Published: 21 ஆக 2017

குபேரனைக் கண்டுபிடித்தல், கடவுள்களின் கருவூலக்காரர்

குபேரக் கடவுள், கடவுள்களின் கருவூலக்காரர், தங்க நாணயங்கள் நிறைந்த பை ஒன்றை எப்போதும் வைத்திருப்பார் என்று உங்களுக்குத் தெரியுமா? குபேரக் கடவுளைப் பற்றி, செல்வத்தின் கடவுளைப் பற்றி மேலும் பல சுவையான தகவல்களை அறிந்துகொள்ள மேற்கொண்டு படிக்கவும்.

  1. தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடித்தவர்

    தங்கச் சுரங்க முறையை கண்டுபிடித்தவர் குபேரக் கடவுள் என்பதால் இன்றும் எந்த திட்டத்தையும் துவங்குவதற்கு முன், சுரங்கப் பணியாளர்கள் குபேரக் கடவுளை வழிபட்ட பின்னர்தான் துவங்குகிறார்கள்.

  2. குபேரனின் தங்கக் குரங்கு

    குபேரனின் கையில் எபோதுமே ஒரு குரங்கு இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கும். எனினும் இது சாதாரண குரங்கல்ல.இது தங்கக் குரங்கு. அதன் வாயைத் திறக்கும்போதெல்லாம் விலை உயர்ந்த கற்கள் கொட்டும் என்று சொல்லப்படுகிறது.

  3. யக்ஷராஜன் (யக்ஷர்களின் அரசன்)

    பல ஆண்டுகளாக குபேரன் சிவனை நோக்கி பிரார்த்தனை செய்ததால், யக்ஷர்கள் மற்றும் யக்ஷினிகளின் அரசனாக குபேரனை சிவன் உருவாக்கினார். யக்ஷர்களும் யக்க்ஷினிகளும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பாதி இறை தன்மை கொண்ட குள்ளமான படைப்புகள்.

  4. லோகபாலா – உலகைக் காப்பவர்

    லோகபாலாக்களில் குபேரனும் ஒருவன். லோகபாலா என்றால் திசைகளின் காவலன் என்று பொருள். இவர் வடக்கு திசையின் காவலனாக உள்ளார். இலங்கை என்ற தங்க நகரம் முதலில் குபேரனால் ஆளப்பட்டது. இதனைப் பின்னர் ஆண்டான் இராவணன். இராவணன் குபேரணை இலங்கையை விட்டு துரத்திய பிறகு, கைலாய மலையில் அழகாபுரி அரசை குபேரனுக்காக விஸ்வகர்மாக கட்டினார். குபேரன் அங்கு தங்கிக்கொண்டு தனது லோகபாலர் கடமையை நிறைவு செய்ய வேண்டும் என்று இது கட்டப்பட்டது.

  5. பகவான் விஷ்ணுவிற்கு பணம் கடன் கொடுத்தவர்

    பகவான் விஷ்ணு பூமியில் பகவான் சீனிவாசனாக அவதாரம் எடுத்தார். இலக்ஷ்மியை (இளவரசி பத்மாவதியாக அவதாரம் எடுத்தவர்) மணந்து கொள்வதற்காக எற்பட்ட செலவுகளை சமாளிக்கவும் தனது சொத்திற்கான சான்றுகளை அளிக்கவும் குபேரனிடம் கடன் வாங்கியிருந்தார். திருப்பதி பாலாஜி என்று அறியப்படும் பகவான் சீனிவாசனின் பக்தர்கள் அளிக்கும் அனைத்து நன்கொடைகளும் குபேரனிடம் வாங்கிய கடனுக்கான வட்டியாக சென்று சேறும் என்று நம்பப்படுகிறது.

  6. தாந்தேராஸ்

    பகவான் குபேரனுக்கு சமர்ப்பணமான பண்டிகை தாந்தேராஸ் . அன்று மக்கள் தங்கம் வாங்குகின்றனர். ஏனெனில் அன்று செல்வத்தை வாங்குதல்- அதாவது தங்கம் அல்லது புதிய பொருட்களை வாங்குதல் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. தந்தேராசின்போது தங்கம் வாங்குவதற்கு முன்பு, தங்கள் வாழ்வில் செல்வத்தையும் வளமையையும் வேண்டி, பக்தர்கள் குபேர இலக்ஷ்மி பூஜை செய்கிறார்கள். உங்களது செல்வத்தை பராமரிக்கவும் பாதுகாக்கவும் குபேர இலக்ஷ்மி பூஜை உதவும் என்று நம்பப்படுகிறது.

Sources:

Source1, Source2, Source3, Source4, Source5, Source6, Source7 Source8 Source9