Published: 20 பிப் 2018

தங்கத்தில் தரும் பரிசு மதிப்பு மிக்கது!

Gold - A worthy gifts for loved ones

பரிசுகள் என்று வரும்போது, குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலானோருக்கு அளிக்கப்படும் பரிசுகளில் தங்கம் தான் முக்கியமானதாகவும், பிரதானமானதாகவும் திகழ்கிறது. பளபளப்பான இந்த மஞ்சள் உலோகம் மதிப்பு மிக்கதாக மட்டுமின்றி மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. உண்மையில், இந்தியாவில் மக்கள் தங்கம் வாங்குவதற்கு மங்களகரமான நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

தாந்தெராஸ், தசரா, ஓணம், பொங்கல் மற்றும் துர்கா பூஜை போன்ற விழா நாட்களை இந்து மத நாட்காட்டிகள் தங்கம் வாங்குவதற்கு உகந்த மங்களகரமான நாட்களாக குறிப்பிடுகிறது, இந்த நாட்களில் தங்கம் வாங்குவது மிகவும் அதிர்ஷ்டகரமானதாகக் கருதப்படுகிறது. இந்து மத நாட்காட்டியின் படி, அக்ஷய திரிதியை ஒரு புதிய விஷயத்தைத் தொடங்குவதற்கான நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்த தினத்தில்தான், மக்கள் புதிய வர்த்தகத்தில் ஈடுபடுவதையும், திருமண விழாக்கள் நடத்துவதையும், பயணத் திட்டங்களை மேற்கொள்வதையும் பார்க்கலாம்.

அக்ஷய திரிதியை அன்று வாங்கும் தங்கக் கட்டிகள், நாணயங்கள், தங்க நகைகள் ஒருபோதும் குறையாத அதிர்ஷ்டத்தைக் குறிக்கின்றன. இந்த தினத்தில், வங்கிகளும் நகைக் கடைகளும் சிறந்த விலைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கி தங்க விற்பனையை தீவிரமாக விளம்பரம் செய்கிறார்கள். தங்கம் வாங்குவது எதிர்காலப் பாதுகாப்பதை உறுதிசெய்தும் என்ற நம்பிக்கையின் காரணமாக அக்ஷய திரிதியை அன்று வாடிக்கையாளரின் தேவை அதிகரிக்கிறது.

இதில் ஆச்சரியம் எதுவுமில்லை, தங்க மோதிரங்களை பரிசளிப்பதன் மூலம் மிகச்சிறந்த இணைப்புகளில் ஒன்று தொடங்குகிறது. திருமண மோதிரங்கள் பாரம்பரியமாக தங்கத்தில் தான் செய்யப்படுகிறது, இது நீடித்த உறவுக்கான உறுதிப்படுத்தலாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு வகை நகைகளை அணிய விரும்பும் பெண்களிடம் இந்த விஷயம் தோல்வி அடைவதில்லை. நாம் அதை எதிர்கொள்வோம்; அவை ஒருபோதும் நாகரிகத்திலிருந்து விலகுவதில்லை.

ஆனால், அதைத் தவிர்த்து இன்னும் முக்கியமாக, தங்கம் தகுதி மற்றும் செல்வச்செழிப்பின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்திய மணப்பெண் அணிந்துகொள்ளும் அடுக்கடுக்கான நகைகளை இதற்குச் சான்றாகப் பார்க்கலாம். ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கொடுக்கப்படும் பொருளாகவும் தங்கம் பார்க்கப்படுகிறது. பரிசுப் பொருள் என்ற வகையில், இப்போது இந்த மங்களகரமான உலோகம் மேலும் எதிர்கால சந்ததியினருக்கும் உதவமுடியும் என்பதால் அதன் மதிப்பு மேலும் அதிகரிக்கத்தான் செய்கிறது.

விசேஷமான நாட்களில் நம்முடைய நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வழங்குவதற்கு இன்னமும் தங்கம் முக்கியமான பரிசாகப் பார்க்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.