Published: 05 செப் 2017

கடவுளின் சிருங்காரம்

இந்திய, அல்லது ஆசிய, சமூகங்களில் உள்ள பெரும்பாலான கலாச்சாரங்களில், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு "இஷ்ட தெய்வம்" உள்ளது, அவை வணங்குவோரால் வழிபடப்பட்டு, பரம்பரையாக பின்பற்றப்படுகிறது. இந்த கடவுள்களையும் தேவியர்களையும் வணங்குவதற்கும் அவர்களின் ஆசிகளைப் பெறுவதற்கும், பெரும்பாலான கலாசாரங்களில் அவர்களின் சிலைகளை வீட்டிலோ அல்லது வியாபார ஸ்தாபனத்திலோ வைத்துக்கொள்கின்றனர்.

இந்தத் தெய்வங்கள், நாள்தோறும், பூஜையின் பொழுது சுத்தம் செய்யப்படுகின்றன; தங்க ஆபரணங்களால் அலங்கரிப்படுகின்றன. இந்தச் சடங்கின் பின்னால் பல்வேறு புராண மற்றும் புனிதமான நம்பிக்கைகள் உள்ளன:

  • கடவுளைப் புகழ்ந்து பாடுதல் மற்றும் அன்பைப் பொழிதல் ஆகியவற்றை முன்னிட்டு மக்கள், குறிப்பாக, இந்துக்கள் தங்களுடைய கடவுள் தேவியரை தங்க ஆபரணங்களால் அலங்கரிக்க முனைகிறார்கள்.
  • நீங்கள் கடவுளை எவ்வளவு அலங்கரிக்கிறீர்களோ, அதே அளவிற்கு கடவுள் உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார் என்று பொதுவாக நம்பப்படுகிறது.
  • தங்களுடைய கடவுளை அழகான ஆபரணங்களுடன் அலங்கரிக்கும்பொழுது, வணங்குபவர்கள் தங்கள் கடவுளை அலங்கரிப்பதாக உணர்கிறார்கள்.
  • நாம் சொற்பிறப்பியல் குறித்து பார்க்கும் பொழுது, சமஸ்கிருதத்தில் சிருங்கார் என்றால் 'அன்பு' என்று பொருள்படும், அது பெரும்பாலும் அழகுக்கான குறியீடாகக் கருதப்படுகிறது. அதே காரணங்களுக்காக, நாம் நமது சிலைகளை அலங்கரிக்கும் போது, அது கடவுள் மீதான நம் அன்பைக் குறிக்கிறது.

உங்களைச் சுற்றிப் பார்த்தால், இந்து மதக் கலாச்சாரத்தில் கடவுள்களையும் தேவியர்களையும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கிறார்கள். ஏனெனில் பண்டைய காலத்தில் இருந்து, மஞ்சள் உலோகமானது மிகவும் விலையுயர்ந்த உலோகமாகக் கருதப்படுகிறது. எனவே, கடவுளின் மீதான பக்தி உணர்வு என்று வரும் போது, பக்தர்கள், விக்கிரகங்களை அழகுபடுத்தும் உலோகத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்ய மாட்டார்கள்.

ஆபரணங்களானது நமது அன்பான தெய்வங்களுக்கு அதிகப்படியான அலங்காரத்தையும், கவர்ச்சியையும் அளிக்கிறது. இந்து கலாச்சாரத்தின் பண்டைய நம்பிக்கையின்படி, தங்கத்தால் செய்யப்பட்ட இந்த ஆபரணங்களானது அதற்கான தனிப்பட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பின்வருபவை இந்த அலங்காரங்களின் முக்கியத்துவத்தைச் சுற்றி உள்ள சில நம்பிக்கைகள் ஆகும்:

  • மாங் டீக்கா: மாங் டீக்கா என்பது மூன்றாவது கண்ணின் ஒரு பிரதிநிதி என்றும், மற்றும் ஆன்மிக சக்தியை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது என்றும் புராணக்கதை கூறுகிறது.
  • மூக்கு வளையம்: மூக்கு வளையம் என்பது சக்தி மற்றும் துணிச்சலுக்கான அடையாளமாக நம்பப்படுகிறது, அதனால் தான் மகா சக்தி தெய்வமானது எப்பொழுதும் பெரிய மூக்கு வளையத்தை அணிந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
  • முகுத்: முகுத் அல்லது கிரீடம் என்பது 'ஆட்சி' அல்லது 'படைப்பாளர்' என்பதைக் குறிக்கிறது. எனவே, இந்த அழகிய உலகின் படைப்பாளர்களாக நம் கடவுளும் தேவியரும், முகுத் மூலம் ஆராதிக்கப்படுகிறார்கள்.
  • ஹார் அல்லது நெக்லஸ்: 'இந்து' பாரம்பரியத்தின்படி, ஹார் என்பது 'மரியாதைக்குரியவரின்' வெற்றிக்கான ஒரு சின்னம் ஆகும். நவீன இந்தியாவில் கூட, ஹார் என்பது பொதுவாக மரியாதைக்கான சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதே காரணத்திற்காக, சர்வவல்லமை பொருந்திய கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஹார் உடன் அலங்கரிக்கப்படுகிறார்கள்.

இந்தக் காரணங்களானது, பல தலைமுறைகளாக கிட்டத்தட்ட அனைத்து இந்து மதக் குடும்பங்களிலும் பரவலாக பின்பற்றப்பட்டு வரும் கடவுள்களின் மற்றும் தேவியர்களின் சிருங்காரத்தை வரையறுக்கின்றன. பக்தர்கள் தங்களுடைய சிலைகளைப் பொதுவாகத் தங்கத்தால் அலங்கரிக்கிறார்கள், ஆனால் அவர்களின் நிதி நிலைமை அவர்களைக் கட்டுப்படுத்துவதால், கடவுள் மீதான தங்களின் அன்பைக் காட்டுவதற்கு மலர்களை அடுத்த சிறந்த வழியாக கொண்டுள்ளனர்.