்தியாவிலிருந்து உருவானது மற்றும் ஆசிய கண்டத்தில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது H-வடிவில் இருக்கும் மிகவும் தனித்துவமான கைப்பிடியைக் கொண்டுள்ளது; பிடியின் மையத்தில் இருக்கும் இரண்டு இணைக் கோடுகளானது, பயனர் கைமுட்டிக்கு மேல் கத்தியைப் பிடிக்க உதவுகிறது. கத்தியின் நீளமானது 12 முதல் 35 அங்குலங்கள் வரை இருக்கும்.

கைப்பிடி மற்றும் கத்தி ஆகியவை பொதுவாக எஃகு மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆயுதமானது அந்தஸ்தின் ஒரு அடையாளமாக ஆனபோது, அதன் உரிமையாளரின் செல்வத்தை வெளிப்படுத்த அதில் தங்கம் கூடுதலாக சேர்க்கப்பட்டது. பொதுவாக இது கத்தியின் கைப்பிடியின் மீது சேர்க்கப்பட்டது, இது பல்வேறு நிறங்களாலும் அலங்கரிக்கப்பட்டது. கத்தியின் உறைகளும் தங்கத்தால் செய்யப்பட்டன.

கான்ஜர் என்பது கத்தியின் மற்றொரு வடிவம் ஆகும்; இது ஓமன் நாட்டில் உருவானது, ஆனால் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. கான்ஜரின் கைப்பிடி என்பது ஒரு கத்தியைப் போன்றே இருக்கிறது, இருப்பினும் இதன் பிளேடானது ஒரு குறுகிய வாளைப் போன்று இருக்கிறது. கான்ஜர் என்பது இடுப்பு-பெல்ட் உடன் அணியப்பட்டிருக்கும், பொதுவாக, இது சிறப்பு சடங்குகளின் போது வெளியே கொண்டுவரப்படுகிறது. கைப்பிடி மற்றும் உறை ஆகியவை பொதுவாக தங்கம் மற்றும் பிற உலோகங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மகாராஜாக்கள் மற்றும் பிற அரசர்கள், தமது கேடயங்களை தங்கத்தால் மூடியிருந்ததாக அறியப்படுகிறார்கள்.