Published: 19 பிப் 2020

பண்டிகை மினுங்கல்களுக்கு மத்தியில் தங்கம்

Festive Glitter and Gold

இந்தியா ஒரு வண்ணமயமான பண்டிகைகளின் கதம்பம். நம்முடைய பரவலான நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஏதோ ஒரு பண்டிகைக்கான ஆவலான எதிர்பார்ப்புடனே ஒவ்வொரு மாதமும் காத்திருக்கிறது. இந்தப் பண்டிகைகள் ஒவ்வொன்றும் அதற்கேயுரிய கலாச்சார முக்கியத்துவம், கதை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவின் கலாச்சாரக் கொண்டாட்டங்களுடைய இழையில் ஒரு பொதுவான சரடு ஓடிக்கொண்டிருக்கிறது – தங்கம்.

பண்டிகைகளில் தங்கம்

தங்கத்திற்காண பிணைப்பு இந்திய வரலாற்றில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது, இந்த விலைமதிப்புமிக்க உலோகத்தின் மீதான பாசம் நம்முடைய விழாக்களிலும் சுபமங்கள நிகழ்ச்சிகளிலும் தனக்கான வழியை கண்டுகொண்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த தங்கத்தின் தேவையில் 80% வரையில் நகைகளே இடம்பெற்றிருக்கின்றன என்பதை வைத்தே, இந்தியர்களின் வாழ்வில் தங்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சுலபமாக புரிந்துகொள்ள முடியும்.

தனக்குரிய தெய்வீக நம்பிக்கை மற்றும் பலதரப்பட்ட சமூகங்களிலும் தரப்படுகின்ற காலங்காலமான முக்கியத்துவத்தினால், நாட்டின் நாட்டுப்புறப் பகுதிகளில் ஒரு முதலீடாக கருதப்படுவதற்கும் மேலாக, தங்கமானது நீண்டகால மகிழச்சியை, செல்வச்செழிப்பை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. ஏறக்குறைய எல்லா பண்டிகைகளிலுமே தங்கத்திற்கென்று ஒரு உறுதியான பிணைப்பு இருக்கிறது. இவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம்:

Gold Makar Sankranti

மகர சங்கராந்தி:

இந்திய மாநிலங்கள் முழுவதிலும் கொண்டாடப்படுகின்ற மகர சங்கராந்தி, ஒரு புதிய அறுவடைப் பருவத்தை முன்னறிவிப்பு செய்கிறது. புதிய ஆடைகளுக்கும் மேலாக, மக்கள் இந்த நிகழ்ச்சியின்போது மீதமுள்ள வருடம் முழுவதிலும் செல்வச் செழிப்பையும் நல் அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் தங்கத்தையும் வாங்குகிறார்கள். இந்தப் பண்டிகைத் தேதிக்குப் பிறகான நாட்கள் நல்ல உணர்வுகளை தோற்றுவிக்கும் என நம்பப்படுவதால், புதிய தொடக்கத்திற்கான மங்களகரமான விஷயமாக தங்கத்தை வாங்குவது பார்க்கப்படுகிறது என்பதையே இது அடிப்படையாக கொண்டிருக்கிறது. இயல்பாகவே, இந்தப் பண்டிகைக்கு முன்புள்ள நாட்களில் நகைக் கடைக்காரர்கள் தங்கும் வாங்குவதற்காக கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் பேரங்களை வழங்குவதைக் காணலாம்.

Bihu Gold

பிஹு:

பாரம்பரிய அசாமிய புத்தாண்டை வரவேற்பதற்காக கொண்டாடப்படுகின்ற இந்தப் பண்டிகையின்போது பெண்கள் காப்புகள், வளையல்கள், நெக்லஸ்கள் என்று கவர்ச்சியான தங்க நகை அணிந்திருப்பதைக் காணலாம். இது இந்திய சூரிய நாட்காட்டியின் முதல் நாளைக் குறிக்கிறது, அத்துடன் பரிசுப் பொருட்களாக தங்க-முலாமிட்ட மகுடங்கள் மற்றும் தங்க நாணயங்களைக் கொண்டு நடத்தப்படும் நடனம் மற்றும் இசைப் போட்டிகளுடன் இந்த வசந்தகால பண்டிகைக்கு முன்னறிவிப்பு செய்யப்படுகிறது.

பொங்கல்:

தமிழர்களின் மங்களகரமான நிகழ்வாகிய பொங்கல் என்பது வடக்கத்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகின்ற மகர சங்கராந்தி மற்றும் லோஹ்ரியைப் போன்றதேயாகும், அத்துடன் இது நல்ல அறுவடைக்கான நன்றி செலுத்தலை வெளிப்படுத்தவும் கொண்டாடப்படுகிறது. ‘பொங்கல்’ என்ற தமிழ் வார்த்தைக்கு ‘வேகவைத்தல்’ என்பது பொருளாகும், அத்துடன் இந்தப் பண்டிகையின்போதைய முக்கியமான நிகழ்வே அறுவடை செய்த தானியங்களைப் பயன்படுத்தி அரிசியை வேகவைப்பதுதான். இந்தப் பண்டிகையைக் குறிக்கும் விதமாக மக்கள் தங்கப் பொருட்களை வாங்கி தங்கள் நன்றியை வெளிப்படுத்துவார்கள், அதனை செல்வச் செழிப்பு மற்றும் நல் அதிர்ஷ்டத்திற்கான குறியீடாக வரப்போகும் காலத்திற்கான நல்ல அறுவடை ஆண்டைக் கேட்டும் பிரார்த்தனை செய்வார்கள்.

ஓணம்:

வேறு எந்த மாநிலத்தைக் காட்டிலும் தங்கத்தை மிக அதிகமாக நேசிக்கின்ற கேரளாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளுள் ஒன்று ஓணமாகும். இந்த மிகப்பெரிய கொண்டாட்டத்தின் பின்னுள்ள கதை ஒரு புராணீகத்தை அடிப்படையாக கொண்டதாகும், அதன்படி, மகாபலி அரசனின் ஆட்சிகாலத்தில் கேரளா ஒரு பொற்காலத்தை அனுபவித்து வந்தது, அந்த ராஜ்ஜியமும் செழிப்புற்றிருந்தது. ஓணம் என்பது மலையாளி நாட்காட்டியின் முதல் மாதமான சிங்கத்தைக் குறிக்கிறது, அத்துடன் இந்தப் பண்டிகையின்போது மகாபலி அரசனின் ஆவி கேரளாவின் செல்வச்செழிப்பிற்கா வாழ்த்து வருகைபுரிகிறது என்ற நம்பிக்கையிலும் இது கொண்டாடப்படுகிறது. இந்த நாளின்போது, தங்க நாணயங்கள் பரிசளிக்கப்படுகின்றன, ஊர்வலங்களும் படகுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன, இந்த மங்களகரமான பண்டிகையை குறிப்பிடும் வகையில் பெண்கள் தங்க நகை அணிந்துகொள்கின்றனர்.

அட்சய திருதியை:

இது கடவுள் விஷ்ணுவின் அவதாரமாகிய பரசுராமன் பிறந்தநாளைக் குறிப்பிடுகிறது. இந்து நம்பிக்கையின்படி, இந்த நாளின்போது சூரியனும் சந்திரனும் மிகவும் பிரகாசமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ‘அட்சயா’ என்பது தீர்ந்துபோகாத ஒன்றைக் குறிப்பிடுகிறது, ‘திருதியை’ என்பது மூன்றாம் பிறையைக் குறிக்கிறது, அத்துடன், ஒருவர் நிரந்தரமாக சொந்தம்கொள்ள விரும்பும் எதையும் தொடங்குவதற்கு இந்த நாளை தேர்ந்தெடுக்கிறார், அதனால்தான் பலரும் இந்த நாள் செல்வத்தைப் பெருக்கும் என்பதைக் குறிப்பிடுவதால், அன்றைய தினத்தில் தங்கம், நிலம் போன்றவற்றை வாங்குகின்றனர், அல்லது இந்த நாளில் வியாபாரத்தை தொடங்கவும் செய்கின்றனர். இந்த அட்சய திருதியை , நல்லநாளில், கடைசி நேரத்தில் வாங்க வருகிறவர்களுக்காக நகைக்கடைக்காரர்கள் தங்கள் கடைகளை திறந்து வைத்திருப்பும் உண்டு

Gold Karwa Chauth

கார்வாசாத்:

வடஇந்தியாவில் உள்ள திருமணமான பெண்களால் கொண்டாடப்படுகின்ற இது இந்துக்களின் கார்த்திகை மாதத்தின்போது வருகிறது. இந்த நாளின்போது பெண்கள் தங்களுடைய கணவர்களின் நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுள்களுக்காக விரதமிருந்து, நிலவை நோக்கி பிரார்த்தனை செய்கின்றனர். அவர்களுடைய அர்ப்பணிப்பிற்கு பிரதிபலனாக, அவர்களுடைய கணவர்களால் தங்கள் மனைவிகளுக்கு வழங்கப்படும் பிரபலமான பரிசுகளுள் ஒன்றாக தங்கம் இருந்துவருகிறது.

நவராத்திரி:

இந்தப் பண்டிகை உண்மையில் குஜராத்தில்தான் அனுசரிக்கப்படுகிறது என்றாலும் இப்போது இந்தியா முழுவதிலுமே கொண்டாடப்படுகிறது. சந்திர நாட்காட்டியின்படி இது மங்களகரமான ஒன்பது நல்ல நாட்களைக் குறிக்கிறது, இந்த நாட்களின்போது துர்க்கை தெய்வத்தின் ஒன்பது அவதாரங்களும் வணங்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன. இந்தப் பண்டிகைக் காலத்தின்போது மக்கள் எப்போதுமே தங்க ஆபரணங்கள் வாங்குகின்றனர்.

இந்த ஒன்பது நாட்களிலும் பெங்காலிகள் தங்கத்தை முக்கிய அம்சமாகக் கொண்டு துர்கா பூஜையை மிகவும் பிரமாதமாக கொண்டாடுகின்றனர். துர்கா பூஜையின் கடைசி நாளான தசமியானது மகிஷாசுரன், துஷேசுரன் மீது இந்தக் கடவுள் கொண்ட வெற்றியைக் குறிப்பிட்டு நவராத்திரி கொண்டாட்டம் நிறைவுபெறுகிறது, இதுவே தீமையின் வெற்றிகொண்ட ராமனின் வெற்றியையும் குறிக்கிறது.

தாந்திரியா:

பாரம்பரியமாகவே, தாந்திரியா என்பது தங்கம் வாங்குவதற்கான, முதலீடுகள் செய்வதற்கான மற்றும் புதிய தொழில் முயற்சிகளை தொடங்குவதற்கான மங்களகரமான பண்டிகையாக பிரபலமடைந்துள்ளது, இது விலைமதிப்புமிக்க உலோகங்களின் வடிவில் ஒருவருடைய வாழ்க்கையில் ‘தனம்’ அல்லது செல்வத்தை கொண்டுவருவதற்கான, நல்ல அதிர்ஷ்டத்தின் ஒரு குறியீடாகவும் கருதப்படுகிறது. இந்த மங்களகரமான நாளில் ஒருவருடைய செல்வச்செழிப்பையும் வளத்தையும் அதிகரிப்பதற்காக கொண்டாடப்படுகிறது.

Gold Diwali

தீபாவளி:

இது கடவுள் ராமனை கவுரவிக்கவும், 14 வருட வனவாசத்திற்குப் பின்னர் அயோத்தி மக்களிடத்தில் அவர் திரும்பி வந்ததை குறிப்பிடுவதற்காகவும் கொண்டாடப்படுகின்ற இது குடும்பத்தினருக்கு பரிசளிப்பது மற்றும் ஒன்றாய் கூடியிருப்பது என்பதாக கொண்டாடப்படுகிறது. இது தாந்திரியாவுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் வருகிறது என்பதுடன் இந்த தீபத் திருநாளின்போது, செல்வத்தின் தெய்வமாகிய லட்சுமிக்கும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. குடும்பத்தினர்களால் தங்க நாணயங்கள் பரிசளிக்கப்படுவது மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் இனிப்புக்களை பரிமாறிக்கொள்வது ஆகியவற்றினால் இந்தப் பண்டிகை சிறப்பிக்கப்படுகிறது.

இந்தியர்களின் வாழ்வில் பண்டிகைகள் ஒரு பிரிக்க இயலாத பாகமாவிட்டதைப் போன்றே, தங்கமும் இந்த நாட்டில் ஒரு புதையல் போன்ற தகுதி கொண்டதாக கருதப்படுகிறது. தன்னுடைய காலாதீதமான மற்றும் தவிர்க்கவியலாத இயல்பினால், எல்லா சமூகங்களிலுமே தங்கமானது கலாச்சார மற்றும் பண்டிகை அனுபவத்திற்குள்ளாக தன்னைப் பின்னிப் பிணைந்துகொண்டிருக்கிறது.