Published: 20 பிப் 2018

பசியார்வத்திற்கான தங்கம்

Edible gold & its role in modern cuisine

இந்தியர்கள் தங்கள் உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துபவர்களாக அறியப்பட்டவர்கள் ஆவர். உணவை, ‘வரக்’ எனப்படும் சில்வர் ஃபாயில் கொண்டு மூடும் பழமையான வழக்கம், காலப்போக்கில் தற்பொழுது சொகுசின் புது வடிவமாக உணவை மூடுவதற்கு தங்க ஃபாயில் (வரக்) பயன்படுத்தும் வழக்கத்திற்கு வழிவகுத்துள்ளது.

உயிரியல் ரீதியில் தங்கமானது செயலாற்றல் அற்றதாகும். – இது ஜீரண மண்டலத்தை, கிரகிக்கப்படாமல் கடந்துவிடுகிறது. தங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் போது, கூடுமான வரை தூய்மையானதை, அதாவது 22-24 காரட் தங்கத்தைப் பெறுவதை உறுதிசெய்யுங்கள். காரட் மதிப்பு குறைவாக உள்ள தங்க ஃபாயில் தூய்மை குறைவாகவும், உண்பதற்கு குறைந்த பாதுகாப்பு உள்ளதாகவும் இருக்கும். தங்க ஃபாயில் வாங்கும் போது, அதில் உண்ணத்தகுந்தது (Edible) என்ற முத்திரை உள்ளதா, 22-24 காரட்களில் செய்யப்பட்டுள்ளதா என கவனித்து வாங்குவீர்கள் என்றால் அந்த தங்க ஃபாயிலை சாப்பிடுவதில் தீங்கு விளையாது.

உண்ணத்தகுந்த 10 கிராம் தங்கம் மட்டுமே ரூபாய் 30000 அளவிற்கு விலைமதிப்புள்ளதாக இருப்பதால் ஒரு சிலரால் மட்டுமே இதை வாங்கமுடியும். இந்த தங்கமானது உண்ணத்தகுந்ததற்கு இணக்கமானது, உண்ணத்தகுந்தது மற்றும் நச்சுத்தன்மை அற்றது. இது மிக மெல்லிய காகிதத் தாள் போல தட்டையாக்கப்பட்டு, தரம் கெடாத வகையில் எண்ணெய் பாதிப்பில்லாத காகிதத்தாள்களின் நடுவில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மணமற்றது மற்றும் முக்கியமாக உயர்தரமானது அல்லது ஆடம்பரத்துடன் தொடர்புடையது என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. உணவில் கூட்டுப்பொருளாக சேர்க்கப்படும் தங்கமானது ஈ175 என்ற ஈ-எண்ணை (உணவு கூட்டுப்பொருள்) கொண்டது. தங்கத்தை சாப்பிடுவது உயர்தர உணவின் உச்சமாக புரிந்துகொள்ளப்பட்டாலும், இதற்கென்று ருசியோ, இழையமைப்போ கிடையாது மற்றும் இது சாப்பாடு அல்லது பதார்த்தத்திற்கு எந்த மதிப்பையும் கூட்டுவதில்லை.

உண்ணத்தகுந்த தங்கம் என்பது சமீபத்தில் ஏற்பட்ட போக்கு என்பது அவ்வளவு சரியானதல்ல. இது உண்மையில் எகிப்தியர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு கருத்தாக்கம் ஆகும். பண்டைய எகிப்தில் பாராவ் சமாதி நினைவுக்கற்களையும், சர்கோபாகி எனப்படும் செதுக்கப்பட்ட கல் சவப்பெட்டிகளையும் அலங்கரிக்க தங்க ஃபாயில்கள் பயன்படுத்தப்பட்டன. ஏனென்றால், பண்டைய எகிப்தியர்கள் இதனை புனித உணவாகவும், கடவுளுக்குப் பிரியமானதாகவும் கருதினர். தங்கமானது முதன் முதலில், 5000 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்திலுள்ள அலெக்ஸாண்ட்ரியாவில் பயன்படுத்தப்பட்டது சான்றுகளின் வாயிலாக தெரியவருகிறது.

இன்றைய நிலவரப்படி, வெளிநாடுகளில், தங்கமானது ஒரு பேன்ஸி உணவு போக்காக, குறிப்பாக உயர் தர மிஸெலின் ஸ்டார் ரெஸ்ட்ரண்ட்களில் இடம் பிடித்துள்ளதாக தெரிகிறது. தங்க ஃபாயில்களில் புரட்டியெடுக்கப்பட்ட ரிஸோட்டோக்கள், தங்கத் துகள் தூவப்பட்ட பழங்கள் வகையறாவிலிருந்து உண்ணத்தகுந்த தங்கத்தின் 6 அடுக்குகளிலான பர்கர் வரை இந்த உணவுப் போக்கு உலகம் முழுவதும் உள்ள உயர்தர ரெஸ்ட்ரண்ட்களில் இடம்பிடித்துவிட்டது. ஆல்கஹாலில் கூட தங்கமானது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கோல்டன்ஸ்லேகர் போன்ற ஜெர்மானிய மதுபானங்கள், இஸ்பானிய மினுமினுக்கும் ஒயின் மற்றும் காய்ன்ட்ரியு மற்றும் தங்கச் செதில்கள் சேர்த்த கேவியர் வடிவிலான மாலிக்யுலர் மிக்ஸோலாஜி ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.

16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பா கண்டத்தில், மதுபானங்களில், தங்க ஃபாயில் நுண்துகள்கள் இருந்ததாக அறியப்பட்டுள்ளது. உண்மையில், இது ஒரு மருத்துவ நடைமுறையாக அங்கு கருதப்பட்டது.

இந்திய சமையலில் உண்ணத்தகுந்த தங்கத்தின் இணைவாக்கமானது, இனிப்புகள் தவிர, மேலதிகமாக புதுமை படைப்பாக்கம் செய்யப்படாத நிலையில், சூடுபிடித்துவரும் இந்த ஆடம்பர நேர்த்தியான உணவருந்தல் போக்கில், நிரப்ப வேண்டிய இடம் இன்னும் ஏராளமாக உள்ளது. உண்மை தங்கத்திற்கு நிகரான ஜொலிப்பும் கவர்ச்சியும் நிச்சயமாக வேறெதற்கும் இருக்க முடியாது. இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் உண்ணத்தகுந்த தங்கத்தை பயன்படுத்துவீர்கள் என்றால், உண்மையில் உங்களால் இந்த கண்கவர் தங்க அலங்காரங்களை சாப்பிட முடியும்!